எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு!

உலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) வேகமாக நகர்ந்து வ   ருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித் துள்ளனர். பூமிப் பந்தின் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881ஆம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போ திருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். ஆனால், இந்த வேகமானது கடந்த சில ஆண்டு களாக மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது, வட காந்தப் புலம் தற்போது ஆண்டுக்கு, 30 முதல் 40 கி.மீ வரை இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள், அடுத்த ஒரு வருடத்திற்கான துருவங்கள் பற்றிய புதிய ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது, வட காந்த துருவம் கடந்த ஒரு வருடத்தில் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம் படுத்த வேண்டும். வட காந்த துருவம் நகர்வதால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் நிலையாக இருக்கும் வழிகாட்டிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புல நகர்வால் வட துருவத்திற்கு அருகே இருப்பவர் களுக்கே லேசான பாதிப்பு ஏற்படும். அதற்குத் தள்ளி இருக்கும் நாடுகள், இப் போதைக்கு இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூமியின் தற் போதுள்ள இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner