எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘முக நூல்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், சில ஆண்டுகளுக்கு முன், ஆக்குலஸ் ரிப்ட் என்ற மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தை, பல பில்லியன்கள் தந்து வாங்கினார். அண்மையில், ஆக்குலஸ் மீது தொடுக்கப்பட்ட விதிமீறல் வழக்கு ஒன்றில், பல நுறு கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த பின்னடைவுக்குப் பின்னும், விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும், மெய்நிகர் தொழில்நுட்பத்தை, வெகுஜன நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில், மார்க் உறுதியாக இருக்கிறார். காரணம், ஆக்குலசில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் பல தொழில் நுட்பங்கள், மெய்நிகர் துறையில், புதிய மைல் கற்களை எட்டும் விதத்தில் இருப்பது தான்.  மெய்நிகர் விளையாட்டு கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற வற்றை காண உதவும், சிறப்பு கண்ணாடி கள், துப்பாக்கி சுடுதல், பனிச் சறுக்கு, வாகனம் ஓட்டுதல் போன்ற காட்சிகளின் போது, அதில் பங்கேற்பவரின் கைகள் மற்றும் உடலும் தெரிய உதவும் கையுறை, உடை போன்றவற்றையும் ஆக்குலஸ் உருவாக்கி உள்ளது. அண்மையில், மார்க், தன் ஆக்குலஸ் ஆய்வகத்தில் மெய்நிகர் சாதனங்கள் அணிந்து, ‘ஸ்பைடர்மேன்’ விளையாட்டை, ஆடிப் பார்த்து மிகுந்த உற்சாகமடைந்தார்.

ஸ்பைடர்மேனின் கையிலிருந்து சிலந்தி நுல் பீய்ச்சி அடிப்பது போன்ற காட்சியில், மார்க் அணிந்திருந்த மெய்நிகர் கையுறையிலிருந்து, சிலந்தி வலை பீய்ச்சி அடிப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக தெரிந்ததாக, மார்க், தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். உலகெங்கும், 2016இல், மொத்தம், 63 லட்சம் மெய்நிகர் தலை அணி சாதனங்கள் மற்றும் இதர கருவிகள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 2017இல், இதைவிட மூன்று மடங்கு விற்பனையாகும் என்றும், மெய்நிகர் விற்பனை துறையினர் கணித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புல்லிலிருந்து ரப்பர் டயர்!

வாகனங்களுக்கான டயர்களை தயாரிக்க, ஏகப்பட்ட பெட் ரோலிய பொருட்கள் தேவை. மிகுந்த செலவு பிடிக்கும் இப் பொருட்களுக்கு மாற்றாக, மரம், புல் போன்ற இயற்கை பொருட் களிலிருந்தும் டயரை தயாரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். டயருக்கு தேவையான ரப்பரை பெற, பெட்ரோலி யத்தில் உள்ள, ‘அய்சோப்ரீன்’ என்ற மூலக்கூறுகளை பிரித்தெடுக்க வேண்டும். அமெரிக்காவிலுள்ள மின்னசோடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அண்மையில் இயற்கை பொருட்களிலிருந்தே, அய் சோப்ரீனை பிரித்தெடுத்து ரப்பரை தயாரித்துள்ளனர். தாவரங்களில் உள்ள குளுக்கோஸ் போன்ற சர்க்கரை பொருட்களை, நுண்ணு யிரிகளைக் கொண்டு, நொதித்தல் முறையில் பிரித்தெடுத்து உள்ள னர். அதன்பின், பல சிக்கலான வேதி வினைகளுக்கு ஆட்படுத்தி, அய்சோப்ரீனை, தனியாக எடுத்து ரப்பரை உருவாக்கி உள்ளனர். இப்படி உருவாக்கப்பட்ட, ரப்பரின் செயல்திறன் மேம்பட்டதாக இருப்பதாக, மின்னசோடா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner