எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிலந்தி ரோபோ - சிலந்தி வடிவலான புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இதன் முன்புறமும் பின்புறமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி நினைவக திறன் கொண்டது. காடுகளில் பல வகையான சிறிய உயிரினங்களை ஆய்வு செய்வதற்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது.

விநியோக ரோபோட் - சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரத்தில் சிறிய வடிவிலான ரோபோக்களை பொருட்களை விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சோதனை முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஜெல்மோலி என்ற வணிக நிறுவனம் இந்த ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ 10 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரோபோ செல்கிறது.

மாணவர்களுக்கான செயலி

மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு உதவ எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இதில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் செயலி வகுப்புப் பாட அட்டவணையைக் குறித்து வைத்துக் கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள், விடுமுறை நாட்கள் போன்றவற்றையும் குறித்துக்கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்தச் சாதனத்திலிருந்து வேண்டு மானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

ஒவ்வாமையை தடுக்கும் கருவி

உணவில், ஒவ்வாமை தரும் பொருட்கள் இருக்கின்றனவா என்பதை, கண் பார்வையை வைத்து தெரிந்து கொள்ள முடியாது. இதனால், பலருக்கு அந்த பொருட்களை உண்ட பின், கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை தடுக்க, ஹார்வர்டு மருத்துவப் பள்ளி விஞ்ஞானிகள், 'அய் ஈட்' என்ற சிறிய கருவியை உருவாக்கி உள்ளனர். இதை அவர்கள், 2,600 ரூபாய்க்கு, சந்தையில் வாங்கிய பொருட்களை வைத்தே உருவாக்கி உள்ளனர்.

இந்த ஒவ்வாமை அறியும் கருவி, மூன்று பகுதிகளை கொண்டது. ஒரு பகுதி, உணவு மாதிரியில் உள்ள ஒவ்வாமை தரும் பொருளை சேகரிக்கிறது. சாவி அளவுக்கே உள்ள, இரண்டாவது மின்னணு பகுதி, உணவு மாதிரியை அலசுகிறது. மூன்றாவது, ஒரு மொபைல் செயலி. இந்த செயலி, அலசிய ஒவ்வாமை பொருட்களை பற்றி தகவலை தெரிவிக்கிறது. இப்போதைக்கு, 'அய் ஈட்' பத்தே நிமிடங்களில் நிலக்கடலை, கோதுமை, பால், முட்டை போன்ற அய்ந்து உணவுகளில், ஒவ்வாமை தரும் பொருட்களை காட்டித் தருகிறது. விரைவில், எந்த ஒவ்வாமை தரும் பொருட்களையும் கண்டு பிடிக்கும்படி, இதை தயாரிக்க இருப்பதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், காய்கறிகளில், பூச்சி மருந்து படிந்துள்ளனவா என்றும் அது கண்டுபிடிக்கும் என, அவர்கள் கூறியுள்ளனர்.

காந்த ரயில் அறிமுகம்

இந்தியாவில், அதிவேக நிலத்தடி காந்த ரயில் போக்குவரத்து நடைமுறைக்கு வந்தால், அது, ஆந்திராவில் தான் முதலில் வரும். இதற்கான ஒப்பந் தத்தை, ஆந்திர அரசிடம், அய்ப்பர் லுப் டிரான்ஸ்போர்டேசன் டெக்னாலஜிஸ்' கையெழுத் திட்டு உள்ளது.

விஜயவாடா - அமராவதி இடையே, வரவிருக்கும் இந்த போக்குவரத்துக்கு, எங்கே சுரங்க வழித்தடத்தை தோண்டலாம் என்பது குறித்த முதற்கட்ட ஆய்வு, அக்டோபரில் துவங்கி, ஆறு மாதங்கள் நடக்க உள்ளது. அதையடுத்து, களப் பணி துவங்கும் என, எச்.டி.டி.,யும், ஆந்திர அர சும் அறிவித்துள்ளன. காரில், 1 மணி, 10 நிமிடம் பிடிக்கும் பயணம், எச்.டி.டி.,யின் சுரங்க காந்த ரயிலில் வெறும், 6 நிமிடத்தில் கடந்து விடலாம். ஏற்கெனவே, அபுதாபி, பிரான்சு, ஸ்லோவாகியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில், முதற்கட்ட ஆய்வுகளை, எச்.டி.டி., நடத்தி இருக்கிறது.

மின்சார காரான டெஸ்லாவின் அதிபர், எலான் மஸ்க், முன்வைத்தது தான், அய்ப்பர் லுப். காற்றழுத்தம் குறைவான சுரங்கப்பாதையில், தண்டவாளத்தைத் தொடாமல், காந்தத்தில் மிதக் கும் ரயில் மணிக்கு, 600 - 700 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும் என, சில சோதனை ஓட்டங் களை நடத்தி காட்டியவர், மஸ்க்.ஆனால், அவ ரது அய்ப்பர் லுப் நிறுவனத்துக்கு போட்டியாக இப்போது, எச்.டி.டி., அரிவோ, அய்ப்பர் லுப் ஒன் போன்ற நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையும், பல நாடுகளில் தங்கள் தொழில்நுட்பத்தை விற் கின்றன. 'அய்ப்பர் லுப் போக்குவரத்து, அமரா வதி நகரை சர்வதேச தரம்வாய்ந்த தொழில்நுட்பப் பூங்காவாக, மென்பொருள் முகாமாக மாற்றும்' என, ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சர், நர லோகேஷ் தெரிவித்து உள்ளார்.

புவி வெப்பமாதலால் காபி உற்பத்தி குறையும்

புவி வெப்பமாதலினால், காபி தோட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. உலகிலேயே, காபிக் கொட்டைகளை அதிகம் விளைவிக்கும் லத்தீன், அமெரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, அடுத்த, 30 ஆண்டுகளில், இப்பகுதிகளில், காபி உற்பத்தியின் அளவு இப்போது உள்ளதிலிருந்து, 88 சதவீதமாக குறைந்துவிடும் என, தெரிய வந்துள்ளது. இதற்கு முன், பருவநிலை மாற்றத்தால் காபி உற்பத்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளும், விளைச்சல் குறையும் என்றே மதிப்பிட்டு உள்ளன. அமெரிக்காவின், வெர்மான்ட் பல்கலைக் கழகம், 'குண்ட்' சுற்றுச்சூழல் நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆய்வு தான், விளைச்சல் மிகவும் மோசமாக பாதிக்கும் என, தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner