எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், அக்.28 கன் னியாகுமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள பெரியார் மய் யத்தில் வைத்து மாவட்ட ப.க. தலைவர் உ.சிவதாணு தலை மையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட செயலாளர் சி.கிருஷ்னேஸ்வரி, மாவட்ட ப.க. செயலாளர் நாஞ்சில் எம். பெரியார்தாஸ், ப.க. அமைப் பாளர் இரா.லிங்கேசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, திருநெல்வேலி மண் டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி கூட் டத்தின் நோக்கங்கள் குறித்தும் பகுத்தறிவாளர் கழகத்தின் எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விரிவாக சிறப்புரையாற்றினார்.

தக்கலை ஒன்றிய தலைவர் ஆர்.இராஜீவ்லால், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, மேலராமன் புதூர் கிளைக் கழக செயலாளர் பி.கென்னடி, ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி செயலாளர் இராஜேஷ் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்திற்கு 100 உறுப்பினர்கள் சேர்ப்பது, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு 50 சந்தாக்கள் சேர்ப்பது, மாதந் தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழ மைகளில் குமரி மாவட்ட ப.க. சார்பில் கருத்தரங்கங்கள் நடத் துவது ப.க. மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் தோழர்கள் பங்கேற்பது போன்ற தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பகுத்தறிவாளர் கழக நெல்லை மண்டல துணைத் தலைவர் பிரின்ஸ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner