எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆப்ரிக்காவின் வனப் பகுதிகளில், 15 நிமிடங் களுக்கு ஒரு யானை கொல்லப்படுகிறது. இப்படியே போனால், சில ஆண்டுகளில் அங்கு யானைகளே இல்லாமல் போய்விடும். வன உயிர்களை, வனக் கொள்ளையரிடமிருந்து காப்பாற்ற, ‘ரிசால்வ்’ என்ற தொண்டு அமைப்பு, உயர் தொழில்நுட்பத்தை நாடியிருக்கிறது.

‘இன்டெல்’ தயாரித்துள்ள, ‘மோவிடியஸ்’ என்ற சில்லையும், நவீன செயற்கை நுண்ணறிவு மென் பொருளையும் பயன்படுத்தி, ‘டிரெய்ல் கார்டு’ என்ற கேமரா பட்டை ஒன்றை, ரிசால்வ் அமைப்பு உருவாக்கியுள்ளது.

கேமரா உள்ள இந்த பட்டையை காட்டு மரங்களில், மனித உயரத்தில் கட்டி வைத்துவிட்டால் போதும். மனித நடமாட்டம் இருந்தால், டிரெய்ல் கார்டு படம் பிடித்து, ஆப்ரிக்க வனத்துறை மய்யத்திற்கு, எச்சரிக்கை அனுப்பும்.

இக்கருவியின் விலை குறைவு என்பதால், பல நுறு கருவிகளை எளிதில் பொருத்தி விட முடியும் என்கிறது ரிசால்வ். இக்கருவிக்கு ஓராண்டு வரை தேவையான மின்சாரம், இக்கருவியிலேயே இருக்கும். 2,000 வனக் காவலர்களே உள்ள செரங் கெட்டி விலங்குகள் சரணாலயத்தில், டிரெய்ல் கார்டு கருவிகள் சோதனைக்காக பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில், ஆசிய வனப் பகுதிகளுக்கும் இக்கருவியை அனுப்ப, ரிசால்வ் திட்டமிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner