விநோதமான சுருட்டு வடிவ விண் கல் ஒன்று சூரியனின் திசையில் அதிவேகமாகப் பயணித்து கொண்டிருந்தது கடந்த அக்டோபரில் வானியலாளர்களால் கவனிக்கப்பட்டது. இதில் வேற்றுக் கிரகத் தொழில்நுட்ப சாதனங்களோ, உயிரின் சுவடுகளோ இருக்குமா என்பதற்கான ஆராய்ச்சி தற்போது நடக்கிறது.

இதில் வழக்கத்துக்கு மாறான நீள வடிவிலான இந்த விண்கல் அக்டோபர் 19ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனுடைய கூறுகள், அந்தப் பொருள் இன்னொரு நட்சத்திரத்தில் இருந்து உருவானது என்பதை காட்டுகின்றன. நம்முடைய விண்வெளிப் பகுதியின் அருகில் கண்டறியப் பட்டுள்ள இத்தகைய முதல் பொருள் இதுவே.

செல்வந்தர் யுரி மில்னரால் நிதி ஆதரவு அளிக்கப்படும் ஓர் ஆய்வுத் திட்டம், இந்தப் பொருளில் இருந்து சமிக்கைகள் ஏதேனும் வருகிறதா என்பதைப் பார்க்க ஒரு ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தும்.

வானியலாளர்கள் இந்த விண்கல்லை கண்காணிக்கும் இந்த ஆய்வுக்குழுவின் முயற்சிகள் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த விண்கல் தற்போது நம்முடைய சூரிய குடும்பத்தில் இருந்து நான்கு வேறுபட்ட வானொலி அலைவரிசை பகுதிகளை விரைவாகக் கடந்து, சூரிய மண்டலத்தை விட்டு விலகிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வெஸ்ட் வெர்ஜீனியாவில் இருக்கும் ராபர்ட் சி பைர்ட் கிரீன் பாங்க் தொலைநோக்கியில் மேற்கொள்ளப்படும் முதல் கண்காணிப்பு ஆய்வு, 10 மணிநேரம் நீடிக்கும்.

‘ஒமுவாமுவா’ என்று அழைக்கப்படும் இந்தப் பொருளின் மீது நடத்தப்பட்ட முந்தைய கண்காணிப்புகள் விநோதமான, நீள வடிவத்தில் அதனை சுருட்டு போல தோன்றுவதாக காட்டியுள்ளன.

மில்னரின் ‘பிரேக்த்ரூ லிசன்’ திட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். “விண்மண்டலங்களின் வாயு மற்றும் தூசி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே செல்லும் ஓர் உத்தேச வாகனத்தின் வடிவம் ஓர் ஊசி போன்றதாகவோ, சுருட்டு போன்றதாகவோ இருக்கவே வாய்ப்பு உள்ளது,” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெர்க்லே எஸ்இடிஅய் ஆய்வக மய்யத்தின் இயக்குநர் ஆன்ட்ரூ சியமியன், “அதிவேகமாகச் செல்லும் விண் பொருள்களில் இருக்கச் சாத்தியமுள்ள டிரான்ஸ்பாண்டர்களை தமது அதி நவீன உணர்திறன் கருவிகளால் எட்ட முடிகிறதா என்பதைப் பார்க்க பிரேக்துரூ லிசன் திட்டத்துக்கு ஒமுவாமுவாவின் வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது,” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பொருள் செயற்கையானதாகவோ அல்லது இயற்கையானதாகவோ இருந்தாலும் கவனித்துப் பார்க்க உகந்த ஒன்று என்கிறார் சியமியன்.

இந்த திட்டத்தைச் சேராத, டோர்கிங்கிலுள்ள யுசிஎல் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ கெயேற்றடஸ், “இந்தப் பொருளில் உயிரின் தடயம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிவ தற்கான சோதனையாக இது இருக்குமென நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“இது மிகவும் சாத்தியமற்றது என நினைக்கிறேன், ஏனென்றால் அது வேறு எங்கோ உள்ள கிரக அமைப்பின் எச்சம். வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்வதற்கு சிறந்த வழிகள் 2020ஆம் ஆண்டு செலுத்தப்பட இருக்கும் ‘எக்ஸோமார்ஸ் திட்டம்‘ போன்றவையாகும். அதற்கு நாம் கேமரா அமைப்பை கட்டியமைக்கிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

“சாத்தியமில்லை என்றபோதும் கவனித்துப் பார்க்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

தரையில் அமைந்திருக்கும் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை கண்காணித்து ஆய்வு செய்துள்ள பிற ஆய்வாளர்கள், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள இயற்கைப் போலவே இது தோன்றுகிறது என்கிறார்கள்.

அதிக நோய்களைப் பரப்பும் ஈக்கள்

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும்.

மீன் உடலில் மின்சாரம்!

அதிசய மீனான ஈல், எப்படி உடலில் மின்சாரத்தை தயாரிக்கிறது... அது போல செயற்கையாக மின்சாரத்தை தயாரிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு, பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், அண்மையில் அமெரிக்காவிலுள்ள கலி போர்னியா, மிச்சிகன் மற்றும் பிரைபோர்க் பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘செயற்கை மின் உறுப்பு’ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஈல் மீன் 600 வோல்ட்டுகள் வரை மின்சாரத்தை உடலில் உற்பத்தி செய்ய உதவும், அதே முறையை ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்க முயன்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஈல் மீனின் உடலில் உள்ள, ‘எலக்ட்ரோசைட்’கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. எலக்ட்ரோசைட்டில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அயனிகள் வினை புரிவதால், மின்சாரம் உற்பத்தியாகிறது. எனவே, விஞ்ஞானிகள் ஒரு பிளாஸ்டிக் தாளில் ஹைட்ரோ ஜெல் குமிழிகளில் உப்புநீர் மற்றும் சாதாரண நீரை மாற்றி மாற்றி ஒட்டவைத்தனர். அவற்றை சவ்வுகளால் பிரித்தும் வைத்தனர்.

இந்த குமிழ்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட போது, மின் வேதி வினையால், 100 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தியானது.

இது, ஈல் தயாரிக்கும் மின்சாரத்தை விட மிகவும் குறைவு தான். ஆனால் விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ச்சி செய்தால், மின் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும் என, ‘நேச்சர்’ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித் துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால், இதய துடிப்புக் கருவி, கருவிழி மேல் பொருத்தும் மெய்நிகர் திரை, செயற்கை கை, கால் போன்ற உறுப்புகள் போன்றவற்றை இயக்க உதவும் மின்கலன்களை தயாரிக்க உதவும்.

கொசு ஒழிப்பில், ‘ட்ரோன்கள்!’

டெங்கு கொசுக்களை ஒழிப் பதற்கு, ஆளின்றிப் பறக்கும் சிறு வாகனங்களான, ‘ட்ரோன்’களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபல் கார்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வெள்ளோட்டமாக, அண்மையில் ஒரு ட்ரோனை வெற்றி கரமாக பயன்படுத்தி உள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீர் தான், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ் எஜிப்தி’ வகை கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடம். தரையில் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை முனிசிபல் பணியாளர்கள் பார்த்து, அக்கம் பக்கத்தினரை எச்சரிக்க முடியும்.

ஆனால், அடுக்குமாடி கட்டடங்களின் மொட்டை மாடியில், மழைநீர் அல்லது நீர்த்தொட்டிகள் நிரம்பி வெளியேறும் நீர் தேங்கியிருந்தால், அதை சோதனை இடுவது கடினம்.

எனவே, ஒளிப்படக் கருவி பொருத்திய ட்ரோன்களை, கட்டடங்களின் மேல் பறக்க விட்டு சோதித்து, நீர் தேங்கியிருந்தால், அதை வெளியேற்றும்படி, கட்டடத்தில் வசிப்போரை எச்சரிக்கலாம்.

ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம் நல்ல பலனளிப்பதாக வெள்ளோட்டத்தில் தெரிய வந்ததால், 2018 மார்ச் முதல், கொசு ஒழிப்பில் மேலும் பல ட்ரோன்களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபாலிட்டி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். குஜராத்திலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆடை போல் அணியும், ‘ட்ரிப்ஸ்’

நோயாளிகளுக்கு, ‘ட்ரிப்ஸ்’ மூலம் மருந்து செலுத்தும் போது, கூடவே, மருந்து புட்டியை தலைகீழாக தொங்க விடுவதற்கு, ஓர் உலோக ஸ்டாண்டையும் நிறுத்தி விடுவர்.

வாரக் கணக்கில் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டியிருந்தால், நோயாளியையும் இந்த ஸ்டாண் டையும் பிரிக்கவே முடியாது. இயற்கை உபாதைக்குப் போக வேண்டி இருந்தாலும், கூடவே இந்த ஸ்டாண்டும் வரும். இது போல அவஸ்தையை அனுபவித்த, அலிசா ரீஸ் என்ற டென்மார்க் வடிவமைப்பாளர், இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய, ‘அய்.வி., வாக்’ என்ற ட்ரிப்ஸ் பையை, நோயாளி தன் மேல் உடை போல அணியலாம்.பையில் மருந்துகளை ஊற்றி வைக்கலாம்.

அய்.வி., வாக்குடன் இருக்கும் ஒரு மின் பம்ப், மருந்தை குழாய் வழியாக உடலுக்குள் மெதுவாக செலுத்தும். எப்போதும் படுத்த படியே இருக்க நேரும் நோயாளிகள், அய்.வி.வாக்கை அணிந்து, சற்று காலாற நடக்க முடிந்தால், சீக்கிரம் குணடைய முடியும் என்கிறார் ரீஸ்.10.06.1934- புரட்சியிலிருந்து...

முதலில் கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லு கிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

நான் அறிந்த மட்டில் ஆட்டைக் கால்களைக் கட்டிக் கீழே தள்ளி கொம்பைப்பிடித்து ஒருவர் அமிழ்த்துக் கொண்டு வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க ஒருவர் நன்றாக மூச்சுவிடாமல் கட்டி சத்தம் போடாமல் செய்து ஒருவர் விதர்களை கிட்டி போட்டு நசுக்க, மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்து கிழித்து அதன் சிற்சில உறுப்புகளைத் தனித்தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப் படுகிறதாம்.

இது சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக் கூடிய ஜாதியார் செய்யக்கூடியதா? அகிம்சைக்காரருக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள் மேல் ஜாதிக் காரர்களா? இவர்களுக்குப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா?

மற்றவர்களைப் பார்த்து கீழ் ஜாதியார் என்றும், ஜீவகாருண்யமில்லாத வர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் பாவிகள் என்றும் பாதகர்கள் என்றும் அழைக்க இவர்களுக்கு உரிமை உண்டா? யோசித்துப் பாருங்கள்.

ஆடு, கோழியைத் தலைகீழாகப் பிடிப்பதையும், தர, தரவென்று இழுப்பதையும் ஜீவஇம்சை என்று சட்டஞ்செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்யவேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதைத் தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதிதானே மனிதர்க்கும் ஏற்படும். மத சம்பந்தத்தில் அரசாங்கம் நுழைவ தில்லை என்று சொல்லி அரசாங்கம் சுலபமாய் தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் நாளைக்கு நரமேதியாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைப் பாதகம் செய்தால் மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்குமா?

அது போலவே இப்போது கருதி இப்படிப்பட்ட மூர்க்கத் தனமான சித்திரவதைக் கொலைகளையும், இம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக்கூடாது?

ஜீவகாருண்யம்
10.06.1934- புரட்சியிலிருந்து...

இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்குவார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியாதையும், ஜீவகாருண் யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால், சாப்பிட்டால் அவர்களிடம் குரோதமும், வெறுப்பும் கொள் ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு முகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கட்சிகளும் உண்டாகின்றன. இந்துக்களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப்படும் வகுப்பார், மாட்டு மாமிசம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக்காரர்கள் என்று கருதுவதாகவும், அதனாலேயே அவர்களைத் தொடுவதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப் படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதைச் சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப் பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்து கிறார்கள். அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டு விட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகாருண்யம் பலப்பல ஜீவன்கள் பெயரால் எத்தனையோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பட்சி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப்படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம். மக்கள் சமுக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்து கிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடைமுறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமான தென்றே சொல்லலாம்.

புரோகிதரும் திதியும் தம்பியின் சீற்றம் - அய்யரின் ஓட்டம்
(சித்திர புத்திரன்)

27.11.1943, குடிஅரசிலிருந்து...

புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு

8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது.

முதலியார்:  சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!

அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ?

முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?

அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.

தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?

முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி, சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம்! சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே! அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.

தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?

முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.

தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது? ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?

முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே! இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று!

மதப்பித்து
27.05.1934 - புரட்சியிலிருந்து....

மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்ட வனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் நட வடிக்கை என்பவை லட்சியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டி யதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தன் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிறமதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங் களையும் நடவடிக்கைகளையும் பிறமதக்காரன் பின்பற்றி நடக் கின்றானா என்பதையும் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரர்களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும்.
மற்றபடி அவரவர் மதக்குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது.

இதுதான்
இந்துமதம்:
சந்திரன்-தேய்வது ஏன்?

சந்திரனின் குரு வியாழன் பகவான் என்ற தேவகுரு குரு ஊரில் இல்லாத சமயம் குருவின் பத்தினியாகியதாரை என்பவளுடன் உடலுறவு கொண்டான் இப்படி குரு இல்லாத சமயத்தில் எல்லாம் காரியம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குருவே நேரில் பார்த்துவிட்டான்.

ஆத்திரங்கொண்டு,  உனது கலை நாளுக்கொன்றாய் குறைந்து  போகக்கடவது என்று சந்திரனுக்குச் சாபமிட்டு விட்டான் குரு.
அதிலிருந்துதான்! தேய்பிறை ஏற்பட்டதாம். மீண்டும் சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து. அடுத்த பதினைந்து நாள் தனது கலை வளர வரம் பெற்று விட்டானாம். அதுதான் வளர் பிறையாம். எப்படி?

 

முப்பரிமாண அச்சுத் துறையில் தொடர்ந்து பல புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘வால்யுமெட்ரிக்’ முப்பரிமான அச்சு  முறை மூலம் சில நொடிகளில், ஒரு முழு முப்பரிமாணப் பொருளை அச்சிட முடியும். வழக்கமான முப்பரிமாண அச்சு இயந்திரங்கள், ஒரு பொருளை அடுக்கடுக்காகவே அச்சிடும். இதற்கு அச்சிடும் பொருளின் சிக்கலைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் ஓரிரு நாட்கள்கூட ஆகும்.

ஆனால், வால்யுமெட்ரிக், 3டி பிரின்டிங் இயந்திரம், ஒரு பொருளை சில நொடிகளில் முழுமையாக அச்சிட்டுக் கொடுத்துவிடும். முப்பரிமாண உருவத்தை லேசர் ஒளிக்கதிர் மூலம் உருவாக்கும்,

‘ஹோலோகிராம்‘ தொழில்நுட்பம்தான் இந்த வேகமான அச்சுக்குக் காரணம். ஒரு தொட்டியில் திரவ பிசினை ஊற்றி, அதன் மீது லேசர் ஹோலோகிராமை விஞ்ஞானிகள் செலுத்துகின்றனர்.

திரவத்தினுள் குறிப்பிட்ட தொலைவு செல்லும் லேசர் குவியமடைந்து, குறிப்பிட்ட புள்ளியை பொசுக்கி, திரவத்தை அந்த இடத்தில் கெட்டியான திடப் பொருளாக்குகிறது.

இதே பாணியில், உருவாக்கப்பட வேண்டிய பொருளின் முழு ஹோலோகிராம் உருவமும் திரவத்தினுள் பாய்ந்து பொசுக்குவதால், சில நொடிகளுள், அச்சிடப்படவேண்டிய பொருள், பிசின் திரவத்தில் உருவாக்கப்பட்டுவிடும்.

அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம், கலிபோர்னிய பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் விஞ்ஞானிகள் கூட்டாக வால்யுமெட்ரிக் முப்பரிமாண அச்சு முறையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த முறையில், எவ்வளவு சிக்கலான அமைப்பைக் கொண்ட பொருளையும், சில நொடிகளில் அச்சிட்டு எடுக்கலாம் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளை வளர்ச்சியை
பாதிக்கும் காற்று மாசு!

பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு உலகெங்கும் காற்றில் இருக்கும் மாசுகளின் அளவு அபாயகரமாக அதிகரித்திருப்பதாக, ‘யுனிசெப்’ எச்சரித்துள்ளது.

சர்வதேச உச்சவரம்புக்கு அதிகமான அசுத்தங்கள் காற்றில் இருக்கும் பகுதிகளில், வசிக்க நேரிடும், 1.7 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவர் என யுனிசெப் கவலை தெரிவித்து இருக்கிறது. வாகனப் புகை, ஆலைப் புகை, புழுதி போன்றவை நுண்ணிய திவலைகளாக மாறி, காற்றில் பரவுகின்றன. இந்தத் திவலைகளை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுவாசிக்கும்போது, அவர்களது மூளைத் திசுக்களை சேதமாக்குகிறது.

இதனால், அக்குழந்தைகளது அறிவுத் திறனும் பாதிக்கப்படுகிறது என ‘காற்றில் உள்ள பேராபத்து’ என்ற உலக நாடுகளுக்கான யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த இரு பாதிப்புகளும், குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுவதும் பின்னடைவுகளை ஏற்படுத்த வல்லவை எனவும், அந்த அறிக்கை சொல்கிறது. தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் ஆகிய பகுதிகளில் இருக்கும் நாடுகளின் குழந்தைகள் கூடுதல் ஆபத்தில் உள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவாக
மாறும் கடல்  

உலகின் கடல்கள் அனைத்திலும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது வெகுவாக அதிகரித் திருக்கிறது.

இதனால், கடல் ஆமைகள், பல வகை மீன்கள் மற்றும் கடல் பறவைகளுக்கு பலவித நோய்களும் உடல் குறைபாடுகளும் ஏற்படுவதாக அய்.நா.,வின் கடல் பிரிவுத் தலைவர், லிசா ஸ்வென்சன் அண்மையில் கவலை தெரிவித்துள்ளார்.

கடல் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட் டப்படுவதை தடுக்க, உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வைப்பதும் ஆமை வேகத்திலேயே நகர்வது, இந்த சுற்றுச்சூழல் பிரச்சினையை பெரிதாக்கி வருகிறது.

மேற்கு பசிபிக் கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான, குவாம் தீவுப் பகுதியில்தான் உலகின் மிக ஆழமான கடல் பகுதி உள்ளது.

அந்தப் பகுதியிலேயே கூட, பிளாஸ்டிக் குப்பைகள் மண்டிக் கிடப்பதாக, சுற்றுச் சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உடை வடிவில் ஒரு பேட்டரி!  


மனித வியர்வையில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவிலுள்ள பர்மிங்ஹாம்டன் பல்கலை ஆராய்ச்சியாளர், சியோகியுன் சோய்.

இவர் ஏற்கெனவே உருவாக்கிய நுண்ணுயிரி எரிபொருள் கலன் தொழில்நுட்பம், பாக்டீரியாக்களால் முடுக்கப்படும் வேதியியல் மாற்றம் மூலம் மின் உற்பத்தியை செய்யக்கூடியது.

இப்போது அதே தொழில்நுட்பத்தை நூலிழைகள் வடிவில் உடையாக நெய்து காட்டியிருக்கிறார். இந்த உடையை அணி பவரின் வியர்வையில் உள்ள பாக்டீரியாக்கள், அந்த உடையி லுள்ள, நுண்ணுயிரி எரிபொருள் கலனில் மின் உற்பத்தியை தூண்டும். அதாவது உடை வடிவிலான பேட்டரி இது!

ஒரு உடையில், 35 உயிரி பேட்டரிகளை வைத்துத் தைக்க முடியும் என்கிறார் சோய். இதனால், இந்த வகை மின்சார பேட்டரி உடையை, நெசவு ஆலைகளில் பெரிய அளவில் தயாரிக்க முடியும் என்றும் சோய் தெரிவித்துள்ளார்.

புதிய சூரியக் குடும்பம்

பூமி உட்பட எட்டுக் கோள்களைக் கொண்ட சூரியக் குடும்பத்துக்கு இணையான புதிய சூரியக் குடும்பத்தை முதன்முறையாக கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக நாசா கண்டறிந்துள்ளது.

டிசம்பர் 14 அன்று, கெப்ளர்-90 நட்சத்திரம் என்று இதற்குப் பெயர்சூட்டி அறிவித்தது நாசா. இது பூமியி லிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கெப்ளர் 90 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய சூரியக் குடும்பத்தின் சிறிய வடிவம் கெப்ளர்-90 நட்சத்திரக் குடும்பம் எனலாம்.

ஏனென்றால், இதிலும் சிறிய கோள்கள் உள்வட்டத்திலும் பெரிய கோள்கள் வெளிவட்டத்திலும் உள்ளன. ஆனால், அத்தனை கோள்களும் ஒன்றுக் கொன்று நெருக்கமாக இருக்கின்றன என்றார் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரி யரும் நாசா விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ வாண் டர்பர்க்.

வலியில்லாமல் உடலில் மருந்தை செலுத்தும் ஊசி

ஊசி போட்டுக்கொள்வதை வெறுப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. ஊசி ஏதும் இல்லாமல், மருந்துகளை உடலுக் குள் செலுத்த பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்று, அடுத்த ஆண்டு சந்தைக்கு வரலாம். ஜப்பானிய மருந்து நிறுவனமான, டகேடா, ‘பிரைம்‘ என்ற வலியில்லாமல் மருந்தை செலுத்தும் முறையை சந்தைப்படுத்த இருக்கிறது.

இந்த புதிய முறைப்படி, மருந்தினை ஒரு சிறப்பு குப்பியில் அடைத்து, மின்சார சவரக் கருவி போல இருக்கும், பிரைம் கருவியில் பொருத்தவேண்டும்.

அடுத்து பிரைம் கருவியை நோயாளியின் உடல் மீது வைத்து பொத்தானை அழுத்தியதும், மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் தோல் அடுக்கைத் தாண்டி, தசைத் திசுவைத் தாண்டி ரத்த நாளத்திற்குள் மருந்து சென்று விடுகிறது. திரவம் செல்லும் அகலம் தலைமுடியைவிடக் குறைவுதான். அரை வினாடிக்குள், ஒரு மில்லி மருந்தை, உடலில் செலுத்த முடியும். கூர்மையான ஊசி மூலம் மருந்தை செலுத்த, 10-15 வினாடிகள் ஆகலாம். ஆனால் பிரைம் கருவி மருந்தை துளியும்

வலியில்லாமல் உடனே செலுத்தி விடுகிறது.

அமெரிக்காவிலுள்ள எம்.அய்.டி., ஆராய்ச்சி நிலையம் பிரைம் மருந்து செலுத்தும் கருவியை பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கி, ஜப்பானிய டகேடாவிடம் விற்பனைக்குக் கொடுத்துள்ளது.

தினமும், ‘இன்சுலின்’ போடவேண்டிய நீரிழிவு நோயாளிகள் முதல், தடுப்பூசி போட மறுக்கும் சிறுவர்கள் வரை, பலருக்கும் இந்த வலியில்லா ஊசி பிடிக்கும்.

Banner
Banner