Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதனுடையவும் பொருளினுடையவும் விசயத்தில், பொருட்களுக்கு பொருட்களோடும் சக்திக்கு சக்தியோடும் செயலுக்குச் செயலோடும் காரியத்திற்கு காரணத்தோடும் உள்ள தொடர்பு உறுதியானதும் மாற்றமில்லாததும் ஆகும் - ஒரு வட்டத்தின் விட்டமும், பரிதியும் போல. வட்டத்தின் விட்டத்துக்கும் பரிதிக்கும் உள்ள உறவை மாற்ற சர்வ வல்லமை படைத்த கடவுளாலும் கூற முடியாது. அப்படியிருக்கையில் பிரபஞ்சத்தின் நிலைகளைக் கட்டுப்படுத்தவும் இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தி மனித இனத்துக்கு மகிழ்ச்சி உண்டாக்கவும் மனிதனுடைய ஆராய்ச்சி ஆற்றலினாலும் பகுத்தறிவு உணர்வினாலும் மட்டுமே முடியும். மகிழ்ச்சிக்குப் பதில் துக்கமும், நன்மைக்குப் பதில் தீமையும் உண்டாகின்றதென்றால் அதற்குக் காரணம், செல்வத்தையும் மனித சக்தியையும் சமூக நன்மைக்காகப் பயன்படுத்தாததுதான். பெரும்பாலான நேரங்களில் பழைய நம்பிக்கைகளின் ஆதிக்கம்தான் இதற்கு காரணம். ஒரே பாதை வழியாக சுற்றுகின்ற சக்கரத்தின் போக்கை மாற்ற, சுற்றுகின்ற ஆற்றலில் கட்டுப்பாடோ மறுப்போ தேவையாகும். இங்கேதான் நிலை மறுப்பின் நிலை மறுப்பு ஆரம்பிக்கின்றது. நிலை மறுக்கப்பட்டவற்றின் நிலை மறுப்பின் வழியாகத்தான் மனிதன் அறியாமை இருளிலிருந்து அறிவின் வெளிச்சத்துக்கு வருகிறான்.                                 (ஆதாரம்: மதமும் பகுத்தறிவும் மலையாளத்திலிருந்து தமிழில் - அமலா)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்