எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடு வதிலோ, நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைக் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத் தனப்படுவதைப் பா£க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கிறவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவுமே முடிந்து விடுகின்றது.
அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக் குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப் பட்டம் பூர்த்தியாவ தில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கிவிடுகின்றது. அப் பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌர வத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரி பண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ அல்லது மோட்டார் டிரை வருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிடுகின்றது.

இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல்கார னுக்குப் பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்றதனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

(குடி அரசு - 1929)

நாத்திகம் பற்றி  வெளிநாட்டு அறிஞர்கள்

* நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து, வரலாற்று ஆசிரியர்)

* நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)

* தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)

* கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)

* கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)

* மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)

* இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்.
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)  

வைதீகப் பிராமணர்களே விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள்!

யாகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பிரா மணர்கள். அதனாலேயே சமீபத்தில் காஞ்சீபுரத்தில் பசுபதியாகம் 3000 ரூபாய் செலவில் செய்யப்பட்டதைக் கேட்டு சகிக்க முடியாத ஆனந்தம் அடைந்தேன்.

யாகத்தில் கொல்லப்பட்ட அதுவும், சித்திர வதையோடு நசுக்கிப் பிசைந்து கொல்லப்பட்ட 8 ஆடுகளும் சுகமாக மோட்சலோகத்தில்  வாழ்ந்திருக்கும், ஆடுகள் செய்த புண்ணி யமே புண்ணியம்! பிராமணர்களின் கருணையே கருணை! இதற்காக பொருளுதவி செய்தவர்களின் ஈகையே ஈகை! நிற்க, பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வ தென்ன வென்றால் இக்காலத்தில் நமது நாட்டில் விதவைகள் அதிகமாய் விட்டார்கள்.

அவர்களுக்கு மறு விவாகம் செய்ய வேண்டும் என்று சுயமரியாதைச் சங்கத்தார் சொன்னாலும், வைதீகப் பிராமணர்கள் வேதத் திற்கு விரோதம் என்று தடுக்கிறார்கள். வித வைகள் இப்போது உலகத்தில் ஏராளமாக இருப்பதால் அவர்களின் நலத்தின் பொருட்டு கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தில் விதித் துள்ளபடி பவுண்டரீக யாகத்தைச் செய்து வைப்பார்களானால், விதவைகள் எவ்வளவோ சந்தோஷ மடைவார்கள். புண்ணியமும் உண்டு. சாஸ்திரத்திற்கும் சம்மதம். ஆகையால் காருண்ய புருஷர்களாகிய பிராமணோத்தமர் களே!  பூதேவர்கள் என்னும் புண்ணிய வான்களே! இந்த பவுண்டரீக யாகத்தைச் செய்து உலகம் ஷேமம் அடையும்படிச் செய்யுங்கள்.

இங்கு யாகத்தையும் வேகத்தையும் ஒப்புக் கொள்ளும் விதவைகளை மாத்திரம் குறிப் பிட்டது ஏனென்றால், பார்ப்பனரல்லாதார் களுக்கு யாகத்தில் நம்பிக்கை கிடையாது. இதுவரையில் பார்ப்பனரல்லாதவர்களில் ஒருவ ராவது யாகத்தைச் செய்ததில்லை. வேதங்களை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட வேதத்தில் சொல்லப்பட்ட இந்த யாகங் களை ஒப்புக் கொள்வதில்லை. ஆகையால் யாகம் என்னும் மகா புண்ணிய காரியம் மனிதர்களில் உயர்ந்தவர்களாகிய பிராமணர் களுக்குத் தான் உரியது. ஆகவே பவுண்டரீக யாகமும் உரியதாகும்.
இதுபற்றித்தான் அதை நம்பும் விதவை களின் ஷேமத்தைக் கோரி இந்த யாகத்தைச் செய்யும் படி வைதீக பிராமணர்களை வணக்க மாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சமயம் இக்காலத்தில் பவுண்டரீக யாகம் ஒப்புக் கொள்ள முடியாதென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யவாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நான் கேட்டதென்னவென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யலாம் என்பதையாகிலும் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது பவுண்டரீக யாகத்தையாகிலும் தினந் தோறும் ஆயிரக்கணக்காக நடத்தி வைக்க வேண்டும் என்பதேயாகும். இரண்டில் ஏதாவா தொன்றை செய்யுங்கள்.

(குடிஅரசு - 1929)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner