ஒரு சாதாரண மனிதனால் உணவு இல்லாமல் 20 நாட்கள் உயிர் வாழ முடியும் ஆனால் நீர் அருந்தாமல் 2 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.

அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவதால் மூளையில் கட்டிகள் உண்டாக அதிக வாய்ப்பு இருகின்றது...!

ஒரு எலியால் ஒட்டகத்தைவிட அதிக நாள் நீர் இல்லாமல் வாழ முடியும்..!

பிறந்த குழந்தைகளுக்கு பார்வை கருப்பு வெள்ளை யாக தான் தெரியுமாம் ...!

நகங்கள் குளிர்காலத்தில் விட கோடை காலத்தில் தான் வேகமாக வளரும்....!

அதிகமாய் உணவு உண்ட பிறகு, உங்கள் கேட்டல் திறன் கணிசமான அளவு குறையும்...!.

வியாழனை சுற்றி வரும் நிலவான யுரோபாவில் பூமியில் இருக்கும் நீரை விட அதிக நீர் உள்ளதாம்...!

பூமியின் 71% மேற்பரப்பும் கடல் தான் என்கிற போதிலும் மனித கண்களால் காணப்பட்ட கடலின் அளவு வெறும் 5% மட்டுமே..!

ஏன் கடல் நீர் உப்பு கரிக்கிறது...?

ஓடும் ஆறானது போகும் வழியில் மண்ணின் தாது தன்மையையும் சேர்த்து எடுத்து செல்லும்... உப்பும் கொஞ்சம் அதில் இருக்கும். இது கடலில் போய் சேரும். பின் ஆவியாகி மீண்டும் ஆறாக மாறும் ஆனால் அந்த உப்பானது கடலிலே தங்கி விடுகிறது.இதனால் தான் கடல் நீர் உப்பு கரிக்கிறது.!

 

ஏற்கனவே 5 முறை அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32% உயிரினங்களின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்து வருவதுடன் அவற்றின் வாழ்விடங்களும் பெருமளவு சுருங்கி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சிறுத்தை, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட பாலூட்டிகளையும் சேர்த்து 9,000 முதுகெலும்பு உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவு சரிந்துள்ளது.

மொத்தமே 7,000 என்ற அளவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை, கடந்த 15 ஆண்டுகளில் 53% சரிந்துள்ளது. ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்களில் 40% சரிந்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ தீவுகளில் உராங்குட்டன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதனால் உயிரின பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் மனிதகுலத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய் வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமியில் நிலையாக நாம் நிற்க காரணமே ஈர்ப்புவிசைதான். பேனாவில் எழுத, சாப்பிட, குளிக்க என அனைத்துக்கும் ஈர்ப்புவிசை தேவை. ஈர்ப்புவிசை தினசரி வாழ்வில் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும் நமது உடலில் ஈர்ப்புவிசையின் தாக்கம் உண்டு.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட பின், ஈர்ப்பு விசை நமது உடலில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். ஏனெனில் ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில் உடல் தத்தளிக்கத் தொடங்குமே!

விண்வெளியில் சில காலம் பணி செய்த விண்வெளி வீரர்களுக்கு, உயரம் அதிகரித்தும், எலும்பின் அடர்த்தி குறைந்திருப்பதையும் கண்டறிந்த அறிவியலாளர்கள் முன்னும் பின்னுமான விண்வெளி பயண மாற்றங்களை பதிவு செய்ய முயற்சித்தனர். பூமியில் ஈர்ப்பு விசையற்ற அறையை உருவாக்கி, அதில் வீரர்களை தங்கவைத்து உடல்நலனைக் கண்காணித்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தனர். ஈர்ப்புவிசை பரப்பில் நமது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது, உடலின் மெக்கானோ ரிசெப்டர் மூலம் இது குறித்த தகவல்கள் உடனே மூளைக்கு கடத்தப்பட்டு ரத்தம் உறைதல் செயல்பாடு தொடங்குகிறது. இதுவே ஈர்ப்புவிசையற்ற சூழலில், செல்களின் இயக்கத்தில் அயனிகளின் செயல்பாடு அதீதமாகி, செல்களின் வளர்சிதை மாற்றம் முடக்கப்படுகிறது.

எலும்புகள் மெலியும், நோய்கள் பெருகும்!

1980களிலிருந்து செய்யப்படும் ஆராய்ச்சியிலிருந்து ஈர்ப்புவிசையற்ற இடத்தில் உடலின் மேற்பகுதியிலுள்ள மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்போது, உடலின் நிலையைப் பற்றி மூளைக்கு அறிவிக்கும் நியூட்ரான் ட்ரான்ஸ்மிட்டர்கள், மூலக்கூறுகளின் செயல்பாடுகள் தடைபடு கின்றன. விண்வெளி வீரர்களுக்கு உணர்வுரீதியான தடுமாற்றங்களும், புரிந்து கொள்வதில் தடையும் உருவாவது இதனால்தான். விண்வெளியில் ஒரு மாதத்திற்கு 1% எலும்பு அடர்த்தி குறையும். ஈர்ப்புவிசையற்ற நிலையில் புரதம் மற்றும் டிஎன்ஏ செயல்பாடு வளர்சிதைமாற்றம் தடைபடுவதால், புதிய எலும்பு திசுக்கள் உருவாவதில்லை. எனவே விண்வெளியில் உள்ள வீரர்களின் உடலில் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

விண்கலத்தில் முதலிலேயே நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படுகிறது. நாசாவின் அப்பல்லோ 13 விண்கலத்தில் பயணித்த வீரர், ஃப்ரெட் ஹைஸுக்கு     என்ற பாக்டீரியா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத் தாக்கும் இந்நோயை, ஈர்ப்புவிசையற்ற சூழலே உடலில் உண்டாக்குகிறது என்பது ஆய்வு உண்மை.

பாதிப்பை குறைப்பது எப்படி?

விண்வெளி வீரர்கள் செல்களுக்கு பாதுகாப்பு தர தினமும் 2 மணி நேரம்  உடற்பயிற்சி (பளு தூக்குதல், நடைப்பயிற்சி) செய்கிறார்கள். எலும்பு சேதாரத்தை இவை பெருமளவில் தடுப்பதில்லை.

செல்களின் வளர்சிதை மாற்றத்தை  கட்டுப்படுத்தி இயக்கும் நியூட் ரோட்ரான்ஸ்மிட்டரான வைப் பயன்படுத்திய போதும் விஞ்ஞானிகளால் இதன் இயக்கம்  ஏற்படுத்தும் உடலின் மாற்றங்களை தெளிவாக அறிய முடியவில்லை.

எளிதாக செரிமானம் ஆகும் நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகள் மூலம் ஈர்ப்பு விசையற்ற பாதிப்புகளைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். முன்பு பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய சவால்தான். ஆனால் அதனை நாம் கடந்துவந்திருப்பது நம் முயற்சிகளால்தான்.  இதனையும் கடந்து செல்வோம்.

Banner
Banner