எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தியாவில் நடைபெறும் ஒரே பனிச்சறுக்கு கார் பந்தயத்தில் முதன்முதலாக ஒரு பெண் பங்கேற்றுள்ளார். பல்வேறு சாகசங்களும் சவால்களும் நிறைந்த பனிப் பாதையில் கார் பந்தயத்தில் இதுவரை ஆண்களே பங்கேற்றுள்ளனர். இரண்டு நாள்கள் காஷ்மீரில் இந்தப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

பனிச்சறுக்கு கார் பந்தயத்தில் பெண்ணா? என்று அனைவரும் புருவம் உயர்த்துகின்றனர்.

காஷ்மீரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷர்மீன் முஸ்தாக். 40 வயதாகும் இவர் ஒரு மருத்துவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஷர்மீன் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். “ஒரு வழியாக போட்டியில் பங்கேற்றுவிட்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு மூழ்கிவிடுமோ என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். நல்லபடியாக அது நிறைவேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறேன். காஷ்மீரில் நடக்கும் கார் பந்தயத்தை எப்போதும் பார்வையாளராக இருந்து பார்ப்பதுண்டு. அப்போது பந்தயக்காரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பேன். தற்போது எனது பெயரையும் இந்தப் போட்டிக்கு பதிவு செய்து பங்கேற்றதில் பெருமையாக உணர்கிறேன்.

காஷ்மீரியப் பெண்களுக்கு நான் ஓர் உத்வேகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகளைத் தாண்டி காஷ்மீர் பெண்கள் வெளியே வர வேண்டும். உங்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதனைத் தவறவிடக் கூடாது. வெற்றி, தோல்வி என்பது அடுத்த கட்டம். திறமையை வெளிப்படுத்துவதே முக்கியம். உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க தடைகளைத் தாண்டி வெளியே வாருங்கள்’’ என்றும் அறைகூவல் விடுத்துள்ளார் இந்த மருத்துவர்.

“யாருக்குத் தெரியும் வரும்காலத்தில் காஷ்மீர் பெண்கள் நாங்கள் ஒரு குழுவாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்‘’ என்று கட்டைவிரல் உயர்த்தி காட்டுகிறார் ஷர்மீன்.

உலக சுகாதார நிறுவனக் காலண்டரில் இந்தியப் பெண்!

உலக சுகாதார நிறுவனத்தின்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதுவும் ஒரு பெண். யார் அவர்? மிகப் பெரிய நடிகையோ, பிரபலமோ அல்ல, இமாச்சலப் பிரதேசத்தில் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றும் கீதா வர்மா தான், உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பெற்றுள்ளார்.

கீதாவின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தான் இந்த உயரத்தை எட்ட வைத்துள்ளது என்கின்றனர் உடன் பணிபுரிவோர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாப்நாட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா வர்மா. சுகாதாரப் பணியாளரான இவர், தான் பணியாற்றும் பகுதிகளில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசிகளை அங்குள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் வழங்கியுள்ளார். மணல்வாரி அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வைரஸால் பரவுகின்றன. இந்த நோய் தாக்கும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதன் காரணமாக சுவாசப் பிரச்சினை, மூளையில் பாதிப்பு, காதில் சீழ்வடிதல் போன்ற நிரந்த பாதிப்புகள் ஏற்படும். ரூபெல்லா என்பதும் வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய நோய்தான். ஆனால் இந்த நோய் தாக்கிய வர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாலும். சளி, காய்ச்சல், இருமல் என்ற சாதாரண அறிகுறியோடு இந்த நோய் போய்விடும். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும் போது, கருவில் உள்ள குழந்தைகளுக்கு இருதயம், கல்லீரல் பாதிக்கப்படும். சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தடுப்பூசி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த தடுப்பூசியைத் தான் தான் பணியாற்றும் பகுதியில் 100 சதவீதம் விநியோகித்துள்ளார் கீதா வர்மா. அதே போன்று தடுப் பூசிக்கான முகாம்களிலும் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி யுள்ளார். இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதியில் ஒவ்வொரு பகுதியாகப் பயணித்து தடுப்பூசிகளை தக்க சமயத்தில் வழங்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. மேடு, பள்ளம், பள்ளத்தாக்கு, பனி படர்ந்த சாலைகள் என பல சவால்களைச் சந்தித்து மிகவும் அர்ப்பணிப்புடன் தன் பணியைச் செய்து வருகிறார் கீதா.

சாதனைகள் என்பது யாவர்க்கும் சாத்தியமே!
தையல் கலையில் அசத்தும் மாற்றுத்திறனாளிப் பெண்!

சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்த அருள்மணி இணையர்களின் மகளான இவர், பிறவிலேயே பெருமூளைவாதம் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதனால், உடல் வளர்ச்சி என்பது அவருக்கு எட்டாக்கனியாகி விட்டது. பள்ளிப்பருவத்தில் சக மாணவர்களின் கேலிப்பேச்சு, மனதை துளைக்க துவண் டவர், வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.

உடலில் குறை என்பது நான் விரும்பி பெற்ற வரமல்ல. எனவே, அதை பொருட்படுத்த தேவையில்லை என்று முடிவு செய்தவர், தற்போது தனது தன்னம்பிக்கையால் தையல் கலையில் தேர்ந்து, பிறருக்கு நம்பிக்கையூட்டும் நாயகியாய் ஜொலிக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளும், நோய்களால் பாதிக்கப் பட்டவர் களும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் தயவில் வாழ வேண்டும் என்பது நமது சமூகத்தில் ஒரு எழுதப்படாத விதி.

எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு, அதன் மூலம் பெற் றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். சிரமப்படுபவர்களுக்கு  முன்னுதாரணமாக  இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று மனதில் தோன்றியது. அதற்காக நான் தேர்வு செய்தது தான் தையல் கலை. காமராஜர் காலனியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தில் சேர்ந்தேன். மூன்றரை மாதம் தையல் கலையில் பயிற்சி பெற்றேன்.

தற்போது ஆண்கள் சர்ட், சுடிதார், பிளவுஸ் என்று எண்ணற்ற ஆடைகளை வடிவமைக்க கற்றுக் கொண்டேன்.

விரைவில் தையலகம் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். ஆண்களுக்கு உத்தியேகம் புருசலட்சணம் என்பார்கள். பெண் களுக்கு வேலைவாய்ப்பு என்பது என்னைப் பெறுத்தவரை வாழ்க்கை. சுயமாக ஒரு தொழிலை கற்றுக் கொண்டதால் புதிய பிறவி கிடைத்தது போல் உணர்கிறேன். எனவே மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள், என்று நிறைவு செய்கிறார் பூர்ணிமா.

ஆயத்த ஆடை பயிற்சி மய்யத்தின் பொறுப்பாளர் நாகராஜ் கூறுகையில், கடும் சிரமங்களுக்கு இடையில் பூர்ணிமா நம்பிக்கையோடு மய்யத்தில், பயிற்சி பெற வந்தது வியக்க வைத்தது. இதனால் அவருக்காக தையல் மிசினில் சில மாற்றங்களை செய்தேன்.

அவரால் வழக்கமான இருக்கையில்  அமர்ந்து பயிற்சி பெற முடியாது என்பதால், பிரத்யேகமாக ஒரு இருக்கையை வடிவமைத்தேன்.

மிகுந்த அர்ப்பணிப் புடன் பயிற்சி பெற்றவர், தற்போது  அனைத்து வகை உடைகளையும் அற்புதமாக தைத்து  வருகிறார்.  எனக்கு தெரிந்து  இந்தியா விலேயே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு, தையல் கலையில் சாதனை படைக்கும் ஒரே பெண் பூர்ணிமா தான். இவர் தைக்கும் துணிகள் அனைத்தும் அத்தனை நேர்த்தியாக உள்ளது.

இங்கு பயிற்சி பெறும் 60 பேரும், அவரைப் போல தைக்க வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளனர்.

இது தான் அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவரை முன்னுதாரணமாக கொண்டு, யார் எங்கள் மய்யத்திற்கு வந்தாலும் எங்களால் இயன்ற உதவிகளை செய்து பயிற்சி அளிக்க காத்திருக் கிறோம், என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner