எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடுக்கு மாடிக் கட்டடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற காற்றாலை ஒன்றை இங்கிலாந்தின் லங்காஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

‘ஓ விண்ட் டர்பைன்’ என்ற இந்த காற்றாலையின் வடிவமைப்பு, வித்தியாசமாக இருப்பதால், காற்று மேல், கீழ் ஆகிய பக்கங்களிலிருந்து மட்டுமின்றி, நாலாத் திசையிலிருந்து வீசினாலும் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

நகர்புற கட்டடங்களின் மேற்புறத்தில், மிகவும் சக்திவாய்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். ஆனால், அருகே உள்ள பிற கட்டடங்கள்  அந்த காற்றின் திசையை மடைமாற்றியபடியே இருக்கும். இதனால் காற்றோட்டம் பல திசைகளிலிருந்தும் ஏற்படும்.

இந்த நகர்ப்புற காற்றோட்டத்தின் தன்மையை வைத்தே இதை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். வேகமான காற்று எந்தப்பக்கமிருந்து வந்தாலும், அதை உள்வாங்கி டர்பைனை சுழற்றும்படி ஓ விண்ட் டர்பைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் சர்வதேச விருதான ‘ஜேம்ஸ் டைசன் விருது’, ஓ விண்ட் டர்பைனுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner