பவன் கே.வர்மா

அரசோ, தனிப்பட்டவர்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, எவருமே குறுக்கிடுவதற்கு உரிமை இல்லாத விஷயங் களில் தனிமனித ரகசியம் பேணும் உரிமை என்பது  மனித இனத்திற்கே உரித்தான பெருவிருப்பமாகும். அரசமைப்பு சட்டத்தின் 14, 19, 21 ஆவது பிரிவுகளின்படியான இந்த அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் மூலம் மக்களுக்கு வழங்கி உள்ளது. தனிமனித ரக சியம் பேணுவதை அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதற்கு மறுத்து 63 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போதைய உச்ச நீதிமன்ற அமர்வு மாற்றி அமைத்துள்ளது.

நீதியரசர் சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது: குறுக்கீடு இன்றி சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை என்று விவரிக்கப்படும் தனிமனிதனுக்காக தனி இடத்தை  ஒதுக்கீடு செய்வது என்பது தனி மனித ரகசியம் பேணும் உரிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகும். தனி மனிதனின்  தன்னாட்சி என்பதன் மீது உருவாக்கப்பட்டது இந்த கோட்பாடு.

எது ஒன்றினையும் தேர்ந்து எடுப்பதற் கான ஒரு தனி மனிதனின் ஆற்றல் மனித இனத்தின் தனித் தன்மையின் மூலக்கருவாக அமைந்துள்ளதாகும். சட்ட விளக்கம் அளிக் கும் இந்தத் தீர்ப்பையும் கடந்து,  பல மிகப் பெரிய தத்துவக் கேள்விகளுக்கு  பதில் அளித்து விளக்கியும் இருக்கிறது இந்த நீதிமன்றத் தீர்ப்பு. ஒன்றுக்கொன்று முரண் பட்ட போக்குகளில் ஏற்பட்டுள்ள வளர்ச் சியை அண்மைக் காலத்தில் நாம் பார்த்து வருகிறோம். தனிப்பட்ட மனிதர்களின் வாழ் வில்  குறுக்கிடுவதற்கான   தொழில்நுட்பங்க ளின் ஆற்றல் அளவுக்கு மிஞ்சி பெருகி உள்ளது என்பது முதலாவது.  இதே காரணத் துக்காக, எத்தகைய தொழில்நுட்ப முன் னேற்றங்களுக்கு இடையேயும் தங்களது தனிமனித ரகசியம் பேணும் உரிமை பாது காக்கப்பட வேண்டும் என்ற பெருவிருப்பம் தனி மனிதரிடையே தோன்றியிருப்பது - உணரப்பட்டது இரண்டாவது. ஒன்றுக் கொன்று முரண்பட்ட இந்த இரண்டு நிலை களிடையே கருத்தொற்றுமை ஏற்பட இய லுமா?  அவ்வாறு ஏற்பட இயலுமானால், அதற்கான வழிமுறைதான் என்ன?

தனிமனித ரகசியம் பேணும் உரிமையைப் பற்றி எத்தகைய தெய்வீக உணர்வு கொண்டி ருக்கும் எந்த ஒரு மனிதரும், தனது ஆதாயத் துக்காக அந்த ரகசியத்தின் சில அம்சங்களை வெளிப்படுத்திக் கொள்வதை விரும்ப மாட்டார் என்று நான் நினைக்கவில்லை. எடுத்துக் காட்டாக, நான் செலுத்திய வருமான வரியில் ஒரு பகுதி திருப்பி  எனக்கு  அளிக்கப்படும்போது, அது எனக்கு எளிதில் கிடைப்பதற்காக, அந்தக் கணக்குகளை எனது வங்கிக்கு நான் அளிக்கவே வேண்டும்.

அதே போல, அரசின் சில நலத் திட்டங் களின் வாயிலாக  அரசு மானியம் போன்ற சலுகைகள் எனக்குக் கிடைக்கும்போது, அந்தப் பயன்கள் எனக்கே கிடைப்பதையும், கடந்த காலத்தில் பல சமயங்களில் நடந்தது போல  வேறு யாருக்கோ அவை சென்று விடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள் வதற்காகவும், கைரேகை, அங்க மச்ச அடை யாளங்களின் அடிப்படையிலான ஆதார் போன்ற ஒரு நடைமுறையுடன் ஒத்துழைப் பதற்கு நான் மறுக்கவோ, வெறுக்கவோ செய்ய மாட்டேன். அதனால் இந்த நோக்கத் திற்காக செயல்படும் டிஜிட்டல் மேடைகள் முறையான தகுதி பெற்றவையே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது பற்றி நீதியரசர் சந்திரசூட் தெரிவித்திருப்பதாவது: சமூக நலன்களைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு நாட்டின் அரசு, சமூகத்தின் வறுமை வாய்ப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பிரிவு மக் களின் நலன்களுக்கான செயல்  திட்டங்களை செயல்படுத்த முயலலாம். அரிதான இந்த பொது நிதிப் பயன்பாடுகள், தகுதி அற்றவர் களுக்கு மாற்றி அளிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் கடமை அரசுக்கும்  இருக்கிறது.

மறு பக்கத்தில், எனது நலன்களுக்காக நானே தானாக முன்வந்து,  அரசுடன் பகிர்ந்து கொள்ளும்  விவரங்களை, வேவு பார்த்தல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான நோக்கத் துடன் அரசு தவறாகப்   பயன்படுத்திக் கொள் வதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அரசின் அனைத்து செயல்பாடுகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்தினால் என்னைப் பற்றிய விவரங் கள் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது இரட்டிப்பு உண்மையாக ஆகிவிடு கிறது. ஒரு மக்களாட்சி நடைமுறையில் கருத்து வேறுபாடு கொள்வதற்கான உரிமை பற்றிய பெரியதொரு கோட்பாட்டுக் கேள்வி யுடன், தனிமனித ரகசியம் பேணும் உரிமை என்ற இந்தப் பிரச்சினை தொடர்புடையதாக ஆகிவிடுகிறது.

அதனால், உச்ச நீதிமன்றம் மிகவும் பொருத்தமாகவே, விமர்சிப்பதும், கண்டிப் பதும்  ஜனநாயக ஆட்சியின் மய்யக் கூறு களாக விளங்குபவையாகும். கருத்து மாறு பாட்டை சகித்துக் கொள்வது என்பதும் அதே அளவில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண் டிய ஒரு மதிப்பீடாகும். சமூக பொருளாதார உரிமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவை யான நிபந்தனைகள், அரசியல் சுதந்திரத்தை மறுப்பதற்கான, சீரழிப்பதற்கான  காரணங் களாக இருக்க முடியாது.

அதே போல, தனிமனித ரகசியம் பேணும் உரிமை பற்றி விவாதிக்கும்போது, மாட்டி றைச்சி மீதான தடை, கருக்கலைப்பு உரிமை கள், பாலியல் விருப்புகள்,  தற்கொலைக்கான உரிமை, தனியாக இருப்பதற்கான உரிமை  போன்ற ஒரு ஜனநாயக சமூகத்திற்கு முக் கியமாக விளங்கும் இதர பல அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  மாட்டிறைச்சி மீதான தடை போன்ற விவகாரங்களில்  நீதியரசர் சல மேஸ்வர், “தாங்கள் எதனை உண்ண வேண் டும், எவ்வாறு உடுத்த வேண்டும் என்று தங்களுக்குக் கூறப்படுவதை எவர் ஒருவரும் விரும்பமாட்டார்கள் என்று நான் நினைக் கிறேன்” என்று கூறியுள்ளார். கருக்கலைப்பு பற்றி பேசும்போது, “குழந்தையைப் பெற்றுக் கொள்வதா அல்லது கருக்கலைப்பு செய்து கொள்வதா என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்பதால்,  அதுவும் தனிமனித ரக சியம் பேணும் உரிமையுள் அடங்குவதாகும்” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மக்களின் பாலியல் விருப்பு பற்றிய உரிமை களைப் பற்றி பேசும்போது, நீதிமன்ற அமர்வு வெளிப்படையாகவும், துணிவாகவும் தெரி வித்துள்ளது: “நாட்டு மக்கள் தொகையில் ஒரு மிகமிகச் சிறிய சதவிகித மக்கள் மட்டுமே ஓரினச் சேர்க்கையை விரும்பும் ஆண்களா கவும், பெண்களாகவும், இருபால் உறவுகளை விரும்பும் மக்களாகவும், திருநங்கைகளாகவும்  இருப்பதுவே, தனிமனித ரகசியம் பேணும் உரிமையை மறுப்பதற்கான  அடிப்படையாக இருக்க முடியாது.”

உண்மையில், இந்த விவாதத்தை விரிவுபடுத்திய உச்ச நீதிமன்றம் “சில குறிப்பிட்ட உரிமைகளை  அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள  அடிப்படை உரிமைகள் என்ற அளவுக்கு உயர்த்தியிருப்பதன் நோக்கமே, பெரும் பான்மையின மக்களின் தாக்குதல்களில் இருந்து இந்த அடிப்படை உரிமைக ளைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான். புனிதமானவை எனக் கருதப்பட்டு அரசமைப்பு சட்ட பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளை மறுப்பதற்கு பொதுமக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை தகுதி வாய்ந்த அடிப்படையாகக் கொள்ள முடியாது”  என்று தனது தீர்ப்பில் தெரி வித்துள்ளது.

தனிமையில் இருப்பதற்கு அனுமதிக்கப் படும் உரிமை பற்றி பேசிய நீதியரசர் சஞ்சய் கே.கவுல்,  தொலை தூர பாதிப்புகளை ஏற் படுத்தும் வகையில்,  “இதுவரை சேகரித்து வைக்கப்பட்டுள்ள தன்னைப் பற்றிய தனிப் பட்ட விவரங்கள்,  அவை தேவையற்ற போதும், பொருத்தமாக இல்லாத போதும், தவறாக இருக்கும் போதும்,    இனியும் பாதுகாத்து வைத்திருக்கப் படத் தேவை யில்லை என்று ஒரு குடிமகன் விரும்புப் போது, அவற்றை நடைமுறையில் இருந்து நீக்குவதற்கு  அனுமதிக்கப்பட  வேண்டும்” என்று தீர்ப்பு அளித்துள்ளது.

தனிமனித ரகசியம் பேணும் உரிமையைப் பற்றி தீர்ப்பு அளித்த இந்திய உச்ச நீதிமன் றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள்  நமது ஜனநாயக நடைமுறையை பெரும் அளவில் பலப்படுத்த இயன்ற  சிலபல இதர பிரச் சினைகளைப் பற்றியும் குறிப்பாக இத்தீர்ப்பில் சேர்த்திருக்கின்றனர் என்பது மிகத் தெளி வாகத் தெரிகிறது.

அதே நேரத்தில்,  வறுமை வாய்ப்பட்ட வர்கள் மற்றும்  வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் நலன்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றவியல் விசாரணை போன்ற குறிப்பிட்ட பொதுநலச் செயல்பாடுகளுக்குத் தேவை யான, நியாயமான வெளிப்படையான, காரணங்களுக்காக, அத்தகைய தனிமனித உரிமைகள் மீது நியாயமான கட்டுப்பாடு களை அரசு விதிக்கலாம் என்று கூறியதன் மூலம், இந்த ஒருமனதான தீர்ப்பு  நியாயம் வழங்கவதில் ஒரு சமன்பாட்டை நிலைநிறுத் தியுள்ளது.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதானால், இந்தத் தீர்ப்பின் மூலம், தங்களது தனிப்பட்ட விவ காரங்களில், தேவையற்ற முறையில் தங்களது உரிமைகளில் அரசோ மற்றவர்களோ தலை யிடுவதைப் பற்றி கேள்வி கேட்கும் உரி மையை மக்கள் இப்போது பெற்றிருக்கிறார் கள். இது நமது அரசமைப்பு சட்ட வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் ஆகும். இந்த இணையதள யுகத்தில்,  புள்ளி விவரங்களைத் தோண்டி எடுக்கும் தனியார்  நிறுவனங்கள் இனி எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். புள்ளி விவரங்களைப் பாது காப்பதற்கான பலமுள்ள ஒரு  முறையான நடைமுறையை அறிமுகப்படுத்துவற்கான முயற்சிகளில் அரசும் வேகமாக ஈடுபட வேண்டும். நமக்கு அதிக அளவில் பயன் அளிப்பவையாகவும், அதே நேரத்தில் அதிக அளவில் பாதிப்பையும் ஏற்படுத்த இயன்ற தொழில்நுட்ப யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம். வரலாற்று சிறப்பு மிகுந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாம் நன்றி பாராட்டுவோம்! நமக்கு நன்மை எது, தீமை எது என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை யிலும், அவ்வாறு செய்வதற்கான நமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கு உரிமை பெற்றவர்களாகவும் இன்று நாம் இருக்கி றோம்.

நன்றி: ‘டெக்கான் கிரானிகிள்’, 27-08-2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசி யாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இக்தியோசார்  என்று அழைக்கப்படும் அந்த உயிரினம் கடைசியாக சிப்பி மீன்களை உணவாக உட்கொண்டிருந்ததை, அதன் இரைப்பை பகுதியில் இருந்த எச்சங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தபோது அது வயது மூப்பு அடையாத இளம் ஊர்வனவாகவே இருந்துள்ளது.

இந்த வகை ஊர்வனவற்றுள் ஒரு இளம் உயிரினத்தின், தனித்துவம் மிக்க படிமம் ஒன்று கண்டெடுக்கப்படுவது இதுவே முதன் முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“அந்தப் படிமத்தின் விலா எலும்புகளுக்கு மத்தியில் கொக்கி போன்ற சிறிய அமைப் புகள் பாதுகாப்பாக இருந்தது,” என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீன் லோமக்ஸ் கூறுகிறார்.

“இவை வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த சிப்பி மீன்களின் துடுப்புகள். எனவே அந்த இளம் இக்தியோசார் இறக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு சிப்பி மீன்களே,” என்கிறார் அவர்.

இக்தியோசார்களின் சுமார் 1000 படிமங்கள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், இளம் மற்றும் புதிதாக பிறந்த இக்தியோசார்களின் படிமங்கள் மிகவும் அரிதானவையாகவே உள்ளன.

படிமமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த இளம் இக்தி யோசார் 70 செ.மீ நீளம் உள்ளது. டோர்செட் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் படிமத்தின் மண்டை ஓட்டை வைத்து அது இளம் வயதிலேயே உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நைஜல் லார்க்கின், பிரிட்டனின் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள லேப்வொர்த் அருங்காட்சியகத்தில் இருந்த இந்த இளம் உயிரினத்தின் படிமத்தின் முக்கியத்துவத்தை ஒரு ஆய்வின்போது அறிந்துள்ளார்.

ஆனால், அதுவரை அது எங்கு கண் டெடுக்கப்பட்டது மற்றும் அதன் வயது ஆகியன பற்றிய தரவுகள் ஆவணப் படுத்தப் படாமல் இருந்தன.

பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய் வாளர்கள் அந்தப் புதை படிமத்துடன் ஒட்டியிருந்த சிறிய பாறைத் துகளை ஆய்வு செய்ததில், அது 19.9 கோடி முதல் 19.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்தனர்.

“பாறை இடுக்குகளில் மறைந்து கிடக்கும் நுண்ணிய புதை படிமங்களைக் கண்டறிந்து ஆராய்வதன் மூலம் பல பல உயிரினங்களின் மர்மங்களை அறிய முடியும்,” என்கிறார் நைஜல் லார்க்கின்.

‘ஹிஸ்டோரிகல் பையாலஜி’ எனும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட் டுள்ளது.

வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக் குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவை களின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. இந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சித்திரத்தை தருகிறது.

புகைக்கரியில் உள்ள ஒரு முக்கியமான கூறு கறுப்பு கார்பன் ஆகும். நிலக்கரி உள்ளிட்ட புதை வடிவ எரிப்பொருட்களை முறையாக எரிக்காததனால் இது உருவாகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திநீயீரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தொழிற் சாலைகள் விரிவாக்கமடைந்தன. இதன் காரணமாக காற்று மாசடைந்தது. இதனால்,பெரும் பிரச்னைகள் உருவாகின.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் எரிக்கப்பட்ட நிலக்கரியானது, நகரங்கள் விரைவாக புகைக் கரியால் சூழ காரணமானது.

புகைக்கரி நகர்புறங்களில் வாழும் மனிதர் களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் செலுத் துகிறது என்பது கடந்த பல தசாப்தங்களாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், வெகு சமீப வரு டங்களில்தான், பருவநிலை மாற்றத்தில் இது ஏற்படுத்தும் தாக்கத்தினை ஒப்புக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

புகைக்கரி காற்றில் வெளியேற்றப்பட்டதும், அது சூரிய ஒளியை உறிஞ்சி, வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகரிக்கிறது. அந்த வெப்பம் நிலத்தை அடையும்போது, பனியும், பனிக்கட்டியும் விரைவாக உருக தொடங்குகின்றன. ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதற்கும், இதற்கும் தொடர்பு உள்ளது.

அமெரிக்காவில் தொழிற்கூடங்கள் மிகுந்து காணப்படும் உற்பத்தி பிராந்தியமான சிக்காகோ, டிட்ரொய்ட் மற்றும் பிட்ஸ்பெர்க் பகுதிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எவ்வளவு கறுப்பு கார்பன் வெளியாகியது என்பது குறித்த தரவுகளை கண்டறிய அமெரிக்க ஆய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

ஆனால், இந்த ஆய்வு, நூறாண்டுகளாக எவ்வளவு புகைக்கரி அமெரிக்காவின் இந்த பிரதேசங்களிலிருந்து வெளியாகி இருக்கிறது என்பதை கண்டறிய உதவி உள்ளது.

ஆய்வாளர்கள் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சியங்களில் தேடி அழைந்து, அங்குள்ள பாடும் பறவைகளின் சிறகு களில் படிந்துள்ள கறுப்பு கார்பனை அளவிட்டனர். அதாவது, அந்த பாடும் பறவைகள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவை, அவை புகை சூழ்ந்த காற்றில் பறந்திருக்கும். அந்த காற்றானது, அதன் சிறகுகளில் படிந்திருக்கும். இதனை ஆராய்வது மூலம், அந்த பகுதிகளில் உள்ள சூழலியல் மாசுப்பாட்டை கணக்கிடலாம் என்பதுதான் அவர்களின் ஆய்வின் நோக்கம்.

ஆய்வாளர்கள் புகைக்காற்று படிந்துள்ள சிறகுகளை, புகைப்படம் எடுத்து, அதில் வெளிச்சம் பாய்ச்சி, எவ்வளவு ஒளி எதிரொலிக்கிறது என்று அளவிட்டனர். புல அருங்காட்சியகம் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வேட்டின் இணை ஆசிரியர் ஷான் துபே, “நாங்கள் இயற்கை வரலாற்று சேகரிப்பு மய்யத்துக்குச் சென்றோம். அங்கு நூறு ஆண் டுகள் பழைய பறவைகள் பாடம் செய்து வைக்கப் பட்டு இருந்தன. அவை அழுக்கடைந்து, புகைக்கரி படிந்து இருந்தன.
அதனுடன் ஒப்பிடும்போது, இப்போதுள்ள பறவைகள் சுத்தமாக இருப்பதை கண்டோம். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அது தன்னை சுத்தப்படுத்தி இருக்கிறது. அதாவது, இப்போதுள்ள காற்றைவிட அந்த பறவைகள் வாழ்ந்த காலக்கட்டத்தில் காற்று மிக மோசமாக இருந்திருக்கிறது”

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அவர்கள் ஆய்வு செய்ததில், அந்த பறவைகள் மீது படிந்துள்ள கறுப்பு கார்பன் அளவு, 1900-களின் முதல் உச்சத்தில் இருந்திருப்பதை கண்டறிந்தி ருக்கிறார்கள்.

அமெரிக்கா கடுமையான அழுத்தத்தில் இருந்த போது, அங்கு நிலக்கரியின் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அப்போது காற்றின் மாசு குறைவாக இருந்திருக்கிறது என் பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

அமெரிக்காவில் தொழிற் பிரதேசங்களில் எந்தெந்த காலக்கட்டத்தில் எவ்வளவு காற்று மாசுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது என்ற கால வரிசையை புரிந்துக்கொள்ள இந்த ஆய்வு மிகவும் உதவி புரிந்துள்ளது.

கிருமிகளை கொல்லும் மரங்கள்!

நதிகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளை ஒட்டி, நிறைய மரங்கள் இருந்தால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க முடியும் என, ‘நேச்சர்’ இதழில் வந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது. உலகெங்கும் தொற்றுகள் உள்ள நீர் மற்றும் சுகாதாரமின்மையால் லட்சக்கணக்கான குழந்தைகள் அய்ந்து வயது நிறைவதற்குள்ளேயே இறந்து விடுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

நீர் நிலைகளை ஒட்டி நிறைய மரங்கள் இருந்தால், அவை தண்ணீரில் கிருமித் தொற்றுகள் உண்டாவதை தடுக்கும் வடிகட்டிகளாக செயல்படுவது முக்கியமான கண்டுபிடிப்பாக நேச்சர் இதழ் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்கு, 35 நாடுகளிலிருந்து புள்ளி விபரங்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீர் நிலைகளுக்கு அருகே மரங்களின் அடர்த்தி, 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், அப்பகுதியில் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவது, நான்கு சதவீதம் குறைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Banner
Banner