விண்வெளியில் எப்படித் தூங்குவார்கள்?எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது.  சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில்  உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்திய மில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந் திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.
எப்படி சிந்திப்பார்கள்?

விண்வெளிப் பயணம் என்பது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால், பூமியில் நிலவும் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இருக்காது. நம்முடைய உள்காதில் உள்ள புலனுணர்வு அமைப்பு, புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த அமைப்பு விண்வெளியில் செயல்படாது. அதன் காரணமாக விண் கலங்களுக்குள் எது நேராக இருக்கிறது, எது தலைகீழாக இருக்கிறது என்பதை மூளையால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். தனக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள தொலைவைக் கணிக்கும் திறன் விண்வெளி வீரர்களுக்குப் பாதிக்கப்படும். ஒரு பொருளின் பருண்மையை மூளை உணர்ந்து கொள்ளும் திறனும் பாதிக்கப்படும். விசித்திரமான புலனுணர்வு அனுபவங்கள் ஏற்படும்.

எப்படியென்றால், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே திடீரென்று தலைகீழாகக் கவிழ்ந்து விட்டதைப் போன்ற பிரமை ஏற்படும். சில நேரம், தாங்களே தலைகீழாகத் தொங்குவது போன்ற எண்ணமும் எட்டி பார்க்கும்.

இதனால்  நம்மைப்போல் இயல்பாகச் சிந்திப்பது, நிச்சயம் அவர்களுக்குக் கடினமாகவே இருக்கும். அதன் காரணமாகவே, விண்வெளி வீரர்-வீராங்கனைகள் விண்வெளிப் பித்து அல்லது விண்வெளி மந்தநிலையால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

விண்வெளியில் சதம் அடித்த இஸ்ரோ!

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி பொங்க கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இஸ்ரோவும் சதம் அடிக்கும் என அறிவித்தார். அதற்கு ஏற்ப பி.எஸ்.எல்.வி.யின் எக்ஸ் எல் மாடல் 37 ராக்கெட்டில் இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள் மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ் ரோ கடந்த வாரம் விண்ணில் ஏவியது. இதன் மூலம் இதுவரை ஒரே ராக்கெட்டில் 37 விண்கலங்களை விண் ணில் செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

இஸ்ரோவின் இந்த முயற்சியின் முக்கியத்துவம் 104 விண்கலங்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது மட்டுமல்ல. அத்தனை செயற்கைக்கோள்களைக் கிட்டத் தட்ட ஒரே உயரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றோடொன்று மோதிவிடாமல் விண்ணில் செலுத்தப் புது யுக்தியை வடிவமைத்ததுதான்.

மோதாமல் ஓடு!

செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடாமல் 104 செயற்கைக்கோள்களையும், ஒவ்வொன்றாக 510 முதல் 524 கி.மீ. உயரத்தில் வெறும் 12 நிமிடக் கால அளவில் விண்ணில் ஏவ வேண்டும் என்பதுதான் இஸ்ரோ முன் இருந்த சவால்.

அடுத்தடுத்த சவால்கள்!

அய்க்கிய அரபு எமிரேட்ஸ், சுவிஸ், அமெரிக்கா எனப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துப் பொதியாகக் கட்டுவது ஒரு சவால். கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் அவ்வளவு செயற்கைக் கோள்களையும் செலுத்துவது மற்றொரு சவால். இரண்டு பக்கமும் இரு வேறு எடையுடைய பையைக் கட்டி செல்லும்போது அதிலிருந்து ஒரு பை கழன்று கீழே விழுந்துவிட்டால் பேலன்ஸ் செய்வது எப்படிச் சிரமமோ, அவ்வாறு பல்வேறு எடைகளுடைய செயற்கைக் கோள்களை ஓன்றாக ராக்கெட்டிலிருந்து விடுவிப்பது மூன்றாவது சவால். வெறும் பத்து நிமிடத்தில் எல்லாச் செயற்கைக்கோள்களும் விடுபட்டு விண்ணில் செல்லும் பாதைகளைக் கண்காணித்து, அதனைப் பூமியில் உள்ள கட்டுப்பட்டு அறைக்குத் தெரிவித்து அந்தச் செயற்கைக் கோள்களைச் சரியான பாதைக்கு இயக்குவது பெரும் சவால்.

இந்தச் சாதனையைப் படிப்பினையாகக் கொண்டு மேலும் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் எட்டு வீடியோ கேமராக்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டன. இவை ராக்கெட் விண்ணில் செல்வது, பொதிகள் அவிழ்ந்து முறையாக விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படுகிறதா என்பதையெல்லாம் செல்ஃபி எடுத்துக் கண்காணித்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. இந்தத் தரவுகளை வைத்து மேலும் நுட்பமாக அடுத்த முறை செயல்படுத்தப் பாடம் கற்கலாம்.

நூற்றுக்கும் அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணில் முறையாக ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முதலில், மூன்றிலிருந்து நான்கு நானோசெயற்கைக் கோள்களைப் பொதிந்து குவாட்ராபேக் பொதியாகச் செய்தனர். இவ்வாறு 101 நானோசெயற்கைக்கோள்கள் 25 குவாட்ராபேக் பொதியாகப் பொதியப்பட்டன. முதலில் இந்திய விண்கலங்கள் மூன்றையும் விண்ணில் செலுத்திய பிறகு, இந்த 25 குவாட்ராபேக் பொதிகள் ஒவ்வொன்றாக விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்வெளியில் ஒரு குவாட்ராபேக் செலுத்தியதும், அந்தப் பொதியில் உள்ள ஒரு கதவு திறந்து அதில் உள்ள பொறி உள்ளே பொதியப்பட்ட நானோசெயற்கைக் கோள்களை விண்ணில் வெவ்வேறு கோணத்தில் தள்ளிவிடும். மொத்தம் 12 நிமிடக் கால இடைவெளியில் பதினான்கு கிலோமீட்டர் ராக்கெட் பயணத்துக்குள் அனைத்துக் குவாட்ராபேக் பொதிகளும் விண்ணில் செலுத்துவது கத்தி மீது நடப்பது போன்ற சவால்.

2013இல் அமெரிக்கா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்தச் சாதனையை முறியடிக்க 2014இல் ரஷ்யா 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அணுகுண்டு ஒப்பந்தத்தின் காரணமாக வீணாகிப்போன பழைய ஏவுகணைகளைப் புதுப்பித்து அமெரிக்காவும் ரஷ் யாவும் இந்தச் சாதனைகளைப் புரிந்தன. 2014-ல் 34 கியூப்சாட் செயற்கைக்கோள்களைச் சர்வதேச விண் வெளிக்குடில் பூமியைச் சுற்றிவரும்போது ஒவ்வொன் றாக விண்ணில் செலுத்தியது. ஆனால், ஒரே ராக்கெட் தனது ஒரே பயணத்தில் செலுத்தவில்லை என்பதால், இது சாதனையாகக் கருதப்படுவதில்லை.

இதற்கு முன்னர் இஸ்ரோ 2008இல் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் 2016இல் 20 செயற்கைக்கோள்களைச் செலுத்திச் சாதனை படைத்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல இப்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

பயன்கள் பல: புவியியல் ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழலைக் கண்காணித்து விபத்து ஏற்படும்போது அவசரத் தகவல்தொடர்பு தருவது உள்ளிட்ட பயன்கள் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் உண்டு.

மை இல்லாமல் காகிதத்தில் அச்சிடலாம்!  

பலமுறை பயன்படுத்துவதற்கு ஏற்ற காகித தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த காகிதத்தின் மேற்பரப்பில், ஒளி மூலம் அச்சிட முடியும். அச் சிட்டவற்றை வெப்பத்தின் மூலம் அழிக்க முடியும். இப்படி, 80 முறை ஒரே காகிதத்தை அச்சிட்டு பயன்படுத்தலாம். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த யோடோங்யின் மற்றும் அவரது அணியினர், உருவாக்கியுள்ள இந்த பல பயன் காகிதத்தின் மேல், புருஷ்யன் ப்ளூ என்ற மை மற்றும் டைட்டானியம் ஆக்சைடு ஆகியவை கலந்த கலவையை உருவாக்கினர்.

பிறகு அந்த கலவையை காகிதத்தின் மேல், பூசினர். இந்தப் பூச்சின் மேல் புற ஊதா கதிர்கள் மூலம் எழுத்துக்களை பிரதிபலித்தபோது, அவை அப்படியே காகிதத்தின் மேல் பதிந்தன.பதிந்த எழுத்துக்களை அப்படியே விட்டுவிட்டால், ஐந்து நாட்களில் அவை தானாகவே மறைந்து விடுகின்றன. காகிதத்தில் உள்ளதை, உடனே அழிக்க வேண்டு மெனில், 10 நிமிடங்களுக்கு வெப்பம் படுவது போல, அதை வைத்தால் போதும்.இந்த முறையில், 80 முறை அக்காகிதத்தை பயன் படுத்த முடியும் என்பதால், இதற்கு ஒரு நல்ல சந்தை உரு வாகும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், அதுவரை காத்திராமல், அக்காகிதத்தில் அச்சிடும் இயந்தி ரத்தை உருவாக்கும் முயற்சியில் இப்போதே விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.

இயற்கை உரமாகும் சிறுநீர்!

பிரேசிலில் உள்ள, ரியோ டி- ஜெனிரோவில், பொது கழிப்பறைகளில், சிறுநீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம், இனிய பாடல்களை பாட விடுகிறது, அந்நாட்டு அரசு. மது விருந்துகளுக்கு போய் வருவோரை, இத்தகைய கழிப்பறைகள் ஈர்க்கும் என்பது தான் காரணம். அதே போல, நெதர்லாந்து அரசு, பொது கழிப் பறைகளில் சிறுநீரை சேகரித்து, உரமாக தயாரித்து வினியோகிக்கிறது. அண்மையில், பிரான்சிலுள்ள, பாரீஸ் மாநகராட்சி, ‘யூரிட்ரோட்டாய்ர்’ என்ற புதுவகை கழிப் பறைகளை சோதித்து வருகிறது.‘முக நூல்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், சில ஆண்டுகளுக்கு முன், ஆக்குலஸ் ரிப்ட் என்ற மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தை, பல பில்லியன்கள் தந்து வாங்கினார். அண்மையில், ஆக்குலஸ் மீது தொடுக்கப்பட்ட விதிமீறல் வழக்கு ஒன்றில், பல நுறு கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த பின்னடைவுக்குப் பின்னும், விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும், மெய்நிகர் தொழில்நுட்பத்தை, வெகுஜன நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில், மார்க் உறுதியாக இருக்கிறார். காரணம், ஆக்குலசில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் பல தொழில் நுட்பங்கள், மெய்நிகர் துறையில், புதிய மைல் கற்களை எட்டும் விதத்தில் இருப்பது தான்.  மெய்நிகர் விளையாட்டு கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற வற்றை காண உதவும், சிறப்பு கண்ணாடி கள், துப்பாக்கி சுடுதல், பனிச் சறுக்கு, வாகனம் ஓட்டுதல் போன்ற காட்சிகளின் போது, அதில் பங்கேற்பவரின் கைகள் மற்றும் உடலும் தெரிய உதவும் கையுறை, உடை போன்றவற்றையும் ஆக்குலஸ் உருவாக்கி உள்ளது. அண்மையில், மார்க், தன் ஆக்குலஸ் ஆய்வகத்தில் மெய்நிகர் சாதனங்கள் அணிந்து, ‘ஸ்பைடர்மேன்’ விளையாட்டை, ஆடிப் பார்த்து மிகுந்த உற்சாகமடைந்தார்.

ஸ்பைடர்மேனின் கையிலிருந்து சிலந்தி நுல் பீய்ச்சி அடிப்பது போன்ற காட்சியில், மார்க் அணிந்திருந்த மெய்நிகர் கையுறையிலிருந்து, சிலந்தி வலை பீய்ச்சி அடிப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக தெரிந்ததாக, மார்க், தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். உலகெங்கும், 2016இல், மொத்தம், 63 லட்சம் மெய்நிகர் தலை அணி சாதனங்கள் மற்றும் இதர கருவிகள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 2017இல், இதைவிட மூன்று மடங்கு விற்பனையாகும் என்றும், மெய்நிகர் விற்பனை துறையினர் கணித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புல்லிலிருந்து ரப்பர் டயர்!

வாகனங்களுக்கான டயர்களை தயாரிக்க, ஏகப்பட்ட பெட் ரோலிய பொருட்கள் தேவை. மிகுந்த செலவு பிடிக்கும் இப் பொருட்களுக்கு மாற்றாக, மரம், புல் போன்ற இயற்கை பொருட் களிலிருந்தும் டயரை தயாரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். டயருக்கு தேவையான ரப்பரை பெற, பெட்ரோலி யத்தில் உள்ள, ‘அய்சோப்ரீன்’ என்ற மூலக்கூறுகளை பிரித்தெடுக்க வேண்டும். அமெரிக்காவிலுள்ள மின்னசோடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அண்மையில் இயற்கை பொருட்களிலிருந்தே, அய் சோப்ரீனை பிரித்தெடுத்து ரப்பரை தயாரித்துள்ளனர். தாவரங்களில் உள்ள குளுக்கோஸ் போன்ற சர்க்கரை பொருட்களை, நுண்ணு யிரிகளைக் கொண்டு, நொதித்தல் முறையில் பிரித்தெடுத்து உள்ள னர். அதன்பின், பல சிக்கலான வேதி வினைகளுக்கு ஆட்படுத்தி, அய்சோப்ரீனை, தனியாக எடுத்து ரப்பரை உருவாக்கி உள்ளனர். இப்படி உருவாக்கப்பட்ட, ரப்பரின் செயல்திறன் மேம்பட்டதாக இருப்பதாக, மின்னசோடா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவரான சைதன்யா கரம்சேது, கடல் நீரிலிருந்து குடிநீரை தயாரிக்க உதவும், எளிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

இன்று பூமியில் உள்ள, 8 பேரில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதே சமயம், உலகின், 70 சதவீதம் பகுதியை கடல் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த இரு தகவல்களையும் கவனித்த சைதன்யாவுக்கு கடல் நீரிலிருந்துதான் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க முடியும் என்று தோன்றியது.

அமெரிக்கா விலுள்ள ஓரிகன் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரிலுள்ள தனது பள்ளி ஆய்வகத்தில் ஆராய்ச்சியை துவங்கினார்.

கடல் நீரிலுள்ள உப்பை அகற்றுவது அதிக செலவு பிடித்தது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.கடல் நீரை குடிநீராக்க முயன்ற விஞ்ஞானிகள் இதுவரை, உப்புடன் பிணைந்திருக்கும், 10 சதவீத நீர் மூலக்கூறுகள் மீதுதான் கவனம் செலுத்தினர்.

ஆனால் உப்புடன் பிணையாமல் இருக்கும், 90 சதவீத நீரை கவனிக்கத் தவறிவிட்டனர். நான் உருவாக்கிய தொழில்நுட்பம் அந்த, 90 சதவீத நீரை பிரித்தெடுக்க உதவுகிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் சைதன்யா.

அவரது சில ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. அந்த நிதி அனைத்தும் அவரது யோசனைக்கான பரிசுகளாக குவியத்துவங்கின.

கடந்த ஜனவரியில், ரீஜெனரான் அறிவியல் திறமையாளர் களுக்கான தேடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான, 300 மாணவர்களில் சைதன்யாவும் ஒருவர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!    

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’  எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமானவற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லி விடும்.

இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும். பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அது தரும். நாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ், லேக்டோஸ், சார்பிட்டால் போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. இதனால் வயிற்றிலுள்ள உணவுகள் நொதித்தல் என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து, பின் சுவாசப் பையின் வழியே வெளியேற்றப்படும்.இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரி மானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு ஆறுதல். சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப் படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடுப்பு உயர ரோபோ ‘கேஸி!’

ரோபோவியலாளர்கள், ஆளைப் போலவே, ரோபோ, ஆளுயர ரோபோ என, படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபாடிக்ஸ் நிறுவனம், இடுப்பு உயர ரோபோவை, அதுவும், இடுப்பு வரை மட்டுமே உள்ள ரோபோவை உருவாக்கி ஆச்சரியப் படுத்தி உள்ளது.

நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கேஸி’ என்ற இந்த ரோபோ, இரு கால்களும், சுற்றிலுள்ளவற்றை பார்க்கும், கேமரா கண்கள் மற்றும் பலவித உணர்வான்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது. கடை கண்ணிக்குப் போய் வருபவர்கள், இதை உடன் அழைத்துச் சென்றால், திரும்பி வரும் போது, சாமான்களை சுமந்து வரும் திறன் கொண்டது. கூட யாரும்வராவிட்டாலும், இதையே கடைகளுக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி வரச் சொல்ல வும் முடியும். ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ரோபோ விஞ்ஞானிகள் முன் உருவாக்கிய, ‘அட்ரியாஸ்’ என்ற ரோபோவை அடிப்படையாக வைத்து, அதிலுள்ள குறைகளை போக்கி, கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், கேஸியை நேரடியாக நுகர்வோருக்கு விற் காமல், பிற ரோபோ தயாரிப்பாளர்களுக்கு விற்கவே, அஜிலிட்டி விரும்புகிறது. அதாவது, பிற ரோபோ கம்பெ னிகள், கேஸியை அடிப்படையாக வைத்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கூடுதல் திறன்கள், வசதிகளை சேர்த்து விற்பனை செய்யலாம். மனிதர்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய, தேவையான அதே அளவு சக்தியை, தெம்பை மட்டுமே செலவிடும் வகையில், கேஸி உருவாக்கப்பட்டிருப்பதாக, அஜிலிட்டி விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Banner
Banner