எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு மிகையாகக் கலந்தால், அது கேடுகளை விளைவிக் கிறது. எனவே, கார்பன் டை ஆக்சைடை காற்றி லிருந்து நேரடியாக உறிஞ்சி, பயனுள்ள பொருட்களாக மாற்றும் பல தொழில்நுட்பங்கள் வரத்துவங்கியுள்ளன.

சுவிட்சர்லாந்திலுள்ள, ‘கிளைம் வொர்க்ஸ்’ நிறுவனம், காற்றிலுள்ள கரியமில வாயுவை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக் கியுள்ளது. காற்றைக் கெடுக்கும் பெரிய தொழிற் சாலைக்கு அருகே உள்ள மாசடைந்த காற்றை, ராட்சத விசிறி களைக் கொண்டு உறிஞ்சி, விசேஷ வடிகட்டிகள் மூலம், கார்பன் டை ஆக்சைடை மட்டும் பிரித் தெடுத்து, வாயு வடிவிலேயே விற்பனை செய்கிறது.

இது யாருக்கு பயன்படும்? சோடா தயாரிப் பாளர்கள், சோடா பானத்தில் நுரைபொங்கச் செய்ய, பானத்துடன் அதிக அழுத்தத்தில் கரியுமில வாயுவைத்தான் சேர்க்கின்றனர்.  இதை, அதே சுவிட் சர்லாந்தில், கோகோ கோலாவை பாட்டிலில் அடைக் கும் ஹெலெனிக் பாட்டிலிங் கம்பெனி, பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தத் துவங்கிஉள்ளது.

ஆனால், இதிலும் ஒரு சிக்கல். பானத்தின் மூடியைத் திறந்ததும், மீண்டும் அதே கரியுமில வாயு, காற்றில் கலக்கத்தான் செய்யும். அதற்கு, கிளைம் வொர்க்ஸ் மற்றும் ஹெலனிக் நிறுவனங்கள் மாற்று வழி யோசிக்குமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner