எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.7 மாற்றுத்திற னாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், திருத் தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசார ணையை ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த முருகானந்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளி களுக்காக வழங்கப்படும் வசதி களை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய உரிமை களை வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக் கையில், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்காக ரூ.545 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமி ழகம் முழுவதும் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 12 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

அந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள், மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி குறிப்பிடப்பட் டுள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை விட, அவர் களுக்கு வழங்கப்பட்டதாக குறிப் பிடப்பட்டுள்ள அடையாள அட் டைகளின் எண்ணிக்கை அதிக மாக உள்ளதாகக்கூறி அதிருப்தி தெரிவித்தனர். தாக்கல் செய்யப் பட்டுள்ள அறிக்கையை அதி காரிகள் முறையாக தயாரிக்க வில்லை என்றும் திருத்திய அறிக் கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசா ரணையை ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner