எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்திலிருந்து விண்வெளி உடைகள் மிகப் பெரிய அளவில் மாறியது போலத் தெரியவில்லையே என்ற சந்தேகம் எழலாம். உண் மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளன. ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.

ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியநோவ், 1965இல் வாஸ்கோட் 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் முதலில் நடந்த பெருமையைப் பெற்றவர். முதல் விண்வெளி நடையின்போது, அவர் மிகவும் திணறிப்போனார். உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால் அவருடைய விண்வெளி உடை ஊதிப் பெருக்க ஆரம்பித்தபோது, அவரால் நகரக்கூட முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் விக்கித்துப் போனார் லியநோவ். விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

அதற்குப் பிறகு அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் விரிவடைவதற்கான இணைப்புகளைக் கொண்டிருந்தன. அத்துடன் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும் உடையிலேயே பொருத்தப்பட்டிருந்தது. உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் விண்வெளி உடை பிரத்யேகமாகவே தயாரிக்கப்படும். ஏனென்றால், ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் மாறுபடும் இல்லையா? அத்துடன் ஒவ்வொ ருவருக்கும் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளி பயணத்தின்போது ஒன்று, மாற்று உடை என மூன்று விண்வெளி உடைகள் தயாரிக்கப்படும். விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை, மூன்று கோடி ரூபாய். ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுத்த உருவாக்கப்பட்ட உடைகள் என்பதால், புவியில் அவற்றின் எடை மிக அதிகமாகவே இருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தற்போது இசட் வரிசை உடைகளை உருவாக்கி வருகிறது. இந்த உடைகளின் இணைப்புகளில் டைட்டானியம் பால்பேரிங் உருளைகள் பொருத்தப்படுகின்றன. இவை அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைத் தரக்கூடியவை. இதற்கு முந்தைய விண்வெளி உடைகளை அணியும் ஒருவர், தன் உடலை மடக்கிக் கால் கட்டை விரலைத் தொட முடியாது. முதன்முறையாக இந்த உடைகள் அதைச் சாத்தியப்படுத்தும் அளவு நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கப் போகின்றன. அத்துடன் அழுத்தத் தைச் சமநிலைப்படுத்துவதற்குத் தேவையான காற்று வெளியேற்றும் திறப்பும் இந்த உடையில் இருக்கும்.

ஏழு பூமிகள் அணிவகுப்பு

அளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்குவாரியஸ் விண்மீன் கொத்தில், மங்கலாகக் காட்சியளிக்கும் டிராப்பிஸ்ட்-1 (ஜிக்ஷீணீஜீஜீவீst-1)என்ற சிறிய விண்மீனைச் சுற்றிவருபவை இந்தக் கோள்கள். உயிர் வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்ப நிலையையும் நீரையும் கொண்டிருப்பதற் கான சாத்தியங்களை இந்தக் கோள்கள் கொண்டி ருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

சூரியக் குடும்பத்துக்கு அப்பால் உயிர் வாழ்க் கையின் சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வானியலாளர்களின் நம்பிக்கையை இந்தக் கண்டு பிடிப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஒரே விண் மீனைச் சுற்றி, பூமியின் அளவைப் போல் இவ்வளவு கோள்களைக் கண்டுபிடித்திருப்பது இதுதான் முதல் முறை.

டிராப்பிஸ்ட்-1 விண்மீன், பூமியிலிருந்து சுமார் 39 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது என்பதால் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது குறித்த நம் தேடலுக்கு முக்கியமான இலக்காக ஆகியிருக்கிறது. வியாழனை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் இந்த விண்மீன் நமது சூரியனைவிட 2,000 மடங்கு குறைந்த அளவில் ஒளி வீசுகிறது.

உயிர்வாழ்க்கைக்கான சாத்தியம்!

இந்த விண்மீன் மிகவும் சிறியதாகவும் தணிவான வெப்பம் கொண்டதாகவும் இருப்பதால் அந்தக் கோள்களெல்லாம் மிதமான வெப்பநிலையைக் கொண்டிருக்கின்றன. இதனால், அவற்றில் நீர் இருப்பதற்கான சாத்தியமும், இன்னும் சொல்லப் போனால் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியமும்கூட இருக்கின்றன என்று சொல்லலாம் என்கிறார் பெல்ஜி யத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர் மிக்கேல் கிலன்.

உருவத்தில் மட்டுமல்ல மற்ற அம்சங்களிலும் அந்தக் கோள்கள் பூமியைப் போல இருக்கின்றன. அவற்றின் சுற்றுப்பாதை எவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்கிறது என்பது வியப்பை அளிக்கிறது. நமது சூரியனுக்கும் அதற்கு மிக அருகில் உள்ள புதனுக்கும் இடையிலான தொலைவைவிட டிராப் பிஸ்ட்-1 விண்மீனுக்கும் அதன் ஏழாவது கோளுக்கும் இடையிலான தொலைவு ஆறு மடங்கு குறைவானது.

அந்தக் கோள்களில் உயிரினங்கள் இருந்து, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடியவையாக அவை இருக்குமென்றால் அவற்றுக்கு அற்புதமான காட்சிகளின் தரிசனம் கிடைக்கக்கூடும். நமது சூரியன் நம் கண்களுக்கு எவ்வளவு பெரியதாகத் தெரியுமோ அதைவிடப் பத்து மடங்கு பெரியதாக, அய்ந்தாவது கோளிலிருந்து பார்த்தால் அந்த டிராப்பிஸ்ட்-1 விண்மீன் காட்சியளிக்கும்.

அந்தக் கோள்களில் உயிரினங்கள் இருக்கின்ற னவா இல்லையா என்பதைப் பத்தாண்டு காலத்துக்குள் தெரிந்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அந்தக் கோள்களில் உயிர் வாழ்க்கை செழித்திருந்தாலும், பூமியில் உள்ளது போல் வாயுக்களின் வெளியீடு இருந்தாலும் அதை நாம் கண்டறிந்துவிடலாம் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒளியை மறைக்கும் கோள்கள்

டிராப்பிஸ்ட்-1 விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள் சுற்றுவதைக் கடந்த ஆண்டு வானிய லாளர்கள் கண்டறிந்தார்கள். நாஸாவின் ஸ்பிட்ஸர் அண்டவெளித் தொலைநோக்கி அந்த விண்மீனை 21 நாட்கள் கூர்ந்து கவனித்திருக்கிறது. பிற விண் நோக்கங்களிலிருந்து வந்த தரவுகளையும் சேர்த்து வைத்துப் பார்த்தபோது டிராப்பிஸ்ட்-1 விண்மீனை மொத்தம் ஏழு கோள்கள் சுற்றி வருவது தெரிந்தது. விண்மீனைச் சுற்றிவரும்போது அந்தக் கோள்கள் எந்த அளவுக்கு விண்மீன் ஒளியை மறைக்கின்ற னவோ அதை வைத்து அவற்றின் அளவுகள் கண்ட றியப்பட்டன. அந்தக் கோள்களுக்கு இடையிலான இழுப்பு விசையையும் விலக்குவிசையையும் வைத்து அந்தக் கோள்களின் நிறையைக் கணக்கிட்டி ருக்கிறார்கள்.

மிகவும் நெருக்கமாக அமைந்த சுற்றுப்பாதையில் அந்தக் கோள்கள் சுற்றுகின்றன. அந்த விண்மீனைச் சுற்றி வருவதற்கு ஒன்றரை நாட்களிலிருந்து அதிக பட்சமாக 20 நாட்கள் வரை கோள்கள் எடுத்துக் கொள்கின்றன. இந்தக் கோள்களில் சிலவற்றில் கடல்கள் அமைந்திருப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. பூமியைப் போன்ற கோள்கள் ஒன்றும் அரிதான விஷயங்கள் இல்லை என்பதைத்தான் இந்தக் கோள்களின் கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வைத் தொடங்கும்போது கால விரயம் என்று நினைத்த வர்களும் இப்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோள்களில் வளிமண்டலங்கள் இருக் கின்றனவா என்பது குறித்து வானிய லாளர்கள் இப்போது கவனம் செலுத்துகி வருகிறார்கள்.  

நானோ தொழில்நுட்பம்

மூலக்கூறுகளின் அமைப்பை மாற்றி அமைக்கும் நுட்பம் கைவரப் பெற்றுவிட்டால் காற்றில் உள்ள மாசையும் நீரில் உள்ள நச்சுகளையும் ஒட்டுமொத்தமாக அகற்றிவிடலாம். அதற்குத் தேவை நானோ தொழில்நுட்பம். அவ்வாறு பருகும் நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் நானோ தொழில்நுட்பத்தின் தாக்கம் இடம்பெறப் போகும் நாள் தொலைவில் இல்லை.

அவ்வளவு ஏன் விண்வெளிக்குக் கருவி களைக் கொண்டு செல்லும் செலவையும் குறைக்க நானோ தொழில்நுட்பம் உதவும். இதே போன்று மருத்துவம், நுகர்வு பொருட்கள், ஆற்றல், உற்பத்தித் தொழில் எனப் பல்துறைகளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அவற்றின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும் நானோ தொழில் நுட்பத்தால் இயலும். அதற்குக் காரணம் அணுத் துகளைக் காட்டிலும் நுட்பமான, நுணுக்கமான தளத்தில் இது செயல்படுகிறது.

மீநுண் என அறிவியல் வட்டாரங்களில் பரவலாகத் தமிழில் அறியப் படும் நானோ தொழில்நுட்பத்தில் நானோ என்பது ஒரு நீள் அல்லது பரும அளவின் அலகாகும். நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரை நூறு கோடி துண்டுகளாக்கி அவற்றில் ஒரு துண்டின் அளவாகும்.

நானோ வரலாறு

1959இல் ‘அடியில் ஏராளமாக இடம் உள்ளது’ (‘There’s Plenty of Room at the Bottom’) என்னும் தலைப்பில் இயற்பியல் ஆய்வாளர் முனைவர் ரிச்சர்ட் பி.ஃபேன்மேன் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் அணு அளவில் மாற்றம் நிகழ்வதை இயற்கை தடை செய்யவில்லை என்றும் இதனால் எதிர்காலத்தில் ஓர் புதிய அறிவியல் மாற்றம் நிகழவுள்ளது என்றும் நிறுவினார். அதுவே நானோவின் தொடக்கப் புள்ளி எனலாம். அதன் பிறகு 1974இல் ஜப் பானியப் பேராசிரியர் நொரியோ தனிகுச்சிதான் மீநுண் தொழில்நுட்பம் என்ற சொல்லை முதன்முதலில் வடிவமைத்தார்.

இந்த மீநுண் தொழில்நுட்பமானது இயற்பியல், வேதியியல், பொறியி யல், சூழலியல், உயிரியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகளில் புதிய அத்தியாயங்களைத் திறந்துள்ளது. அவற்றில் சில இதோ:

கம்பி முதல் படகு வரை:சைக்கிளின் பாகங்களைத் தயாரிக் கவும் எடை குறைவான படகுகளை உற்பத்திசெய்யவும் கார் பன் நானோடியூப் (சி.என்.டி.) பயன்படுத்தப்படுகிறது. மிகச் சிறிய தாகவும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் சிலிக்கான் சிப்பின் உட்பாகங்களை வடிவமைக்க இந்தச் சி.என்.டி. பயன்படுகிறது. கம்பி, மின்சாரக் கம்பி வடம், சோலார் செல் உள்ளிட்ட பல பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

புற்றுநோய்க்கு நேரடி சிகிச்சை

புற்றுநோய்க்கு தற்போது அளிக்கப்படும் கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சைக்குப் பதிலாக நானோபோட்ஸை உடலில் செலுத்தி நோய் தாக்கிய பகுதிக்குச் சிகிச்சை அளிக்கலாம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner