இதயத் துடிப்பே கடவுச் சொல்!
புதிய தொழில்நுட்பம்

இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப் பையே கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிங்கம்டன் பல்கலைக்கழகப் பேராசியர் ஷன்பெங் ஜின் கூறியதாவது:

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பவையாகவும் உள்ளன.

அதனால், இந்தத் தொழில்நுட்பங்களை இணையவழி மருத்துவம், செல்லிடப் பேசி மூலமான மருத்துவம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானித்தோம்.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்றார் பேராசிரியர் ஷன்பெங் ஜின்.

அறிவியல் கல்லுரிகளில், முதன்முறையாக, ‘ஏரோநாட் டிக்ஸ்’ படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத் திட்டத்தை, பல்கலை மானி யக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.ஏரோநாட்டிக்ஸ் என்ற, விமானப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் படிப்பு, இதுவரை பொறியியல் கல்லூரி களிலும், பல்கலை.களிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந் தது. அதிலும், குறைந்த இடங் களும், அதிக கட்டணமும் உள்ளதால், பல மாணவர் களால் சேர முடியவில்லை.

ஏரோநாட்டிக்ஸ் துறை யில், தொழில்நுட்பப்பணியா ளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளி லும், பி.எஸ்சி., ஏரோநாட் டிக்ஸ் பட்டப்படிப்பை துவங்க, யு.ஜி.சி., உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, இந்தப் படிப்புக்கான புதிய பாடத்திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியி டப்பட்டு உள்ளது. இந்தப் பாடத்துக்கு, தரம் வழங்கும், கிரெடிட் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும், கல்லூ ரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேனீக்கள் ஏன் கொட்டியவுடன் இறந்து போகின்றன?

தேனீக்கள் தற்காப்புக்காகவும் தேனடையைப் பாது காக்கவும் தங்கள் கொடுக்கால் கொட்டுகின்றன. தேனீக்கள் கொடுக்கால் கொட்டியவுடன், கொட்டப்பட்ட உயிரி னத்துக்குக் காயம் ஏற்படுகிறது. கூர்முனை கொண்ட பல்சட்டம் போன்று அதன் கொடுக்கின் அமைப்பு இருப்பது சில வகைத் தேனீக்களுக்கும் சேர்த்தே காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதேநேரம் இதில் தற்கொலை செயல்பாடு எதுவும் இல்லை. ஒரு தேனீ மற்றொரு பூச்சியைக் கொட்டினால், தன் கொடுக்கை திரும்ப இழுத்துக்கொள்ள முடியும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதேநேரம் தேனீயின் கொடுக்கு ஆழமாகப் பாய்ந்தால், சம்பந்தப்பட்ட தேனீ உயிர் பிழைப்பது சந்தேகம்தான். பாலூட்டிகளின் தோலின் மீது தேனீ கொட்டும்போது, அதன் கொடுக்கு விடுபட முடியாத வகையில் தசையில் சிக்கிக் கொள்கிறது.

இதில் கொடுக்கை விடுவித்துக்கொண்டு தேனீ தப்பிக்க முயற்சி எடுக்கும்போது, அதன் அடி வயிறு கிழிந்துபோகிறது. சம்பந்தப்பட்ட தேனீ இறந்து போகிறது.

கொடுக்கால் கொட்டும் பூச்சிகளில் தேனீ மட்டுமே இப்படி செத்துப் போகிறது. அதேநேரம் ஒரு தேனடையைப் பாதுகாக்க இதுபோல சில வேலைக்காரத் தேனீக்களை இழப்பது தேனடையைப் பாதுகாக்கவே செய்கிறது.

தேனடையை எடுக்க வரும் யாரானாலும், தேனீயின் கொட்டுதலுக்குப் பயந்து அடுத்த முறை தேனடையைத் தொந்தரவு செய்ய யோசிப்பார்கள் இல்லையா, அதுவே ஒரு தேனடைக்குக் கிடைத்த வெற்றி.

Banner
Banner