எழுத்துரு அளவு Larger Font Smaller Fontமனிதர்களால் உருவாக்கப்படும் கடல் மாசுக்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி, வருந்தத்தக்க தகவல்கள் வர துவங்கி உள்ளன. தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் கடல் பகுதிகளில் இருக்கும், ஆமை முகம் கொண்ட கடல் பாம்புகள், மெல்ல அடர் கறுப்பு நிறத்திற்கு மாறி வருவதை, கடல் உயிரியியல் வல்லுனர்கள், சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர். 'கரன்ட் பயாலஜி' இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, மாசுக்களால், 'மெலானிசம்' என்ற குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், கடல் மாசு இல்லாத பகுதிகளில் வாழும், ஆமை முக பாம்புகளில், இந்த பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் கண்டறிந்து உள்ளனர். எல்லாவற்றையும் கடலில் கலந்துவிடும் வழக்கம், உடனே மாற்றப்பட வேண்டும் என்றும், அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட எறும்பு!கூட்டாக வாழும் எறும்பு களுக்கு, முக்கியமான உணர்வு, நுகரும் சக்தி தான். எதி ரிகளை கண்டறிவது முதல், சாரிசாரியா ஊறும் போது, தகவல் களை பரிமாறுவது வரை, எல்லா வற்றுக்கும் வாசனை களைத் தான், எறும்புகள் பயன்படுத்து கின்றன.  இந்நிலையில், நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு மாற்றத்தின் மூலம், வாசனை அறியும் உணர்வு, 90 சதவீதம் இல்லாத எறும்புகளை உருவாக்கி உள்ளனர்.

பரிசோதனைக்காக அவர்கள் எடுத்துக் கொண்டது, இந்தியாவில் காணப்படும் எறும்பு வகைகளைத் தான்! வாசனை அறியாத எறும்புகள், தங்கள் வசிப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்தன. உணவு தேடுவதில், அவை ஈடுபாடு காட்டவில்லை; தனிமையை அதிகம் நாடின. தனியே இருக்கையில், தங்கள், 'மீசை'யை அடிக்கடி உதறி சண்டை போடுவது போல பாவனை செய்தன. மிகவும் சிக்கலான, சமூக சட்டத் திட்டங்களுடன் வாழும் எறும் புகளை பற்றி, மேலும் அறிய, இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், விஞ்ஞானிகள்.

அதிவேகமாக மின்னூட்டம் பெறும் மின்கலன்!இன்று, பரவலாக பயன்படும், லித்தியம் அயனி மின்கலன்களுக்கு மாற்றாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழக விஞ்ஞானிகள், புதிய துத்தநாகம் காற்று மின்கலன்களை உருவாக்கி உள்ளனர். இது, லித்தியம் அயனி மின்கலனை விட, அய்ந்து மடங்கு மின்சாரத்தை தேக்கி வைக்கும் திறன் கொண்டது என்பதோடு, குப்பையில் போட் டால், சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காது என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'துத்தநாகம்- காற்று' மின்கலன்கள், பெயருக் கேற்றபடி, துத்தநாகம் மற்றும் காற்றிலுள்ள ஆக் சிஜன் ஆகியவற்றின் வினை மூலம், மின்சாரத்தை தேக்கி வைக்கின்றன. துத்தநாகம், உலகின் பல பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கக் கூடிய, விலை மலிவான உலோகம். ஆக்சிஜனும் அப்படியே. ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட துத்தநாக காற்று மின்கலன்களை, விரைவில் மின்னூட்டம் பெற முடியாமல் இருந்தது. சிட்னி பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அந்த சிக்கலை தீர்த்துள்ளனர். மறு மின்னூட்டம் பெறுவதற்காக, பிளாட்டினம், இரிடியம் ஆக்சைடு போன்ற விலை உயர்ந்த உலோகங்களை, துத்தநாக காற்று மின்கலன்களில் பயன்படுத்துவர். ஆனால், சிட்னி ஆராய்ச்சியா ளர்கள் இரும்பு, கோபால்டு, நிக்கல் போன்ற மலி வான, ஏராளமாக கிடைக்கும் உலோகங்களையே பயன்படுத்தலாம் என, கண்டறிந்தனர்.

இந்த உலோகங்களை, துத்தநாக காற்று மின் கலன்களில் பயன்படுத்தும் போது, மின்னூட்டம் வேகமாக நடந்தது. இந்த உலோகங்களை, எந்தளவு மின்கலனில், எந்த விகிதத்தில், எந்தவித படிகத் தன்மையுடன் கலந்தால், மறு மின்னூட்டம் விரைவாக நிகழும் என்பதை, பரிசோதனைகள் மூலம், வெற்றிகரமாக தங்கள் ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிந்துள்ளதாக, சிட்னி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

'ஹோலோகிராம்' மேசை!உலகிலேயே, முதன்முறையாக, பல பேர் பார்க்கக் கூடிய, 'ஹோலோகிராம்' கருவியை உருவாக்கி இருக்கிறது, ஆஸ்திரேலியாவின் யூக்ளிடியோன். ஒரு பெரிய மேசையின் வடிவில் இருக்கும், இந்த கருவியின் மேற்பரப்பில், முப்பரிமாண உருவங்கள் தெரியும்.

அதை, நான்கு பேர் வரை, சிறப்புக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கலாம். கண்ணாடி அணிந்தவர்கள், ஒரு பகுதியிலிருந்து நகர்ந்து போய் பார்த்தாலும், ஹோலோகிராமின் முப்பரிமாண உருவங்களை, நிஜப் பொருட்களை பார்ப்பது போன்ற கோணங்களில் பார்க்க முடியும். அதைவிட முக்கியமாக, அந்த உருவங்களை விரல்களால் தொட்டு மாற்றவும், நகர்த்தவும் முடியும். விஞ்ஞான புனைக் கதைகளில் மட்டுமே இருந்த, ஹோலோகிராம் கனவு, சிறியளவில், சில ஆண்டுகளுக்கு முன், நிஜத்துக்கு வந்தது. ஆனால், அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. உதாரணத்திற்கு, அதை ஒருவர் மட்டுமே பார்க்க முடியும். நகர்ந்து போனால் உருவம் சிதறும்.  அந்த குறைகளை, தங்கள் ஹோலோகிராம் மேசையில் களைந்திருப்பதாக, யூக்ளிடியோன் சொல்கிறது. நகர வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு, புதிய பொருட்கள் வடிவமைப்பு முதல், கணினி விளையாட்டுகள், வகுப்பறை, திரைப்படங்கள் என, பல துறைகளில், ஹோலோகிராம், புரட்சியை ஏற்படுத்தக் கூடும் என, வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner