எழுத்துரு அளவு Larger Font Smaller Font


1990-களில் துவங்கிய கெல்வினேட்டர் நிறுவனம் இந்தியா வரலாற்றில் ஒரு தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல கிளைகள், முக்கிய நகரங்களில் அதன் தயாரிப்பு ஆலைகள் என சுமார் 8 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரமாக இருந்தது. இன்று அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்படம் எடுத்தால் அதை பிரிண்ட் எடுத்த பிறகு தான் கண்டு ரசிக்க முடியும் என்ற நிலை இன்று இல்லை. மொபைலில் பல வண்ணக் கலவையுடன் படம் எடுத்து அது சரியில்லை என்றால் உடனடியாக அழித்துவிட்டு மீண்டும் ஒரு படம் எடுத்து பார்த்து ரசிக்கும் நிலை இன்று வந்துவிட்டது. குளிர்சாதன அறைகள் என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் நிலை மாறி குளிரூட்டப் பட்ட அறை என்பது சாமானியனின் படுக்கை அறைக்குக் கூட வந்துவிட்டது.

சாலை எங்கும் இருந்த பொதுத் தொலைபேசி இப்போது காணவில்லை,  ஏன் இந்த நிலை வந்துவிட்டது?
எளிமையாகச்சொல்லப்போனால் மென்பொருள் என்ற ஒன்று வந்துவிட்டது. அதன் மூலம் தொழில்நுட்பம் எளிமையாகி விட்டது. அதை விட இளைஞர்களின் நவீன சிந்திக்கும் திறனும் அதிகமாகிவிட்டது.  பிரபல சுற்றுலாத்தளங்களில் போட்டோ எடுத்து முகவரி கொடுத்து அந்தப்படம் வீட்டுக்குவரும் வரை காத்திருக்கவேண்டிய தில்லை. படம் எடுத்த சில விநாடிகளில் கையில் தெளிவான புகைப்படப் பிரிண்ட் வந்துவிடுகிறது,

ஒரு சாதாரண மென்பொருள் நிறுவனம் இன்று ஆன்லைன் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. மென்பொருள் வருகை நவீனம் போன்றவை பல தொழில்களை கடுமையாக பாதித்துவிட்டது என்று பலர் புலம்புகிறார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு டை (அச்சு) எனப்படும் மோல்டிங் (அச்சு வார்ப்பு) செய்யப்பயன்படும் இரும்பு அச்சுக்கருவியை உருவாக்க லேத்திற்கு சென்று லேத் ஆபரேட்டரிடம் கூறிய பிறகு அவர் ‘மாதிரி’ டை (அச்சு) எடுத்துக்கொடுப் பார். நாம் அதில் ஏதாவது  மாற்றங்கள் செய்யக்கூறினால் அதையே அவர் செய்து கொடுப்பார். ஒரு டை (அச்சு) வருவதற்கு மாதக்கணக்கில் ஆகிவிடும். இன்று அப்படி யல்ல. நமக்கு முன்பாகவே மென்பொருளில் சில விநாடிகளில் நூற்றுக்கணக்கான மாட லில் டைகள் (அச்சுகள்). நமது விருப்பத்திற் கேற்ப உருவாகிவிடுகின்றன.

இப்போது லேத் வேலை குறைந்து விட்டது. ஒரு லேத் ஆபரேட்டரால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 டை (அச்சு) உருவாக்கமுடியும். அதே ஒரு மென் பொருள் ஆயிரம் டையை (அச்சுகளை) உருவாக்கிவிடும். இனி எதிர்காலத்தில் லேத் என்பது இல்லாமல் போய்விடும்.

மேலே கூறியது, ஒரு எடுத்துக்காட்டு தான் இனிவருங்காலத்தில் 90 விழுக்காடு வேலைகளுக்கு மென்பொருள் மட்டுமே பயன்படும். இப்போது கொரிய நாடுகளில் 52 விழுக்காடு அறுவை சிகிச்சை தானியங்கி கருவிகள் செய்துவிடுகிறது. இவ்வாறு செய் யப்படும் அறுவை சிகிச்சைகள் மனிதர்கள் செய்வதை விட மிகவும் நுணுக்கமாக வலி இன்றி அதிக ரத்தசேதமின்றி விநாடிகளில் செய்து முடித்துவிடுகிறது. கொரிய மருத் துமனையில் உள்ள ஒரு கருவி எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை 1.57 விநாடி களில் செய்து சாதனை படைத்துவிட்டது. 13 தையல் போட அது எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 3 விநாடி மட்டுமே

தற்போது குறுகிய தூரங்களுக்குச் செல்ல ஒருநபர் செல்லக்கூடிய தானியங்கி ஸ்கூட்டர்கள் மேலை நாடுகளில் வந்து விட்டது. இது சாட்டிலைட்டுகள் மூலம் இயக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கோடம்பாக்கத்தில் இருந்து எழும்பூர் வரவேண்டுமென்றால் ஒரு டோக்கனை அந்த ஸ்கூட்டரில் செலுத்திவிட்டால் அதற் காக போடப்பட்ட தனியான பாதையில் அதுவாகவே உங்களை எழும்பூருக்கு கொண்டுசென்று விட்டுவிடும்.  இந்த தொழில் நுட்பம் பெங்களூருவில் கொண்டு வர ஆஸ்திரிய நாட்டு நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் இது வந்துவிடும். இந்த தானியங்கி ஸ்கூட்டர்கள் வந்துவிட்டால் ஆட்டோ டாக்ஸிக்கள் காணாமல் போய்விடும்.

வரும் அய்ந்து ஆண்டுகளில்  நிலைமை இப்படி மாறிவிடும். யாருக்கும் கார்வாங்கும் தேவை இருக்காது. ஓட்டுனர் உரிமம் வாங் கத் தேவையில்லை. தற்போது நமது வீடு தேடிவரும் மார்க்கெட் பொருட்கள் தான் நாளை நவீனமாக மாறியிருக்கும் என்ப தற்கு முன்னோட்டமே ஆகும்.

எதிகாலங்களில் சாலைகளில் வாகன நெரிசல் இருக்காது. விபத்து இல்லாமல் போகும். உலக அளவில் மோட்டார் வாக னங்கள் தயாரிப்பு மிகவும் குறைந்துபோகும். தற்போது உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பில் உள்ளிட்ட நிறுவனங்களில் கட்டுப் பாட்டில் தானியங்கி வாகனங்கள் வந்து விடும். எப்படி நாம் மொபைல், இண்டர் நெட் போன்றவற்றிற்கு இவர்களை நம்பி இருக்கிறோமோ அதே போல் இனி எதிர் காலத்தில் பயணத்திற்கும் இவர்களை நம்பித்தான் இருக்கவேண்டும். எல்லாமே மின்சாரத்தில் தான் இயங்கும். இனி சூரிய ஒளிமின்சாரம், பயோடீசல் உள்ளிட்ட மறுசுழற்சி மின்சாரம் தான் உலகத்தின் மின் தேவையை நிறைவேற்றும்.

இதெல்லாம் நடக்காது என்று பிற் போக்குத்தனமாக நினைக்கவேண்டாம். இன்றைய பெரும்பாலான உலக நிறுவனங் களுடைய எதிர்கால பொருட்களை விற்ப னைக்கு கொண்டுவரும் முக்கிய சந்தை மய்யம் ஆசியாதான்.. குறிப்பாக உள்ளிட்ட மூன்றாம் நிலை நாடுகள் தான்.

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில் கள் பாதிப்புக்கு உள்ளாகும்?

வீடுகளின் மாடியில் பசுமைக் காய்கறித் தோட்டங்கள் (கிரீன் ஹவுஸ்) இப்போதே சென்னையில் பல மாடிகளில் இதை தங்கள் தேவைக்காக செய்யத் துவங்கிவிட்டனர். வீட்டுக்கு வீடு கடல் நீரைக்கூட குடிநீராக மாற்றும் கருவிகள் வந்துவிடும். தற்போது இந்த இயந்திரம் 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.
உயர் தொழில்நுட்பத்தின் காரணமாக மனிதர்களின் உயிர்வாழ்க்கை அதிகரித்து விடும். 1990-களில் இருந்ததை விட இன்று 5 ஆண்டுகள் மனிதர்களின் வாழ்நாள் அதி கரித்துவிட்டது,   எதிர்காலத்தில் மருத்துவர் கள், கிளீனிக்குகள் எதுவும் தேவையிருக் காது, உடலில் எந்த பாதிப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே சொல்லும் மென்பொருள்கள் நமது கைக்கடிகாரம் வடிவில் வந்துவிடும். எடுத்துக் காட்டாய் உடலில் அமிலத்தன்மை அதிகரித்து உங் களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரப் போவதை ஒருமாதத்திற்கு முன்பே காட்டிக்கொடுத்துவிடும். அதனால் நாம் அமிலதன்மை உள்ள உணவைக் குறைத்துக் கொண்டு பித்தநீர் ரத்தத்தில் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்வோம். இதனால் மஞ்சள் காமாலை நம்மை அணுகாமல் ஓடிப்போய்விடும். இப்படித்தான் அனைத்து நோய்களுக்கும் முன்கூட்டியே தீர்வுகள் கிடைத்துவிடும். தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு வினாடிகளில் உடலின் சர்க்கரை அளவை காட்டும் கருவிகள் கடையில் கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

- ‘டிஸ்கவரி சயின்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தமிழாக்கம்: சரவணா ராஜேந்திரன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner