Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், மார்ச் 27- பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார் கள் அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின் பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாக்கின்றனர். அவர் கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். ஜார்ஜ் டவுன் பல் கலைக்கழக மெடிக்கல் சென்டரின் விஞ்ஞானி கள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு நடத்தி னார்கள். அப்போது அதில் இருந்த பி.டி. என்.எப். என்ற மரபணு உடைந்து அது சாப்பிட் டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்லவிடாமல் தடுக் கிறது. அதனால்தான் பசி இல்லாவிட்டாலும் எலி தொடர்ந்து எதை யாவது தின்று கொண்டே இருந்தது. அதன் மூலம் உடல் எடை பெருத்து கொழுத்து விட்டது. இதை மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ள னர். எலிகளின் உடலில் நடப்பது போன்றே மனி தர்களின் உடம்பிலும் இதுபோன்ற மாற்றங் கள் நடக்கலாம் என கருதுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து சாப்பிட்டு உடல் குண்டாகி விடு கிறது. இந்த பி.டி. என்.எப். மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளி டம் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்