அண்மையில், தனியார் விண்வெளி அமைப் பான, ஸ்பேஸ் எக்சின், பால்கன் 9 ராக்கெட் சுமந்து சென்ற, ஒரு விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன், தானாகவே இணைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய, க்ரூ டிராகன் விண் கலன், விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து சுமந்து சென்று, அய்.எஸ்.எஸ்., நிலையத்தில் சேர்ப் பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

ஆனால், தற்போதைக்கு உண்மையான வீரர் களை வைத்து அனுப்பாமல், பொம்மை மனிதன் ஒன்றை, மட்டும் வைத்து அனுப்பி, வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். க்ரூ டிராகன் கலன், அய்.எஸ்.எஸ்.,க்கு, 180 மீட்டர் தொலைவில் இருந்து, மெல்ல தானாகவே அருகே சென்று, விண்வெளி நிலையத்தின், ஹார்மனி என்ற அறையில் திட்ட மிட்டபடி தானாகவே இணைந்தது.

பின், நிலையத்தில் இருந்த அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் இணைப்புக் கதவை திறந்து, தகுதிச் சோதனைகளைச் செய்தனர். எல்லாம் சரியாக இருக்கவே, அதிலிருந்த, 181 கிலோ எடையுள்ள உணவு மற்றும் கருவிகளை எடுத்துக் கொண்டனர்.

அய்ந்து நாட்கள் வரை இணைந்திருந்து, பின், க்ரூ ட்ராகன் கலன் பூமிக்குத் திரும்பும் ஒத்திகைக்குத் தயாராகும். அட்லான்டிக் கடலில் மென்மையாக இறங்க, அதில் பாராசூட்களையும், ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகள் வைத்து அனுப்பியுள்ளனர். இந்த வெள்ளோட்டம் வெற்றி பெற்றால், இத் தனை ஆண்டுகளாக சரக்குகளை மட்டும் எடுத்துச் சென்ற டிராகன் கலன், விண்வெளி வீரர்களுக்கான போக்குவரத்து வாகனமாகவும் செயல்படும்.

கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதி கரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது “ஆச்சரியமாக” இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப் பட்டு வருகிறது.

அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

காற்றில் உள்ள ஈரப்பதம்தான் மழைக்கு பதிலாக பனியாக பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும்.

விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தனர்?

எந்தெந்த இடங்களில் எல்லாம் பனி உருகுகிறது என்று காண்பிக்கும் செயற்கைக் கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந் தனர்.

மழை பொழிவு பதிவு செய்யப்பட்டபோது, 20 தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளோடு, இந்தப் புகைப்படங்களை சேர்த்தனர்.

இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள்,   என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அதில், ஆரம்பக்கட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது இரண்டு முறை மழை பொழிந்தது. அதுவே 2012ஆம் ஆண்டு இது 12 முறையாக உயர்ந்துள்ளது.

1979-2012ஆம் ஆண்டிற்குள், 300 தடவை களுக்கு மேல், மழைப் பொழிவானது பனிக் கட்டிகள் உருகுவதை தூண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மழை பொழிந்தால் என்ன ஆகும்?

குளிர்காலத்தில் மழைப் பொழிவு இருப்பது எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார் ஜெர்மனியில் உள்ள  கடல் ஆராய்ச்சி மய்யத்தை சேர்ந்த மரிலெனா ஒல்ட்மான்ஸ். இவர்தான் இந்த ஆராய்ச்சி யையும் வழிநடத்துகிறார்.

“இது ஏன் நடக்கிறது என்பது புரிகிறது. தெற்கில் இருந்து வரும் வெப்பக்காற்றுதான் இதற்கு காரணம். ஆனாலும், இது மழைப் பொழிவுடன் தொடர்புப் படுத்தப்பட்டிருப் பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு பேராசிரியரான கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்கோ டெடெஸ்கோ கூறுகையில், மழை அதிகரிப்பு இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

குளிர்காலத்தில் மழை பொழிந்தாலும், அது மீண்டும் உடனடியாக உறைந்து, அம் மழை மேற்பரப்பின் தன்மையை மென்மை யாகவும் அடர்த்தியாகவும் மாற்றிவிடும். வெயில்காலத்தில் விரைவாக பனி உருகும் சூழலை முன்கூட்டியே இது ஏற்படுத்திவிடும்.

பனி எவ்வளவு அடர்த்தியாக இருக் கிறதோ, அவ்வளவு வெப்பத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். இது பனியை விரைவாக உருகச் செய்யும்.

இது ஏன் முக்கியம்?

அட்லாண்டிக் பெருங்கடலின் வடக்கு மூலையில் இருக்கும் பெரும் பகுதிதான் கிரீன்லாந்து. அங்கு பெரும் அளவிலான பனி இருப்பதால், அங்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

நிலையான நேரங்களில், கோடைக் காலத்தில் உடைந்து உருகும் பனிக்கட்டிகளை, குளிர்காலத்தின் பனிப்பொழிவு சமன்படுத்தும்.

ஆனால், கடந்த சில தசாப்தங்களில், பெரும் அளவிலான பனிக்கட்டிகளை அப் பகுதி இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இது கடல் மட்ட உயர்வில் சிறு பங்கு மட்டுமே வகிக்கிறது என்றாலும், காலநிலை மாற்றத்தால், உருகும் நீரின் அளவு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது.

அதிகளவில் பாசி வளர்வதால், அங்கி ருக்கும் பனி அடர்த்தியாகி, இதனால் கிரீன் லாந்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளால் ஏற்படும் அபாயம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆர்க்டிக் பகுதிக்கு செல்லும் மாசு கலந்த காற்றால், அங்கு பாசி உருவாகிறது. உலகின் மற்ற பகுதிகளை விட, ஆர்க்டிக் பகுதி இருமடங்கு அதிகமாக வெப்பமாகி வருகிறது.

இது அய்ரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் காலநிலை அமைப்புகளை மாற்றலாம்.

மேலிருந்து தூக்கிப் போட்டால், தரையில் பட்டுத் தடுமாறாமல் நிற்கிறது. எட்டி உதைத்தால், கீழே விழாமல் சுதாரித்துக் கொள்கிறது. யாராவது மல்லாந்து விழ வைத்தால், நான்கு கால்களால் பின்னோக்கி தரையை உந்தி, லாவகமாக எழுந்துக் கொள்கிறது.

எல்லாவற்றையும் விட, விசுக்கென்று பின் னோக்கி பல்டி அடித்து, சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பிக்கிறது.

இதையெல்லாம் செய்வது, அமெரிக்காவிலுள்ள, எம்.அய்.டி.,யின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, ‘சீட்டா’ மினி ரோபோ தான்.

ஏற்கெனவே பெரிய அளவில், 41 கிலோ எடையில், சீட்டா ரோபோவை உருவாக்கி அசத்திய, எம்.அய்.டி., விஞ்ஞானிகள், இப்போது, வெறும், 9 கிலோ மட்டுமே உள்ள மினி ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

உருவம் சிறியது என்றாலும், பெரிய சீட்டா ரோபோவால் முடியாத, பல வேலைகளை செய்கிறது மினி.

வினாடிக்கு, 2.45 மீட்டர் வேகத்தில் மினி ரோபோவால் ஓட முடியும். வேகமாக நாலுகால் பாய்ச்சலில் ஓடும்போதே வேகத்தை குறைத்து நடக்கவும், விருட்டென்று அசல் சிறுத்தை போல வேகமெடுக்கவும் முடியும்.

இத்தனைக்கும் இந்த ரோபோவுக்கு இன்னும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதன் இயக்கத்திற்கு, பலவகை உணரிகள் உதவுகின்றன. மேலும் அது செல்லும் திசை, வேகம் போன்றவற்றை தொலைவியக்க முறையில், அதன் படைப்பாளிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

உலோக சிறுத்தையை உருவாக்கியதே சாதனை என்றால், அது ஏறக்குறைய மிருகத்தின் உடல் மொழியை வெளிப்படுத்துவதற்கு, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை எழுதியதும் பெரிய சாதனை தான்.

 

 

Banner
Banner