Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈக்வாடர் நாட்டின் தீவான கலாப்பகோஸ் தீவில் அமைந்திருக்கும் கலாப்பகோஸ் தேசியப் பூங்காவில் நூறு வயதான ஒரு அரிய ஆமை இறந்து விட்டதாக அந்த தேசியப் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னந்தனி ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட இந்த அரிய ஆமை, அதன் இனத்தில் கடைசி ஆமையாகக் கருதப் படுகிறது. இதன் வயது 100 இருக்கலாம் என்று விஞ் ஞானிகள் கணிக்கின்றனர். இதன் மரணத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய பிரேதப் பரி சோதனை நடத்தப்படும் என இந்தப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த பூங்கா ஊழியர் பட்டியில் அது இறந்து கிடந்ததைக் கண்டார். இதன் உட்பிரிவு வகை ஆமைகள் சுமார் 200 ஆண்டுகள் உயிருடன் வாழும் என்பதை வைத்துப் பார்க்கையில், லோன்சம் ஜார்ஜ் ஒரு இளம் வயது ஆமை என்றே கூறலாம். ஆமை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

லோன்சம் ஜார்ஜ் முதலில் 1972இல் கேலப்பகோஸ் தீவான பிண்டாவில் ஒரு ஹங்கேரிய நாட்டு விஞ் ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதெல்லாம், இந்த வகை ஆமைகள் அழிந்து விட்டதாகவே பலரும் கருதியிருந்தனர். லோன்சம் ஜார்ஜ் இந்த தேசியப் பூங்காவின் ஆமை விருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க் கப்பட்டது.

சுமார் 15 வருடங்கள் ஒரு பெண் ஆமையோடு சேர்ந்து வாழ்ந்தது. லோன்சம் ஜார்ஜின் மரணத்தை அடுத்து, அந்த பிண்டோ உட்பிரிவு ஆமைகள் இல்லாதொழிந்து விட்டதாக கலாப்பகோஸ் தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்