
விண்வெளியில் உள்ள கருந்துளைகளை ஆய்வு செய்ய எக்ஸ்ரே டெலஸ்கோப்பை விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானி ராமன் ஆராய்ச்சி இன்ஸ்டி டியூட் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத் திற்கு பொலிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது இது குறித்து பொலிக்ஸ் தலைவர் பிஸ்வாஜித் பவுல் கூறியதாவது:
நாங்கள் டெலஸ்கோப்பை நிறுவுகிறோம். விண் வெளியில் டெலஸ்கோப்பை நிறுவ இஸ்ரோ செயற்கை கோள் மூலம் எடுத்து செல்கிறது. இது நிறுவபட்டால் விண்வெளியில் நிறுவபட்ட முதல் எக்ஸ்ரே தொலை நோக்கியாக கருதப்படும் . நாங்கள் திட்டத்தை இஸ்ரோவிடம் சமர்பித்தோம் நிதியை பெற்றோம். உபகரணங்கள் இந்த ஆண்டு தயாராகி விடும் .
இஸ்ரோ அதை செயற்கைக்கோளில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பும் .மிக அதிகமான அறிவியல் தகவல்கள் கருந்துளைக்குள் புதைந்து கிடக்கின்றன. ஈர்ப்பு சக்தி காந்தவியல் மற்றும் ஜெம்ஸ் குறித்து ஆராய்ச்சி செய்ய 2014 இல் எக்ஸ்ரே தொலைநோக்கியை விண்வெளிக்கு நாசா அனுப்புகிறது.அவர்களுக்கு முன் நாம் நிறுவ கடுமையாக போட்டியிடுகிறோம்.
ஆனால் நம் இலக்கை அடைந்த பிறகுதான் அவர்கள் திட்டம் தொடங்க உள்ளது, ஆனால் அவர்கள் திட்டம் அதிக பொருளாதார செலவு உடையது நமது திட்டம் செலவு குறைவு. - இவ்வாறு அவர் கூறினார்.