எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கில் மதிமாறன் உரை

காரைக்குடி, ஆக.20  காரைக்குடி பகுத் தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம், 13.10.2018 சனி மாலை எம்.ஏ.எம். மகாலில் நடைபெற்றது.

பக மாநில துணைத்தலைவர் மு.சு. கண்மணி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மண்டல கழகத் தலைவர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி,மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பக செயலாளர் ந.செல்வராசன் வரவேற்புரை வாசித்தார்.

நிகழ்வில் மண்டலத்தலைவர் சாமி திராவிடமணி, மண்டலசெயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி , பத்து ஆண்டு விடுதலை சேர்த்த நகர செயலாளர் திக கலைமணி  ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. சிறப் புரையாற்றிய எழுத்தாளர் வே.மதிமாறன் தனது உரையில், எந்த விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்காமல், அரசுகளோடு அனு சரித்துப் போகும் நகரத்தார் சமூகத்தை சமூகநீதிப் போரில் பங்கேற்க வைத்த சிறப்பு பெரியாரையே சேரும், பெரியார் பங்கேற்ற கானாடுகாத்தான் திருமண விழாவில் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின்  போர்க்குணத்தையும்,  அவருக்கு பெரியார் தந்த ஊக்கம் பற்றியும், வணக்கம் என்ற சொல்லை செட்டிநாட்டுப் பகுதியில் பிரபலப்படுத்திய திராவிட இயக்க தீரர்கள் இராம சுப்பையா, என்.ஆர்.சாமி ஆகியோரின் தொண்டு பற்றியும், காபி குடிப்பதில் உள்ள பார்ப்பனீய, முதலாளித்துவ மேட்டிமைத்தனத் தையும், தேநீர் குடிப்பதில்   உள்ள அரசியலையும் புதிய கோணத்தில் எடுத்துரைத்தார்.  தேவகோட்டை ஒன் றிய பக தலைவர் அ.அரவரசன் நன்றி கூறினார்.

நிகழ்வில் மாவட்ட பக துணைத் தலைவர் ந.தம்பிராஜா, ஆசிரியர் வி.முருகப்பன்,வழக்குரைஞர்பொற் கொடி, காளையார்கோயில் ஒன்றிய பக செயலாளர் சோ.சோமன், தேவகோட்டை நகரச் செயலாளர் வி.முத்தரசு பாண்டியன், ந.பாரதிதாசன், கல்லை ஒன்றிய கழக அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.பூமிநாதன், சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர் பெரு.இராச ராம், மாவட்ட துணைத்தலைவர் கொ.மணிவண்ணன், தலைமைக்கழக சொற் பொழிவாளர் தி.என்னாரசு பிராட்லா, பீர்முகமது, மமக, மஜீத், மமக, ராஜா முகமது, தமுமுக, ரியாஸ் முகமது தமுமுக, நெடுமரம் மணிவண்ணன், விசிக, சிற்பி விசிக, திருஞானம் பாமக, கபிலன், பாமக,கரு.சண்முகம் திமுக,

அ.மெய்யப்பனசெஞ்சை, பழ.ராமச் சந்திரன் சிபிஅய் பொதுக்குழு உறுப் பினர், காரைக்குடி நகர கழகத் தலைவர் ந.ஜெகதீசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், பக மாவட்ட துணை செயலாளர் தமிழினியன், மாவட்ட கழக துணை செயலாளர் இ.ப.பழனிவேல், சாக் கோட்டை ஒன்றிய செயலாளர் சி.செல் வமணி, பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் த.பாலகிருஷ்ணன், நகர பக செயலாளர் ஆ. பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் புரூனோ என்னாரசு, ப.சுந்தரம் பக, திராவிட இயக்க தமிழர் பேரவை ஸ்டீபன், நவில், பாகனேரி கனி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆறுமுகம், காரைக்குடி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ச மீ.ராசகுமார், நமது உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பிரகாஷ்,வழக் குரைஞர் கருணாநிதி, சிம்சன் மற்றும்பெருந்திராளாகபல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர் கள், அரசியல் கட்சி பிரமுகர்கள்  பங் கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner