எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈர்ப்பலைகளின்
சத்தம் கேட்டது!

அய்ன்ஸ்டைனால் கணிக்கப்பட்ட ஈர்ப்பலைகள், அவரது பொதுச்சார்பியலின் நூற்றாண்டில் இப்போது உறுதிசெய்யப் பட்டிருக்கின்றன. தொலைவிலுள்ள இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு, பின் பிணைந்ததால் வெளிப்பட்ட ஈர்ப்பலைகளை அமெரிக் காவின் லிகோ ஆய்வகத்தில் கண்டறிந்தார்கள்.

மோதிப் பிணைந்துகொண்ட இந்த இரு கருந்துளைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு கருந்துளை சூரியனைவிட 36 மடங்கு நிறை கொண்டது; இன்னொன்று 29 மடங்கு நிறை கொண்டது. இரண்டும் மோதிப் பிணைந்தபோது உருவான கருந்துளையின் நிறை, சூரியனை விட 62 மடங்கு அதிகம்.

மீதமுள்ள மூன்று மடங்கு சூரிய நிறை, ஈர்ப்பலைகள் வடிவில் பரிசுத்தமான ஆற்றலாக மாறிவிட்டது. அந்த ஈர்ப்பலைகளின் சத்தத்தை லிகோ ஆய்வகம் கேட்டு, இந்த முக்கியமான கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தது.


உயிரினங்களின் இறுதிப் பொது மூதாதையின் வரைபடம்

ஜெர்மனியைச் சேர்ந்த உயிரி -வேதியியலாளர் பில் மார்ட்டின் உயிரினங்களின் இறு திப் பொது மூதாதையின் கிளை-வரை படத்தை வெளியிட்டிருக் கிறார்.

ஒரு செல் உயிரினங்களின் டி.என்.ஏ.க்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் அடிப் படையில் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்.

புவியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் ஒரு பொது மூதாதை உண்டு என்ற கருத்து அறிவியல் உலகில் நிலவுகிறது. எந்தக் கட்டத்தில் அந்தப் பொது மூதாதையிலிருந்து உயிர்கள் வெவ்வேறு வடிவில் கிளைத்தன என்பது குறித்த தேடல்தான் இது.

இந்தப் பொது மூதாதை நாம் கண்ணால் காணக் கூடிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாக்டீரியா அளவில்தான் இருந்திருக்கும் என்பது இந்தக் கிளை வரைபடத்தில் தெரியவருகிறது.

உயிர்களின் தொட்டிலான கடல்களில் அப்போது நிலவிய மிக அசாதாரணமான சூழலில் அவை எப்படி வாழ்ந்திருக்கும் என்பது குறித்தும் பில் மார்ட்டின் விளக்கி யிருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner