எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயிருள்ள ஒற்றை செல்லின் எடை எவ்வளவு இருக்கும்? அதன் எடை நேரமாக ஆக எவ்வளவு மாற்றமடையும்? இதை அறிய, உலகிலேயே முதல் நுண்ணிய எடை இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜுரிச்சில் உள்ள இ.டி.எச்., பல்கலைக்கழகம் மற்றும் பேசல் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த எடை பார்க்கும் கருவி, ஒளிர்வு நுண்ணோக்கியையும், லேசர் மற்றும் அகச்சிவப்புக் கருவியையும் பயன்படுத்துகிறது.

செல்லை உயிரோடு வைத்திருக்க உதவும் சிறு பெட்டிக்குள்ளிருந்து ஒரே ஒரு செல்லை மட்டும் எடுத்து ஒரு சிறு உலோக தகட்டில் வைக்கும்போது, அந்த தகட்டின் அசைவுகளை லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் அளப்பதன் மூலம் செல்லின் எடையை நிர்ணயிக்க முடியும் என் கின்றனர் விஞ்ஞானிகள்.

அதாவது,  கிராமில், டிரில்லியன் பகுதியளவுக்கு எடையைப் பார்க்க முடியும். இந்த கருவியின் மூலம் செல்களைப் பற்றிய புதிய உண்மையையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உயிருள்ள ஒரு செல்லின் எடை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அது சத்துக்களை உள்வாங்கி வெளியேற்று வதால்,  அதன் எடை மாறுபடுகிறது என்கிறார் இ.டி.எச்., பல்கலைக் கழகத்தின் டேவிட் மார்டினெஸ் மார்ட்டின்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner