துபாய் நகரில், புதிய கட்டடங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள், துபாயில் கட்டப்படும் கட்டடங் களில் குறைந்தது, 25 சதவீதமாவது கட்டடம் கட்டுவதற்கு உதவும் பிரமாண்டமான முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் கட்டப்பட வேண்டும் என, அறிவித்துள்ளது.

அய்க்கிய அமீரகத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி, கடும் விமர்சனங்கள் உண்டு.

இதை தவிர்க்கவும், கட்டுமானச் செலவுகளை குறைக்கவுமே, துபாய் மாநகர நிர்வாகம் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தை நாடியிருக்கலாம் என்கின்றனர் வல்லுனர்கள்.

கட்டடங்களுக்கான, ‘3டி’ அச்சு தொழில்நுட்பம், பொருள் விர யத்தை குறைக்கவும், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உதவுகிறது.

தவிர, ஓரிரு மாடிக் கட்டடங்களை, ஒரே நாளில் கட்டி முடித்து விடுகின்றன. இதனால், கட்டுமானச் செலவில் பாதிக்கு மேல் குறைகிறது.

எனவே, 2019இல், ஒரு கட்டடத்தின், 2 சதவீத பகுதியாவது, ‘3டி’ அச்சியந்திரம் மூலம் கட்டப்பட வேண்டும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 2025இல், 25 சதவீத கட்டடம், ‘3டி’ அச்சியந்திரம் மூலம் கட்டப்பட வேண்டும் என, துபாய் முடிவு செய்து உள்ளது.


காகிதத்தால் ஆன எளிய மின்கலன்!

காகிதத்தால் ஆன எளிய மின்கலனை நியூயார்க் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

மின் கலன்கள் கனமானவை, குப்பைக்குப் போனால் சுற்றுச்சூழலைக் கெடுப்பவை. எனவே தான், சுற்றுச்சூழலைக் கெடுக்காத, இலகுவான பேட்டரிகளை உருவாக்க ஆராய்ச்சிகள் வேகமாக நடக்கின்றன.

நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மெழுகு தடவிய காகிதத்தில் உலோகம் மற்றும் பாலிமரால் ஆன சர்க்யூட்டுகளை அச்சிட்டுள்ளனர்.

இந்தக் காகித அடுக்குகளுக்கு இடையே எலக்ட்ரான்களை அறுவடை செய்யும் பாக்டீரியாக்களை நிரப்பியுள்ளனர்.

இந்த காகித பேட்டரியை லேசாக அழுத்தினால், பாக்டீரியாக்கள் துண்டப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது.

தற்போதைக்கு காகித பேட்டரிகளால் ஓரிரு சிறிய, எல்.இ.டி., விளக்குகள் அல்லது கால்குலேட்டர் போன்றவற்றை மட்டுமே இயக்க முடிகிறது.

என்றாலும் விரைவில் சற்று பெரிய கருவிகளை இயக்கும் அளவுக்கு மேம்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 

 

ரோபோக்களில், உலோ கங்கள், மோட்டார்கள் பொருத்திய முரட்டு ரகம்தான் பிரபலம். ஆனால், நுண் மென் ரோபோக் களையும் விஞ்ஞானிகள் பரி சோதித்து வருகின் றனர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆஸ்தி ரேலிய சிலந்தியின் வடிவத்தை பின்பற்றி, மிகச் சிறிய ரோபோவை உருவாக்கி உள்ளனர்.

இந்த ரோபோ, சிலிகான் படலங்களால் ஆனது. இந்தப் படலத்திற்குள் உருமாறும் திறனுள்ள சில பொருட்களை செலுத்தி, ரோபோவின் இயக்கத்தை துல்லியமாக கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒரு நாணயத்தைவிட சிறிய அளவில் இருக்கும் இந்த நுண் மென் ரோபோக்களை, உடலுக்குள் செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகளுக்கான கருவியாக பயன்படுத்த முடியும். மருத்துவ உலகிற்குள்ளும், ரோபோக்கள் நுழைய ஆரம்பித்துவிட்டன!


காற்றை அளக்கும் செயற்கைக் கோள்!

காற்று வீசும் திசையை, வேகத்தை நன்கு புரிந்து கொண் டால், வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்க லாம். இதற்குத் தான், அய் ரோப்பிய விண்வெளி முகமை, இ.எஸ்.ஏ., அண்மையில், ‘இயோ லஸ்’ செயற்கைக் கோளை ஏவியது.

இயோலசில் உள்ள, ‘அலா டின்’ என்ற நவீன லேசர் கருவி, பூமி மீது லேசர் துடிப்புகளை அனுப்பும். அது, பூமியின் மேல் பட்டு திரும்பும் பாதையில் குறுக்கே வரும் காற்று, அந்த லேசர் கதிரில் மாறுதலை உண்டாக்கும்.

அந்த மாற்றத்தை அளப்பதன் மூலம் காற்றின் திசை, வேகம், வகைகள் போன்றவற்றை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியும்.

அடுத்த சில வாரங்களில் முழுமையாக செயல்படவிருக்கும் இயோலஸ், மூன்று ஆண்டுகளுக்கு பூமியின் வளி மண்டலத்தைக் கண்காணிக்கும்.


உணவு உண்ணாமல் இருந்தால் இளமை திரும்புமா?

உணவுக் கட்டுப்பாட்டுக்காக சாப்பிடாமல் இருப்பதால் என்னபயன்? உடலின் எடையைக் குறைப்பதைத் தவிர, அது வயதையும் குறைக்க உதவும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.

அவ்வப்போது உணவு உண்ணாமல்  இருக்கும் போது, உடலுக்குள், ‘கீடோசிஸ்’ என்ற ஒரு வேதியல் நிகழ்வு நடக்கிறது.

உடல், தெம்புக்காக குளூகோசை நாடாமல், உடலில் சேமிக்கப்பட்டுள்ள உபரி கொழுப்பை செரிக்கிறது. உடலில் தெம்பு தரும் சில வேதிப் பொருள்களும் இருக்கின்றன.

அவற்றை, ‘கீடோன்’ என விஞ்ஞானிகள் பெய ரிட்டுள்ளனர். இந்த கீடோன்களில் பீட்டா ஹைட்ராக் சிபியூடைரேட் என்ற மூலக்கூறும் உள்ளது.

இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்களின் செல் களை வேகமாகப் பெருக்கி, உடல் முதுமையடையும் வேகத்தை மட்டுப்படுத்துவதாக ஒரு ஆய்வில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து

உள்ளனர்.

இந்த ஆய்வு எலிகளின்மேல் நடத்தப்பட்டது என்றாலும், மனிதர்களை அடுத்த, 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாதீர்கள் என்று சொல்வது கடுமையான சிகிச்சையாக இருக்கும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், உண்ணா நிலையில்  இருக்கும்போது உடலில் உருவாகும் இளமை தரும் வேதிப் பொருள்களை துல்லியமாக கண்டுபிடித்தால், அந்த வேதிப் பொருளை இதய நோய்கள், அல்சைமர்ஸ் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

காற்று வீசும் திசை யை, வேகத்தை நன்கு புரிந்து கொண்டால், வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம். இதற்குத் தான், அய்ரோப்பிய விண்வெளி முகமை, இ.எஸ்.ஏ., அண்மையில், ‘இயோலஸ்’ செயற்கைக்கோளை ஏவியது.

இயோலசில் உள்ள, ‘அலாடின்’ என்ற நவீன லேசர் கருவி, பூமி மீது லேசர் துடிப்புகளை அனுப்பும்.

அது, பூமியின் மேல் பட்டு திரும்பும் பாதையில் குறுக்கே வரும் காற்று, அந்த லேசர் கதிரில் மாறுதலை உண்டாக்கும்.

அந்த மாற்றத்தை அளப்பதன் மூலம் காற்றின் திசை, வேகம், வகைகள் போன்றவற்றை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியும்.

அடுத்த சில வாரங்களில் முழுமையாக செயல்படவிருக்கும் இயோலஸ், மூன்று ஆண்டு களுக்கு பூமியின் வளி மண்டலத்தைக் கண் காணிக்கும்.

மாலுமி இல்லாத படகு

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

நார்வேயைச் சேர்ந்த, ‘ஆப்ஷோர் சென்சிங்’ இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனையை செய்ய முயன்று தோற்றது.

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட மாலுமி இல்லாத படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில ஆயிரம் கி.மீ., பயணித்த பிறகு, தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு மீன்பிடி படகு, அந்த மாலுமி இல்லாத படகை மீட்டு வந்தது.

ஆனால், ஜூன், 7 அன்று நியூபவுண்ட்லாந்திலிருந்து புறப்பட்ட, ‘செய்ல் பயோய் மெட்’ என்ற மாலுமி இல்லாத படகு, 3,000 கி.மீ.,தொலைவில் உள்ள அயர்லாந்து கடற்கரையை, ஆகஸ்ட், 26 அன்று வந்தடைந்தது.

சூரிய மின் பலகையும், பாய் மரமும் பொருத்தப்பட்ட செய்ல் பயோய் படகில், மாலுமி இல்லாத தொழில்நுட்பக் கருவிகளுடன் கடும் காற்று, காட்டமான அலைகள் என, எல்லாவற்றையும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது.

ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே, கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும் என, வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Banner
Banner