எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஇன்று பெண்களுக்கு படிப்பு இல்லாததாலும், சுதந்திர உணர்ச்சியோ மான உணர்ச்சியோ இல்லாதபடி அடிமைத் தன்மைக்கு ஏற்ற வண்ணம் பெற்றோர்களால் வளர்க்கப்படுவதாலும், பெண்கள் பெரிதும் திருமணம் என்றால் அடிமை வாழ்வுக்கு தலை நீட்டுவதுதான் என்று கருதி இருப்பதாலும், இப்படிப்பட்ட அடிமைப்பெண்களே பதிவிரதைக் கூட்டத்தில் சேர்க்கப்படுவதாலும் நம் பெரும்பாகம் பெண்களுக்கு அடிமைத் திருமணம் ஆனந்தமாயிருக்கிறது. ஆண்களும் வாழ்க்கை இன்பம், வாழ்க்கை முயற்சி என்பவை இன்னது என்று தெரியாத காலத்திலே மணம் செய்து கொள்ளுகிறபடியால் மனைவியின் அடிமைத்தனமும், புணர்ச்சி தோற்றமும் சரியாய் இருப்பதைக் கொண்டே மணத்தில் திருப்தி அடைந்து வாழ்க்கையிலும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். அல்லது தன்னை தனக்கு கிடைத்த பெண்ணுடன் கூடி இருப்பதற்கு ஏற்றபடி சரிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அல்லது இதுதான் வாழ்க்கை இயற்கை என்று சரிப்படாத தன்மையையும் சகித்துக் கொள்ளுகிறார்கள்.

காதல் மணங்களும், காந்தர்வ மணங்களும் துணைவர்களுக்கு காம உணர்ச்சியும் அதில் தகுதியும் இருக்கும்வரை தான் இன்பம் அல்லது திருப்தி அளிக்கும். அதுவும் மற்ற வகையில் ஒத்தில்லாத பட்சம் அடிமைத்தனத்தோடு முடிந்துவிடும். பிறகு அது வாழ்க்கை என்னும் வண்டிக்கு வலுவில் பழக்கி பூட்டப்பட்ட எருதுகள் போல் வாழ்க்கை முறை என்னும் வண்டிக்காரனால் அதட்டியும், அடித்தும் ஓட்டப்பட்ட மாடுகள் போல் இளைப்பாற நேரம் இல்லாமல் போய்க் கொண்டே இருந்து முடிவெய்த வேண்டியதுதானே ஒழிய வேறில்லை.

( 23-04-1943ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தோழர்கள்

ஏகாம்பரம் - மனோன்மணி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.. )

இராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதை-2

25.12.1943 - குடியரசிலிருந்து...

சென்ற வார தொடர்ச்சி...

20.தன் மனைவி சீதையைப் பார்த்து, நீ பரதன் மனங் கோ ணாமல் அவனிஷ்டப்படி, நடந்து கொள். அதனால் நமக்குப் பின் னால் லாபம் ஏற்படும் என்கிறான்.

21. இராமன் காடு சென்ற சேதி கேட்டு, மனம் வருந்தி பரதன் இராமனைக் கூப்பிடக் காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது, பரதா!
குடிகள் உன்னை விரட்டி விட்டார்களா? தந்தைக்குப் பணிவிடை செய்ய இஷ்டமில்லாமல் வந்து விட்டாயா? என்று கேட்கிறான்.

22. மற்றும், உன் தாய், அவளது எண்ணம் நிறைவேறி சுகமாய் இருக்கிறாளா? என்றும் கேட்கிறான்.

23. பரதன், இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக் கொடுத்தப் பிறகே தசரதன் நாட்டை கைகேயிக்கு ஏற்கனவே சுல்கமாக கொடுத்து விட்ட செய்தியை பரதனுக்குச் சொல்லுகிறான். பரதன் இராஜ்யத்தைக் கொடுத்து விட்டு இராமனுடைய பாதரட்சையை வாங்கி வந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 ஆண்டுகாலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில்இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத்தயாராயிருப்பவனை, இராமன் சந்தேகப்பட்டு அனுமானை விட்டு, நான் படைகளோடும், விபூஷ்ணன், சுக்ரீவன் ஆகியவர் களோடும் வருகிறேன் என்று சொல்லு. அப்போது அவன் முகம் எப்படி இருக்கிறது? இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான்? என்பவைகளைக் கவனித்து வந்து சொல்லு. ஏன் எனில் எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? என்று சொல்லிப் பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான்.

24. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருக் கிறான். மனைவி நெருப்பில் குளித்துவிட்டு வந்த பிறகும்,பாமர மக்கள் மீது சாக்குப்போட்டு அவள், கர்ப்பமானதைப் பற்றிச் சந்தேகப்பட்டு அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய்க் கண்ணைக்கட்டி விட்டுவிடச் செய்கிறான்.

25. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும், இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாக வேண்டியதாயிற்று.

26. தமயனைக் கொல்லச் செய்து, ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற வேண்டு மென்று கருதித் துரோக சிந்தனை யோடு வந்த சுக்கிரீவன், விபூஷ ணன் ஆகிய அயோக்கியர் களை அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.

27. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியை, சகோதர துரோகிக்காக வேண்டி, மறைந்து இருந்து திடீரென்று கொல்லுகிறான்.

28. விபூஷணனை ஏற்கும்போது தன்னை அறியாமலே தனது கெட்ட எண்ணத்தையும் வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்திவிடுகிறான். அதாவது, தனக்கு மூத்தவன் தீயவனாக இருந்தாலும் அவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் என்கின்ற அறத்தை எல்லோரும் கைக்கொள்ள மாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப் போல் ஆவார்களா? என்கிறான். இதில்தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக்கொள்கிறான்.

29. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, மிருகங் களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டியதில்லை என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப் போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்கு ஆகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக் கூட வாலியை சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.

30. இராமன், பல பெண்களை மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து அங்கஈனமாக்கி கொடுமை செய்யச் செய்திருக்கிறான்.

31. பல பெண்களைக் கொன்று இருக்கிறான்.

32. பெண்களிடம் பொய் பேசி இருக்கிறான்.

33. பெண்களை கேவலமாய் மதித்து இருக்கிறான். பெண்களை நம்பக்கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தை சொல்லக் கூடாது என்கிறான்.

34. அதிக காமாந்தகாரனாக இருக்கிறான்.

35. அனாவசியமாக உயிர்களைக் கொன்றும் தின்றும் இருக்கிறான்.

36. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகதான் யாருக்கோ வாக்கு கொடுத்துவிட்டு காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான்.

37. அரக்கர்களோடு வலிய சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே, சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக்கிறான்.

38 கரனோடு போர்புரியும்போது உங்களை எல்லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட்டேன் என்கிறான்.

39. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகியாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்கு ஆக சரண மடைகிறான். என்னை ஆட்கொள்ள வேண்டும், கருணை காட்டவேண்டும் என்கிறான்.

40. இலங்கையை விபூஷணனுக்குப் பட்டம்கட்டி விட்டு, சீதையை விட்டுவிட்டால், இராவணனுக்கு இலங் கையை விட்டு விடுவதாக அங்கதனிடம் இராமன் சொல்லி அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன் மீது வேறு குற்றமில்லை என்று தெரிகிறது.

41. பரதனும் கைகேயியும் குடிகளும் குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும், சத்தியாக்கிரகம் செய்தும் அழைத்தபோது, தந்தை சொல்லைக் காப்பாற்று வேனே ஒழிய வேறு யாருடைய பேச்சையும் கேட்கமாட்டேன் என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்துவிட்ட இராமன் அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய், அயோத்தியை பட்டம் கட்டிக் கொள்ள மாத்திரம் எப்படி சம்மதிக்கிறான்?   

42. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல்,திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளுகிற வரை அதே கவனமாக, ஆசையாக, நம்பிக்கையாக இருந்திருக்கிறான்.

43. தபசு செய்ததற்கு ஆக சூத்திர வாலிபனைக் கொன்று இருக்கிறான்.

44. கடைசியாக சாதாரண மனிதர்களைப் போலவே, இராமன் இலட்சுமணனையும் தள்ளி விட்டு, தானும் (எமனால்) ஆற்றில் விழுந்து சாகிறான். பிறகு உப இந்திரனாக ஆகிறான்.

குறிப்பு:- (தோழர் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தனது மொழிபெயர்ப்பு அயோத்தியாகாண்டம் சருக்கம் 8, பக்கம் 28இல் இராமன் பட்டமகிஷியாக சீதையை விவாகம் செய்து. கொண்டாலும் அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்து போகத்துக்கு ஆக பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான் என்று வெள்ளையாகவும் காட்டி இருக்கிறார்.

பொறுக்கு மணிகள்

23.10.1943  -  குடிஅரசிலிருந்து....

. மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

. தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்கமுடியாது ? இருந்தால் அது மிக மிக அதிசயம்தான். இதற்கு உதாரணம் கோர்ட்களில் ஜட்ஜும் வக்கீலும் வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகியவர்களை உனக்கு என்ன ஜீவனம் என்று ஒருகேள்வி கேட்பதும்; மக்கள் அதிகப்படுத்திச் சொல்லுவதுமே போதுமானது.

. பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது. உண்மையான விபசாரித்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியில் இருந்தும், ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது.  .

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner