எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, அக்.13 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் & பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக சிறப்புக்கூட்டம் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ. எஸ்.அரங்கில்  நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வர வேற்ற பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா.சட கோபன் சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருக்கும் பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் இயக்கத்திற் கும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உற்ற துணையாக எவ்வாறெல்லாம் இருக்கின்றார் எனப்பெருமிதத் தோடு குறிப்பிட்டு வரவேற்றார்.

திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் மதுரை மண்டலத்தலை வர் மா.பவுன்ராசா,செயலாளர் ந.முருகேசன்,மதுரை மாவட்ட தலைவர் சே.முனியசாமி,மாவட்ட செயலாளர் அ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படத்திறப்பு

அண்மையில் மறைந்த மதுரை  புறநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகச்செயலாளர் ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் படத்தினை வழக்கறிஞர் சித்தார்த்தன் கழகப் பொறுப்பாளர்கள்,ஆசிரியர் சங்கப்பொறுப்பாளர்கள், அவரின் மகன் ஜெ.சு.சித்தார்த்தன்,அவரது தங்கை ஜெ.கனகசித்ரா,அவரது கணவர் மற்றும் அவரது உறவி னர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.அவருக்கு வீரவணக்க மும், மரியாதையும் கூட்டத்தில் செலுத்தப்பட்டது.

திருமங்கலம் ஒன்றிய ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் பொ.விஜயபார்த்திபன், ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் ஆசிரியர் பணி, தொழிற்சங்கப் பணியைப் பற்றியும், தொழிற் சங்க ஈடுபாடு, தொழிற்சங்க அறை கூவலுக்கு ஏற்ப சிறைப் பட்டது போன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு மிக உருக்கமாக நினைவுரை ஆற்றினார்.

கொள்கையால் உருவான குடும்பம்

தொடர்ந்து அவரின் நினைவுகளைப்  பகிர்ந்துகொண்ட மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள்  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் சுப்பிரமணியும் ஒரே நிறுவனத்தில் பணி யாற்றினோம். இயக்கப்பணிகளில் இருவரும் இணைந்து ஈடுபட் டோம். அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் சொல்வதைப் போல கொள்கையால் உறவான குடும் பம் அவரது குடும்பமும் எனது குடும்பம் என உரையாற்றினார்.

தொடர்ந்து திராவிடர் கழகத் தின் மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் அவர்கள் மறைந்த ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் பற்றியும், செய்தியைக் கேட்டு துயரமடைந்த அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் உறுதியையும் அளித்ததைக் குறிப்பிட்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எல்லாம் குறிப்பிட்டு அதனை நிறைவேற்ற எல்லோரும் உழைக்க வேண்டும், ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். அடுத்து நீதிக்கட்சி- சுயமரி யாதை இயக்கம் என்னும் தலைப்பிலே உரையாற்றிய பேரா.முனைவர். நம். சீனிவாசன் அவர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம், வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயர்,டி.எம். நாயர் ஆகியோர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். நீதிக்கட்சியின் தோற்றம், வரலாறு,ஆட்சி, இயற் றிய சட்டங்கள், அதனால் பலன் பெற்றோர் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கணிப்பொறி போல அழகுற எடுத்துவைத்தார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த சுயமரியாதை இயக் கம், அதன் வளர்ச்சி, வரலாறு எனக் குறிப்பிட்டு நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக 1944இ-ல் உதயமானது எனக் குறிப்பிட்டார். வரலாற்றுத்தகவல்கள், நீதிக்கட்சி தலைவர்கள், நீதிக் கட்சி ஆண்டபோது முதல்வராக இருந்தவர்கள், அமைச்சராக இருந்தவர்கள் என அனை வரையும் வருடத்தோடு குறிப் பிட்டு சாதனைகளைப் பட்டிய லிட்டார். மிகச்செறிவும், செய்தியும் மிக்க உரையாக அவரது சிறப்புரை அமைந்தது. நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் நா.மணிகண்டன் நன்றி கூறினார்.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் அ.மன்னர்மன்னன், ச.பால்ராசு.எல்.அய்.சி. கிருட்டிணன், செல்வ.சேகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் பா.காசி நாதன்,வழக்குரைஞர் நா. கணேசன், திராவிடர் கழக புறநகர் மாவட்ட பொறுப்பாளர் கள்  சிவ குருநாதன், த.ம. எரி மலை, மாநகர் பொறுப்பா ளர்கள் ஆட் டோ  செல்வம், விராட்டி பத்து சுப்பையா, புதூர் பாக்கியம், பீபிகுளம் பிச்சைப்பாண்டி, கனி, சுந்தர்,ஆசிரியர் இராமசாமி, ஆசிரியர் சேகரன், அழகுபாணிடி, அகில், இளமதி, கவிமுகில், செல்லத்துரை எனப்பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner