எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது.

வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும்.

2020ஆம் ஆண்டின் மய்யப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப் போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும். இந்தக் குழல் ஆராய்ச்சிக்காக 2023ஆம் ஆண்டு புவிக்கு வந்து சேரும்.

ரோபோட்டிக் முறையில் இயங்கும் இந்த ஆய்வு வாகனம் 3.12.2018 அன்று பென்னுவை நெருங்கிய நிலையில், அதன் உந்து விசை இயக்கப்பட்டது. இதையடுத்து, ஒசிரிஸ்-ரெக்ஸ் பென்னு விண் கல்லில் இருந்து குறைந்தபட்சம் 7 கி.மீ. தொலைவில் அதன் திசைவேகத்துடன் ஒத்திசைந்து பயணிக் கத் தொடங்கியது.

அடுத்த சில நாள் களில் ஓசிரிஸ்-ரெக்ஸ் பென்னுவுக்கு அருகில் இன்னும் நெருங்கிச் சென்று முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ளும்.

விண்கல்லின் வடதுருவத்தைக் கடந்து மூன்று முறையும், பிறகு அதன் மய்யக் கோட்டுக்குச் செல்லும், பிறகு தென் துருவத் துக்கு செல்லும் என்று கூறியுள்ளார் இந்தப் பயணத்தின் ஃப்ளைட் நேவிகேட்டர் கோரலி ஆதம்.

இதன் மூலம் பென்னுவின் நிறை, ஈர்ப்பு ஆகியவற்றை ஆய்வு வாகனம் மதிப்பிடும். இந்த மதிப்பீடுகள் பிறகு இந்த ஆய்வு வாகனம் விண்கல்லை சுற்றி வருவதற்கான திட்டத்தை வகுக்கப் பயன்படும்.

அப்போது விண்வெளி ஆய்வு வாகனங்கள் இதுவரை சுற்றிவருவதிலேயே மிகச் சிறிய பொருளாக பென்னு இருக்கும். ஓராண்டு காலத்தில் இது நடக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner