
சங்கராச்சாரி பணம் திரட்டுவதன் கருத்து நாட்டில், எவ்வளவு முட்டாள்கள். மானமற்றவர்கள் உள்ளார்கள் என்பதைக் காண! நான் பணம் கேட்பது எனது 30, 35 ஆண்டு பிரச்சாரத்தால் எத்தனை மக்களுக்கு மான உணர்ச்சி வந்துள்ளது என்பதை கணக்குப் பார்க்கவே!
கடவுள் தங்களுக்கு நன்மை செய்வதற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காகத் தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்? - தந்தை பெரியார்

பிராமணர்கள் பிறவியிலேயே புத்திசாலிகளாமே? ஆம் எனில் பிறர் உதவியின்றித் தாமாகவே கற்றுக் கொள்ளட்டும், மற்றவர்கள் பிறவிலேயே திறமையற்றவர்களாமே? ஆம் எனில் அந்த மற்றவர்களுக்கே எல்லா படிப்பபையும் கொடுத்து விடட்டும். - விவேகானந்தர்
கடவுள் மனிதனை உற்பத்தி செய்யவில்லை, மனிதன் தான் கடவுளை உற்பத்தி செய்தான் பார்ப்பனரை லௌகீகப் பார்ப்பனர் என்றும், வைதீகப் பார்ப்பனரென்றும் இருபிரிவாகப் பிரிப்பதும், லௌகீகப் பார்ப்பனர் முற்போக்காளராய் இருப்பர் என்று நம்புவதும் முட்டாள் தனமாகும். அவர்கள் இருசாரரும் ஒரே உடம்பின் இரு கைகளைப் போன்றவர்கள்.

சாதி ஒழியவேண்டுமா? ஆம் எனில் மக்களின் மத விலங்கை, சாஸ்திரத்தளையை உடைத்தெறியுங்கள்; அவர்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மத நம்பிக்கை அழுக்குகளை அகற்றிச் சுத்தம் செய்யுங்கள். பிறகு சாதி தானாகவே மடிந்துவிடும்.
- டாக்டர் அம்பேத்கர்
ய சே! என்ன மனித சமுதாயமப்பா இது? பகுத்தறிவுவாதியை நாத்திகன் என்று கூறி நிந்திக்கிறார்கள். ஆராய்ச்சி உணர்ச்சியைப் பாவம் என்று சொல்லி பழிக்கிறார்கள். இந்த உலகத்தால் உண்மையை உணர்ந்து கொள்ளவே முடியாதா? -வின்வுட்ரீட்
ய புரோகிதர்கள் விஞ்ஞானத்திற்கு எதிரிகள், முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள், அறிவின் வளர்ச்சிக்கு தடைக்கற்கள் - உண்மை - அவர்களுக்கு பிடிக்காத பொருள், ஆராய்ச்சி அவர்களுக்கு தேவையில்லாத தொழில்.
ய எந்த மனுநூலை வேண்டுமானாலும் புரட்டிப்பாருங்கள். அதிலே வருகின்ற அசுரர்கள் இருக்கின்றார்களே அவர்களேதான், அதிலே வருகின்ற கடவுள்களை விட நமக்கு ஏராளமான நன்மை செய்தவர்களாக இருப்பார்கள். ஆம், நிச்சயமாக! - இங்கர்சால்
தொகுப்பு: நாத்திகன் எ.இராசன், மேல்நல்லாத்தூர் - திருவள்ளூர்