
இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு ஊக்கம் அளித்தது புத்த விகாரங்கள்தான் என்ற கருத்து நிலவுகின்றது. கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாத புத்தரை பிற்காலத்தில் புத்த மத ஆதரவாளர்கள் கடவுளாக அமர்த்தி வழிபட்டனர். இந்து மதத்தின் ஆதிக்கம்தான் அதில் பிரதிபலிக்கின்றதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். எப்படியிருந்தாலும் சரி, புத்தருக்கு முன்பு இந்தியாவில் உருவ வழிபாடு பிரபலமடைந் திருக்கவில்லை.
பீகார், புத்தமதப் பணிகளில் தலைமையிடமாக இருந்தது. புத்த விகாரங்களின் ஆதிக்கத்தினால் தான் பீகார் என்ற பெயர் கூட உண்டானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்து மதத்திலுள்ள பார்ப்பனப் பிரிவு புத்த மதத்துக்கு எதிராக கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. சங்கராச்சாரியாரின் பங்கு அதில் மிக முக்கியமானதாகும். இந்தக் கட்டத்தில் ஏராளமான புத்த விகாரங்களை இந்துக் கோவில்களாக மாற்றவும் செய்தனர். இன்று பீகாரில் ஜைனர்கள், பவுத்தர்கள், இந்துக்கள் ஆகியோருக்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. திரண்ட சொத்துகளும் பெரும் ஆடம்பரங்களும் இவற்றைச் சூழ்ந்து கிடக்கின்றன. வருமானம் அதிகமாக உள்ள சில தென்னிந்தியக் கோவில்களுடன் ஒப்பிட்டால் இவற்றின் நிலை மோசமானதாகும். இந்தக் கோவில்களில் தங்க நகைகளும் விலை மதிப்புமிக்க பிற அசையும் சொத்துகளும் காணாமல் போய்விட்டன. அவை எப்படி காணாமல் போயின என்பது அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்த ரகசியமாகும். விசாரணை நடத்த யாரும் இல்லாததால் குற்றவாளிகள் தப்புகின்றனர்.