பனிக்கட்டி உறைந்த துருவக் கடல் பகுதிகளில் வேட்டைத் திமிங்கிலங்கள் வசிப்ப தில்லை. சுவா சிப்பதற்கு பெரிய துளைகளை உடலில் கொண்ட திமிங்கிலங்களால், அப் பகுதிகள் இயற்கையான வாழிடங்கள் அல்ல.

ஆனால், கடலடி உயிரினங்கள் எழுப்பும் ஓசைகளை பதிவு செய்யும் விஞ்ஞானிகளுக்கு, சில ஆண்டுகளாக ஒரு வினோத ஒலியை வடதுருவக் கடல்களில் பதிவு செய்துள்ளனர். அது, திமிங்கிலங்கள் எழுப்பும், ‘கிளிக், கிளிக்‘ என்ற ஓசைதான்.

ரஷ்யாவுக்கும் அலாஸ்காவுக்கும் இடைப் பட்ட பெரிங் ஜலசந்தியில், 2009 - 2015 வரையிலான ஒலிப்பதிவுகளில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, திமிங்கில ஓசைகள் இருந்துள்ளன.

புவி வெப்பமயமாதலால், துருவக் கடல் பனி உருக ஆரம்பித்துவிடுகிறது. இதனால், திமிங் கிலங்களால் எளிதில் நீந்தி அப்பகுதிகளுக்கு வர முடிகிறது என, விஞ்ஞானிகள் கணித் துள்ளனர்.

இதனால், அப்பகுதிகளில் வால்ரஸ் முதல் துருவக் கரடிகள் வரை, இதுவரை திமிங்கிலங் களிடம் மாட்டாத பல்லாயிரம் கடல் சார்ந்த விலங்கினங்கள் இரையாகக்கூடும் என கடல் உயிரி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மனிதன் கடைசியாக நிலாவில் கால்வைத்து, 50 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப் போது, அய்.எஸ்.ஏ., எனப்படும் அய்ரோப்பிய விண்வெளி அமைப்பு, நிலாவின் வளங்களை ஆராய்ந்து வர, 2022இல் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதற்கென ஸ்பெயினில் உள்ள, லான் சாரோட் என்ற இடத்தில் நிலா மீது நடப்பது, அங்கு கருவிகளை கையாள்வது, நிலாவின் தரை வளங்களை தோண்டி ஆராய்வது போன்றவற்றுக்கு, விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகளை தந்து வருகிறது.

அமெரிக்காவின் அப்போலோ நிலா திட்டத்திற்கு உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகள் உதவும் என்றாலும், அமெரிக்கர்கள் நிலாவுக்குப் போய் வந்து இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டதால், அய்.எஸ்.ஏ., புதிய பயிற்சி உத்திகளையும், நவீன கருவி களையும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

நிலாவில் பூமியின் புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான் இருக்கிறது. எனவே, நிலாவில் வெகுதூரம் நடப்பது, தரையை தோண்டுவது போன்றவை, அய்ரோப்பியர் களுக்கு சவாலானதாக இருக்கும். அதற்கான நவீன பயிற்சி முறைகளையும் ஆய்வுக் கூடங்களில், அய்.எஸ்.ஏ., தர ஆரம்பித் துள்ளது.

நிலாவில் வீரர்கள் அணிந்துள்ள உடை, விண்வெளி வீரர்களின் அசைவுகளை கட்டுப்படுத்தும். சட்டென்று குனியவோ, மண்டியிடவோ முடியாது.

கையுறைகள் அணிந்திருப்பதால், கருவிகளை துல்லியமாக கையாள, நிறைய பயிற்சிகள் தேவை. இதை ஈடுகட்ட, அய்.எஸ்.ஏ., 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கும் கேமரா முதல், நுண் நோக்கி வரை வீரர்கள் நிலாவில் சுமந்து செல்வர்.

தவிர, நிலாவில் கிடைக்கும் தாதுக்கள், மண் குறித்து விண்வெளி வீரரின் சந்தேகங் களை போக்க, பூமியில் ஒரு நிலவியல் வல்லுனரின் நேரடித் தொடர்பும் ஏற்படுத்தித் தர, இ.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

 

வளரும் நாடுகளில் கூட, நடுத்தர குடும்பங்கள் வெயிலிலிருந்து தப்பிக்க, குளிரூட்டி வாங்கி மாட்டுகின்றனர். இந்த நிலையில், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று தடுக்க முடியாது.

எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விக்காத, எளிய குளிர்ச்சி தரும் சாதனங்களை உருவாக்க, 2018 நவம்பரில், வர்ஜின் குழும தலைவர் ரிச்சர்ட் ‘உலக குளிர்ச்சிப் பரிசு’ ஒன்றை அறிவித்தார். 21.35 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பரிசுப் போட்டிக்கு இன்னும் கெடு முடியவில்லை.

அதற்குள் சரியான போட்டியாளராக ‘சவுண்ட் எனர்ஜி’ தயாரித்துள்ள ‘தியாக்-25’ என்ற, குளிரூட்டி கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பேண்டு வாத்தியக் கருவி போலத் தெரியும் தியாக், குளிரூட்டி வெப்பத்தை ஒலியாக மாற்றி, பின், அந்த ஒலி ஆற்றலை குளிர் ஆற்றலாக மாற்றும் ‘தெர்மோ அக்குஸ்டிக்‘ தொழில் நுட்பத்தைக் கொண்டது.

தொழிற்சாலைகளில் உள்ள அனல் கக்கும் பெரிய இயந்திரங்களில் வெளிப்படும் வெப்பத்தை உள்வாங்கி, காற்றையோ, தண் ணீரையோ குளிர்விக்க முடியும் என்கிறது, சவுண்ட் எனர்ஜி.

தற்போது சவுண்ட் எனர்ஜி தயாரித்துள்ள, 25 கி.வா., சக்தி கொண்ட தியாக் -25 இயந்திரத்தால், -25 டிகிரி சென்டிகிரேடு குளிர்ச்சியை உருவாக்க முடியும். இந்தக் கருவியில் அசையும் பாகங்களோ, தற் போதைய, ‘ஏசி’க்களில் இருக்கும் வேதி திரவம் அல்லது வாயுவோ எதுவும் இல்லை என்கின்றனர் சவுண்ட் எனர்ஜியின் வடிவமைப்பாளர்கள்.

இதில் ஆர்கான் என்ற சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வாயுவை மட்டுமே பயன்படுத்து வதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு பெரிய ஆலைகள், கட்டடங்களுக்கு மட்டுமே இதை பொருத்த முடியும். ஆனால், சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் தியாக், குளிரூட்டிகளை விரைவில் அறி முகப்படுத்தப் போவதாக, சவுண்ட் எனர்ஜி அறிவித்துள்ளது.

அப்போது, குற்றஉணர்ச்சியின்றி எவரும் வீட்டிலேயே, குளிரூட்டி வாங்கி மாட்டலாம்.

Banner
Banner