எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.7 நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 67 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கு உச்சநீதி மன்றம்  வேதனை தெரிவித்துள்ளது.

விசாரணைக் கைதிகளின் எண் ணிக்கையை குறைக்கவும், அதற்குரிய தீர்வு காணவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

சிறை சீர்திருத்தங்களை மேற்கொள்வ தற்காக உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில், நீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது.

இக்குழு முன்னிலையில் தேசிய சட்ட சேவை ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின் படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 4.19 லட்சம் பேரை அடைக்க முடியும். இவர்களில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் மட்டும் 3.78 லட்சம் பேர் எனத் தெரிய வந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இது சுமார் 67 சதவீதமாகும்.

இவர்களின் எண்ணிக்கையை குறைக்க விசாரணைக்கைதிகள் ஆய்வுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் 2019ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு மாதமும் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் முழு தகவல்களையும் சேகரித்து அந்தந்த மாநிலங்களில் இயங்கி வரும் சட்ட சேவை மய்யங்களின் மூலம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னர், மாவட்ட வாரியாக சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விசா ரணைக் கைதிகளை ஆய்வுக்குழு மூலமாக கணக்கெடுத்து, அவர்கள் சார்ந்துள்ள வழக்குகளின் தன்மைக் குறித்தும், அவர்கள் விடுதலை செய்யத் தகுதியான வர்களா அல்லது பிணையில் விடுவிக்க தகுதியானவர்களா அல்லது மன்னிப்பு வழங்கத் தகுதியானவர்களா என்பதையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிட் டுள்ளது.

அதேபோல, நாட்டிலுள்ள 1,382 சிறைச்சாலைகள் மனிதர்கள் இருக்க தகுதியற்றவையாக அறியப்பட்டுள்ளன. இவற்றையும் சரி செய்து, அங்குள்ள விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையின் வழக்குகளையும் வேகப்படுத்த வேண்டும்.

மேலும், ஆணையத்தின் அறிக்கைப் படி உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், சத்தீஸ்கர், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள பல சிறைச்சாலைகளில் நிர்ணயிக் கப்பட்ட அளவை விடவும் கூடுதலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கைதிகளின் எண் ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஆணையமும், ஆய்வுக்குழுவும் ஈடுபட வேண்டும். இது தொடர்பாக சிறைத்துறைத் தலைவருக்கும், அந்தந்த மாநில சட்டச் சேவை ஆணையத்துக்கும் அறிக்கை அனுப்பி அந்த ஆலோசனையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் குழு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner