நிலத்தடி நீர் என்பது உயிரினங்களுக்கு இயற்கை தரும் கொடை.

ஆனால், மனி தனின் செயல்கள் இதன் தூய்மையையும் பாழாக்கியிருக்கிறது.

கனடாவிலுள்ள, கல் கேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமியின் வெகு ஆழத்தில் ஊற்றெடுத்து, கற் பாறைகளுக்கு இடையே தேங்கியிருந்த நீரை எடுத்து ஆராய்ச்சி செய்தனர்.

அதிலும் கதிரியக்க அய்சோடோப்புகள் மிகச் சிறிய அளவு கலந்திருப்பது தெரியவந்தது. கடந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட அணு சக்தி சோதனைகளின் தாக்கமாக இது இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கட்டடம் கட்டும் ரோபோக்கள் பல பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்காவிலுள்ள எம்.அய்.டி., ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், யார் உதவியும் இல்லாமல், ஒரு முழு வீட்டைக் கட்டும் திறனுள்ள ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் பிளாட்பார்ம்‘ என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சக்கரங்களைப் பயன்படுத்தி நகர்கிறது. இதன் நீண்ட உலோகக் கரம், எல்லா திசைகளிலும் திரும்பும் லாவகம் கொண்டது.

இந்த உலோகக் கரத்தின் நுனியில் தேவைக்கேற்ப கருவிகளை மாட்டிக்கொள்ளலாம். இந்த கருவிகள் சிமென்ட், மணல், பனித் துகள், மரச் சிராய்ப்புகள் என, பல கட்டடப் பொருட்களைக் கையாளும் திறன் கொண்டவை.

கட்டடத்திற்கான வரைபடத்தை வைத்து, அவற்றுக்கு வேண்டிய பொருட்களை இந்த ரோபோ வாகனத்தில் வைத்துவிட்டால், ரோபோவே ராப்பகலாக உழைத்து முழு வீட்டைக் கட்டித் தந்துவிடும். இந்த ரோபோவால், பாலைவனம், பனிப் பிரதேசம், ஏன், செவ்வாய் கிரகத்தில் கூட கிடைக்கும் பொருட்களை வைத்து, வீடு கட்ட முடியும்.


மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை.

ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது.

இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப் பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் திருப் பினால், விமானம் வேகமாக பறந்து செல்லும்.

ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 300 கி.மீ., துரத்தை ஈகிளால் பறந்து கடக்க முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் அது பறக்கும் என்பதால் தான், அதை ஜெட் விமானம் என்று லிலியம் சொல்கிறது.

Banner
Banner