எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சியால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.

பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.

வானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை. ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில் ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில் ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.

தனது 23ஆவது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:

சிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இது குறித்து யூ டியூப், புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள் கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மத்திய அரசின் ஏர் டிராபிக் கண்ட்ரோல் 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின் வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில் பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

பாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் அய்ம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை தயாரித்துள்ளேன்.

ஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடி வமைத்துள்ளேன். பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை. 30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.

மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளேன். விமான நிலையத் தில் இருந்து 40 கி.மீ. சுற்றள வில் மட்டுமே பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை பெறுவதற்கான முயற் சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார் வெற்றி களிப்புடன்.

மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்கூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
கைகளால் இயக்கும் கார் வடிவமைப்பு

கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள் ஸ்கூட்டர் தொழில் நுட்பத்துடன் கைகளால் ஓட்டக் கூடிய காரை (ஹேண்ட்கண்ட்ரோல் கார்) மதுரை இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு மாற்றுத்திறனாளிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சொந்தமாக கார் வாங்கி ஓட்டு வது பலரது கனவாக இருக் கும். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு அது கனவாக மட்டும் இன்றி சவாலாகவும் உள்ளது. சாதாரண கார்களில் பிரேக் அழுத்து வது, கிளெட்ச், ஆக்சிலேட்டர் ஆகியவற்றை கால்களால் இயக்க வேண்டும். ஒரு சில பெரிய நிறு வனங்கள் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர், கிளெட்ச் வசதிகளுடன், பிரேக், ஆக்சிலேட்டர்களை மட்டும் காலால் இயக்கும் வகையில் கார்களை வடிவமைத்துள்ளன.

ஆனால், மாற்றுத்தினாளிகள் கார்களை இயக்குவதற்கு அவர் களது உடல் குறைபாடு பெரும் தடையாக இருக்கிறது. எனவே இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி களுக்காக இது வரை கார்கள் தயாரிக்கப்பட்ட வில்லை.

தற்போது அவர்களுக்காக பிரேக், ஆக்சிலேட்டரை கைகளா லேயே இயக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய காரை (ஹேண்ட் கண்ட்ரோல் கார்) மதுரை மெக்கானிக் பவுல்ராஜ் வடிவமைத்துள்ளார். இந்த காரை மாற்றுத்திற னாளிகள் ஸ்கூட்டர் ஓட்டுவதுபோல் எளிதாக ஓட்டிச் செல் லலாம்.

இதுகுறித்து மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த பவுல்ராஜ் கூறியதாவது:

இரண்டு கால்களும் செயல் படாத எனது நண்பர் ஒருவர் காரின் அனைத்து இயக்கங்களையும் கைகளால் செயல் படுத்தும் வகையில் வடிவமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அவருக்காகவே இத்தொழில்நுட்பத்தை உருவாக்கி காரை வடிவமைத்தேன். கைகளால் இயக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தில் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர் என 2 வகை உண்டு.

மேனுவல் தொழில்நுட்பத்தில் ஆக்சிலேட்டர், கிளெட்ச், கியர், பிரேக் உள்ளிட்டவற்றை ஒரே கையைப் பயன்படுத்தியே இயக்க முடியும். அதனால், கை வலி, வீக்கம் ஏற்படும். நாளடைவில் கை பலவீனமடையவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தில் பிரேக்கை அழுத்தி ஒருமுறை கியர் போட்டால் போதும். அதன்பிறகு பிரேக், ஆக்சிலேட்டரை கையாலேயே இயக்கலாம். விருப்பப்பட்டால் பிரேக், ஆக்சிலேட்டரை காலாலும் இயக்கிக் கொள்ளலாம்.

நான் வடிவமைத்த இந்த காரை பயன்படுத்தி எனது மாற்றுத் திறனாளி நண்பர் கேரளா வரை சென்று வந்தார். அவருக்கு இது வரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட வில்லை. முதியோர்களும் இந்த காரை பயன்படுத்தலாம். நான் உரு வாக்கிய இந்த தொழில்நுட்பத்தை முறையாகப் பதிவு செய்து, மாற்றுத்திறனாளிகளின் கார்களில் வடிவமைத்துக் கொடுக்க உரிமம் வாங்க உள்ளேன் என்றார்.

நியாவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் பணியிடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நியாயவிலைக் கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 26

சம்பளம்: தொகுப்பு ஊதியம் (ஒரு ஆண்டுக்கு - மாதம்) ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000. தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (+2) பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கட்டுநர்   - காலியிடங்கள்: 09

சம்பளம்: தொகுப்பு ஊதியம் (ஒரு ஆண்டுக்கு - மாதம்)   ரூ.4,250

மேற்கண்ட பணியிடங்கள் நேரடி நியமனத்தின் போது அரசுப் பணிக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்த வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  முப்படி செலான் சங்க செலான் மூலமாக நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எந்த கிளையிலும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு மய்யத்தின்

சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் பேஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் - 643 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.12.2017தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner