
நம் பேரண்டம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி உலகத்தைக் குலுக்கியவர் விண் அறிவியலாளர் கோப்பர் நிகஸ். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறதேயன்றி சூரியன் ஒன்றும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சொல்லி பழம் பஞ்சாங்கங்களுக்கு அடி கொடுத்தவர் அவர்.
கோப்பர் நிகஸ் தமது அந்த அதிரடி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட புத்தகத்தின் முதல்பதிப்பு நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது.
தொன்மைப் பொருள் ஆர்வலர்கள் குவிந்திருந்த அந்த ஏல விற்பனையில், கோபர் நிகஸ் புத்தகத்திற்கு எவ்வளவு விலை கிடைத்தது தெரியுமா? 22 லட்சம் டாலர்கள்! கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய்.
டி ரிவொல்யூசனிபஸ் ஆர்பியம் கொயலெசியம் (விண்ணக வட்டாரங்களின் சுழற்சி குறித்து) என்ற அந்த புத்தகம் 1543ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும்.