எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி - மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். அவர்களிலிருந்து 2 மாணவிகள் அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருவர் புதுடில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவி. பெயர் இஷிதா மங்களா. மற்றொருவர் தமிழ்நாட்டு மாணவி பானுப்ரியா. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, காளாச்சேரியின் மாணவி. 13 வயதுச் சிறுமி, 8 -ஆம் வகுப்பு படிக்கிறார்.

விருதாளர்களுக்கு விருதுக்கான சான்றுடன், தலா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சமீபத்தில் புதுடில்லியில் விழாவில், சமூகசேவை அமைப்பின் உயரதிகாரி அனுப் பாப்பியால் - சாய்னா நேவாலிடமிருந்து விருது பெற்றார் பானுப்பிரியா.

விருது பெற்ற, தமிழ்நாட்டு மாணவி பானுப்பிரியா, சிறு வயது முதலே, தனது பள்ளி மாணவியர் மற்றும் ஊராரிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காகத் தனது காளாச்சேரி கிராமத்தில் சிறுவர், சிறுமியரை ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டு ஊர்வலம் நடத்தியும், தெருவுக்கு தெரு வீதி நாடகம் போட்டும் தனது இலக்கை எட்டிப் படிக்கத் திட்டமிட்டுத் தொண்டாற்றி வருகிறார்.

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு அங்குள்ள மருத்துவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து மருந்து முகாம்களை நடத்தி, கிராமமக்கள் கவனக் குறைவாக உள்ள நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்களும் ஊரின் படித்த இளைஞர்களும் யோசனைகளை வழங்கி உதவி வருகின்றனர். மேலும், கிராமத்துப் பெண்களுக்குத் தேவைப்படும் மாதவிலக்குக் கால ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்கிறார். அச்சமயங்களில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்தும் தகுந்த விழிப்புணர்வை மேற்கொள்ள வழிவகை செய்து தருகிறார். இவரது இந்தத்தொண்டால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

மொத்தத்தில், பானுப்பிரியாவின் தன்னலமற்ற தொண்டின் காரணமாக அந்தக் காளாச்சேரி கிராமமே மற்றக்கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டி வருகிறது.

துப்பாக்கி சுடுவதில் சாதனை!

உலகக் கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியின் முடிவில், 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில், தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

அணிகளுக்கான போட்டியிலும், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டாவுடன் இணை சேர்ந்து இளவேனில் வாலறிவன், தங்கம் வென்றி ருக்கிறார். இளவேனிலுக்கு பதினெட்டு வயதாகிறது. கடலூரை பூர்விகமாகக் கொண்டிருக்கும் இளவே னில், பெற்றோர்களுடன் வசிப்பது அகமதா பாத்தில்.

அப்பா வாலறிவன் ருத்ரபதி. ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவ ராகப் பணிபுரிகிறார். அண்ணன் ராணுவத்தில் கேப்ட னாக இருக்கிறார்.

அவர் விடுமுறையில் வரும்போது துப்பாக்கிகளை பற்றி சொல்வார். ஒருமுறை அப்பா அகமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவ துப்பாக்கி சுடும் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பயிற்சி பெறுபவர் களைக் கண்டதினால் துப்பாக்கி ஏந்த எனக்கும் ஆசை வந்துவிட்டது. 2013இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன்.

தொடக் கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டேன். சீராக எனது வெற்றி புள்ளிகள் அதிகரித்தன. அதனால் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.

சொந்தமாக துப்பாக்கி வாங்கியது 2016 இல் தான். ஜெர்மனியில் நடந்த 28ஆவது இளையோர் உலகப் போட்டியில் எனக்கு இருபத்தெட்டாவது இடம் கிடைத்தது.

சென்ற நவம்பரில் நடந்த பயிற்சியின் போது சர்வதேச சாதனையால் 252 .1 புள்ளிகளை என்னால் எடுக்க முடிந்தது.

அதையடுத்து டிசம்பரில்   நடந்த போட்டிகளில் ஒரு பிரிவில் தேசிய வாகையராக வந்தேன். எனக்கு கிடைத்த வெற்றி புள்ளிகள் புதிய தேசிய சாதனையாக மாறியது.

சென்ற ஆண்டு முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டு சிரமப்பட்டேன். காலும் வீங்கி விட்டது. பல பயிற்சிகள் செய்து போட்டியில் கலந்து கொண்டேன். சிட்னியில் நான் எடுத்த மொத்த புள்ளிகள் (631 .4) ஒரு உலக சாதனையாகும். பயிற்சிக்காக சென்னைக்கும், புனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி யதிருக்கிறது.

ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படித்து வருகிறேன். ஓய்வு கிடைப்பது நான் பெற் றோருடன் அகமதாபாத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதுதான்’ என்கிறார் இளவேனில் வாலறிவன்.

தங்கப் பதக்கங்கள் பல வென்ற மனுபாக்கர்!

அரியானா மாநிலத்தில் “கோரியா’ கிராமத்தில் “யுனிவர்சல் மேல்நிலைப் பள்ளி’ மாணவ மாணவியர் பெரும்பாலாரின் கையில் சின்னதும் பெரியதுமாய் துப்பாக்கி.  குறி பார்த்து சுடும் போட்டிக்காக இந்த மாணவ மாணவிகள் துப்பாக்கியுடன் விளையாடு கிறார்கள்.  துப்பாக்கியை கையில் பிடிக்க இவர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது அந்தப் பள்ளி மாணவி மனு பாக்கர். பதினாறு வயதில் “பிளஸ் ஒன்’ படிக்கும் மாணவி.

மனு பாக்கர் தனது பதினாறாவது வயதில் குறி நோக்கி துப்பாக்கி சுடுவதில் சர்வதேச சாதனை படைத்திருக்கிறார்.

சென்ற (2018) மார்ச் மாத தொடக்கத்தில் மெக்சி கோவில் நடந்த உலக கோப்பை மூத்தோருக் கான துப்பாக்கி சுடுதலில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் ஒற்றையர் போட்டியில் மனுபாக்கர் தங்கப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுவதில் உலகப் போட்டியில் பதினாறு வயதில் தங்கப் பதக்கம் பெறும் முதல் வீராங்கனை மனுதான்.

அதுவும் உலகப் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் பல பெற்றிருக்கும் அனுபவசாலிகளான மெக்சிகோவின் அலெஜாண்ட்ரா ஸவாலா, ஃபிரான்ஸ் ஸின் செலின் கோபேர்வில், கிரீஸ்ஸின் அன்னா கோரக்காகி போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி தங்கப்பதக்கத்தை மனுபாக்கர் பெற்று வந்திருக்கிறார். தொடர்ந்து, பத்து மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் சேர்ந்து இந்தியாவுக்காக இரண்டாவது தங்கப் பதக்கமும் மெக்சிகோவில் பெற்றார்.

2017இல் டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய போட்டிகளில் மனுபாக்கர் மின்னத் தொடங் கியிருந்தார். பத்து மீட்டர் தூர துப்பாக்கி சுடுவதில் தேசிய சாதனைகளை உருவாக்கிய ஹீனா சித்துவை மனு பாக்கர் வெற்றி கண்டு புதிய தேசிய சாதனை யையும் நிகழ்த்தினார். துப்பாக்கி சுடுவதில் பல பிரிவுகளில் நடந்த போட்டிகளில், பதினைந்து தேசிய பதக்கங்களை மனு பாக்கர் வென்றார். அதில் ஒன்பது தங்கப் பதக்கங் களும் அடங்கும்.

தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்து வரும் இளையோர் உலகப் போட்டியில், கலப்பு இரட் டையர் பிரிவில், தனி ஆளாகக் கலந்து கொண்ட போட்டியிலும் கிடைத்திருக்கும் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் மனுபாக்கரின் வெற்றி வலம் தொடங்கியுள்ளது.

திறமையுள்ள மனுபாக்கரை 2020 ஒலிம்பிக்குக்கு தயார் செய்ய வேண்டும் என்று துப்பாக்கி சுடும் வட் டாரங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner