எழுத்துரு அளவு Larger Font Smaller Font



ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை உலகின் முழு அளவிலான முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையை அலங்கரிக்கிறது.

காற்றிலிருக்கும் மின்சாரத்தை தண்ணீரின் மூலமாக பெற வழிவகுக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பமானது, தற்போதைய வழக்க மான முறையை விட தண்ணீரில் மிகவும் ஆழமாக சென்று கீழ்-நிலை விசையாழிகள் (டர்பைன்கள்) மூலம் செயல்படும். 20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடிய சோதனை முயற்சியான இந்த பீட்டர்ஹெட் காற்றாலை அமைப்பு, ஹைவிண்ட்  என்றும் அறியப்படுகிறது.
அணுத்துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு விடை சொல்லும் பசுக்கள்: 'திகைக்க' வைத்த ஆய்வு முடிவுகள் மின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசை யாழிகளுக்கு சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் ஸ்டேடாய்ல் சொல்கிறார்.

இந்தத் தொழில்நுட்பமானது, பெருமள வில் வெற்றியடையும். அதிலும் குறிப்பாக, ஜப்பான், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை போன்ற ஆழமான கடற்பகுதிகளில் பெரிய அளவில் வெற்றியடையும் என்று நம்பப்படு கிறது. "திறந்த கடல் சூழலில் இந்த தொழில் நுட்பம் சிறப்பாக செயல்படுவதை உறுதிப் படுத்தும் திட்டம் இது; மிதவை காற்றாலை மின்சார உற்பத்தி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், செலவினங்களைக் குறைக்க உதவும் என்றும் நம்புவதாக ஹைவைண்ட் திட்ட இயக்குநர் லீஃப் டெல்ப் கூறுகிறார்."

பெரிய அளவிலான விசையாழிகள் தற்போது இடம் மாற்றப்படுகிறது.   இதுவரை, மிகப்பெரிய விசையாழி ஒன்று ஏற்கனவே இடம் மாற்றப்பட்ட நிலையில், மேலும் நான்கு விசையாழிகள் நார்வே துறைமுகத்தில் தயாராக இருக்கின்றன.

இந்த மாதக்கடைசியில் அவை அனைத் தும், அபெர்டீன்ஷைரில் உள்ள பீட்டர்ஹெட் டில் இருந்து 15 மைல்கள் (25 கிமீ) வரை இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவை பெரிய மீன்பிடி மிதவைகளைப் போல நிமிர்ந்து நிற்கும். விசையாழிகளை உருவாக் குவது தற்போது மிகந்த பொருட்செலவு பிடிப்பதாக இருந்தாலும், ஏற்கனவே வழக்க மான காற்றாலை விசையாழிகளின் விலை வியத்தகு முறையில் குறைந்திருப்பதால், உற்பத்தியாளர்கள் அவற்றை வாங்கியிருப் பதை சுட்டிக்காட்டும் அவர், அதேபோல எதிர்காலத்தில் இவற்றின் விலையும் குறையும் என்று ஸ்டாடாயில் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"மிதவை காற்றாலைகள் இறுதியில் மானியம் இல்லாமலேயே போட்டியிட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அவற்றை பெருமளவில் கட்டமைக்க வேண்டும் என்கிறார்" டெல்ப். எவ்வளவு பெரியது? பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தின் பரிமாணங்கள் அதிர்ச்சியூட்டுகிறது:
ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை இந்த விசையாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக் கூடியவை. இதன் கோபுரத்தின் விசிறிகள் 175 மீட்டர் (575அடி) உயரம் கொண்டவை, பிக்பென் டவரைவிட உயரமானவை. ஒவ்வொரு கோபுரமும் 11,500 டன் எடை கொண்ட்து.

விசிறிகளுக்கு பின்னால் இருக்கும் பெட்டியில், இரண்டு இரட்டை மாடி பேருந்து களை வைக்கலாம். ஒவ்வொரு விசிறியும் 75 மீட்டர் -அதாவது ஒரு ஏர்பஸ் அளவில் இறக்கைகள் நீண்டிருக்கக்கூடியவை. விசை யாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவை. கோபுரங் களின் விசிறிகள் புத்தாக்கத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளன. விசிறிகளை கட்டுப்படுத்தும் மேம்பட்ட மென்பொருள் காற்று, அலை மற்றும் நீரோட் டங்களுக்கு ஏற்றவாறு விசிறிகளை திசை திருப்பி கோபுரத்தை நிமிர்த்துகிறது என்கிறார் ஸ்டாடாயில். நார்வேயில், கோடைக்காலத்தின் ஓர் இரவில் 11,500 டன் எடை கொண்ட முதல் விசையாழியை இடம் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. படகுகளை இழுப் பதற்கு தடிமனான கயிறுகளை பொருத்திய குழுவினர், தடைகளை கண்டறிய ரிமோட் டால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தினார்கள்.

இறுதியில் மாபெரும் விசையாழி, 78 மீட்டர் நீளமுள்ள குழாய் மீது மிதக்கத் தொடங்கியது. அதன் அடிப்பாகத்தில் இரும்பு தாது நிரப்பப்பட்டு, தண்ணீரில் நேராக நிமிர்ந்து நின்றது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner