எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது எதிர்பார்த்தது தான். விரைவில் அமெரிக் காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆறு சக்கர ரோபோக்கள் உணவு வினியோகம் செய்யவிருக் கின்றன.

ஸ்டார்சிப் டெக்னாலஜீஸ் உருவாக்கியுள்ள இந்த ரோபோக்களை, உணவு டெலிவரிக்கு பயன்படுத்த, அப் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள உணவகங்கள் பல ஒப்புக்கொண்டுள்ளன.

அவற்றின் உணவுப் பட்டியலைக் கொண்ட செயலி மூலம் வேண்டியதை மாணவர்களும் பேராசிரியர்களும் தேர்ந்தெடுத்தால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு, இந்த ரோபோக்கள் உணவுடன் வந்துவிடும்.

டெலிவரிக்கு, 150 ரூபாய் கட்டணத்தையும், உணவுக்கான கட்டணத்தையும் செயலி மூலம் செலுத்தினால், பெட்டி வடிவிலிருக்கும் ரோபோவின் மூடியைத் திறந்து, உணவை எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது, நம்மூரில் ‘ஸ்விக்கி’காரர்கள் செய்வதை, ஸ்டார்சிப்பின் ரோபோக்கள் செய்யப்போகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner