பகுத்தறிவு

சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோத மாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட் டிருக்கிறது. இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன் றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத் துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க் கத்தைப்பற்றி பேச வேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடுகளை யெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக்கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண் யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்கார னையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத்தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப் பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத்தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்த வர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள்.

சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவா தவர்களை காவல்  காக்கப் போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றி னார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்குவரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறா யிருப்பவைகளை இடித் தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சௌகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள்.

ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர்கேட்பார்கள்? யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.  இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?  முதலாவது உங்களைக் கேட்கிறேன்.

நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள்கி ன்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண்டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெனில், இன்னும்  அநேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித் திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவை களைக் கவனித்துக்கொண்டிருந்தால் பல னில்லை. சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக் கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருதுகின்றீர்களா? இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும்.

சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண் டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீனவுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?  இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன் றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண் ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.

ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.  அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற் காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக் கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா. இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்து விட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச் சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும்.

மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல்கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களேயானால் வந்து விட்டது. அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள். அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும் நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க் கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்.

எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுப விப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.  ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப்பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது.  ஆண் களைப்போலவே பெண்கள் செய்யத்தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.  உண் மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானா லும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கலியாணம் செய்து கொள் ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக்கியனாக வில்லை. 

ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இது போல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம். இஷ்டப் பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்ட மில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும், பயப்படக்கூடாது.

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி  கணக்கு வழக் கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது. இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண் டுமென்று ஆசீர்வாதம் செய்கின்றார்கள்.

இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட்டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதை யாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத் தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்த வர்களாவீர்கள். எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல்வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான்.

இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற்காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றை யும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.

(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)
‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931

23-06-1929 - குடிஅரசிலிருந்து...

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டிவருகின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமே யொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும்.

நாஸ்திகத்தின் சக்தியே சக்தி! நல்ல வர்க்கம்

30-06-1929 - குடிஅரசிலிருந்து...

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளை களில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளை களில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்க மெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப் பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரை வருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமதானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான். என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை - சித்திரபுத்திரன் -

16-06-1929  - குடிஅரசிலிருந்து..

சைவன் - ஓய்! என்னங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர்?
பார்ப்பனன் - வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்கு சாகின்றோமோ. இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன்.

சைவன் - என்னங் காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர் இது என்ன, போக்கிரித்தனமா? அல்லவா?

பார்ப்பனன் - கோபித்துக் கொள்ளாதீர் அய்யா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வரும் ஒழிய விஷயம் புலப்படுவதான் கஷ்டம்.

சைவன் - என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய்! பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்தநாடு பாழாச்சுது!

பார்ப்பனன் - இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லாச்சுது. தவிரவும், இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைப் பேர்? சாப்பிடாதவர்கள் எத்தனையோப் பேர்? என்பது உமக்கு தெரியும்? 7 கோடி மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! 1 கோடி கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாதார் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள் சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள், மராட்டா சத்திரியர்கள், நாடார் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடு சத்திரியர், செங்குந்த சத்திரியர் ஆகியோர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

மேற்படி வகுப்பார்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக் கோட்டை தன வைசியர் வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; வேளாளர்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளா ளர்கள், வடுக வேளாளர்கள் நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலும் உள்ள சில வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ சவுராஸ் டிர பிராமணர்கள், விவ பிராமணர்கள், தேவாங்க பிராம ணர்கள், சாலிய பிராமணர்கள், கொங்கிணி பிராமணர்கள், கவுட பிராமணர்கள், காஷ்மீர் பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷ்ட்ட பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைகளை எல்லாம் சேர்த்தால் குறைந்தது 15 கோடிக்கு குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் 1 கோடி இருக்கலாமா என்பது சந்தேகம். 35 கோடியில் 1 கோடிக்கு அதாவது 100க்கு 3 பேராகலாம்.

தவிர, இந்தியர் தவிர உலக மக்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். எனவே மொத்த ஜனத்தொகையில் 100க்கு 99 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும் பார்ப்போம்.

சைவன் - என்னங்காணும்! பார்ப்பனர் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர் கதையெல்லாம் பேசுகிறீர்!

பார்ப்பனன் - சொல்லுவதைக் கவனமாய்க் கேளும் சைவரே வெறும் கோபம்! ஒரு காசுக்கு உதவாது அதெல்லாம் அந்தக் காலம்; இது அறிவு ஆராய்ச்சி சைன்சு காலம்; தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவ காருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறு இல்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100க்கு 99 பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களை பிறப்பித்து இருப்பார் என்று யோசித்து, யோசித்து மயங்கிக் கிடந்தேன்.

கடைசியாக திரு.சர்.ஜகதீச சந்திரபோஸ், மரம் செடி கொடி புல் பூண்டு ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும் நாடினாலும் முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன, என்பதைக் கண்டு பிடித்தபிறகுதான் சரி, எது ஜீவ காருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.

காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளை எடுக்கும் போதும் கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும்போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே ஒரு ஜீவனை தினம் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்குமேல் யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள் அதுவும் கணத்தில் முடிந்து போகும். ஆதலால்தான் காய்கறி கிழங்கு கீரையைவிட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன்.

ஆதலால் ஓய்! சைவரே நான் உன்னைவிட குறைந்த ஜீவகாருண்யம் உடையவன் என்று எண்ணிவிடாதீர். தவிர, திரு.போஸ் காய் கறிகளுக்கு உயிர் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துதான் மாமிசம் சாப்பிடுகின் றார்கள் என்பதாகத் தெரிகின்றது.

அன்றியும், வேதமும், மனுதர்ம சாஸ்திரமும், கண்ணப்ப நாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும் இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருப்பதோடு தலைமுறைக்கு மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா சைவரே?

சைவன் - ஓய்! ஓய்! பார்ப்பனரே சரி தான்! கடையைக் கட்டுங்காணும் உம் ஆராய்ச் சியையும், சைன்சையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும், கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சி சைன்சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டது. கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கைவைக்க வந்து விட்டது. இந்தப்பாழும் அறிவும் ஆராய்ச்சியும் சைன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால் இவை ஒழியதவம் கிடப்போம்போம், போம், பார்ப்பானே! போம் உம்மைப் பார்ப்பதற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவ வேண்டும்.

பார்ப்பான் - அய்யோ சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீச சந்திரபோஸ் இயற்கை ஆராய்ச்சியில் சுயமரியாதை இயக்கம் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவமும் உங்கள் ஜீவ காருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப் பார்த்ததற்கும் என் பேச்சுக்களைக் காதில் கேட்டதற்கும் மகாபாதகம் தீர்த்த குளத்தில் போய்க் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.23-06-1929 - குடிஅரசிலிருந்து...

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டிவருகின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமே யொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும்.

நாஸ்திகத்தின் சக்தியே சக்தி! நல்ல வர்க்கம்

30-06-1929 - குடிஅரசிலிருந்து...

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளை களில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளை களில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது.

அந்த பிரபுக்கள் வர்க்க மெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப் பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரை வருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமதானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை - சித்திரபுத்திரன் -

16-06-1929  - குடிஅரசிலிருந்து..

சைவன் - ஓய்! என்னங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர்?

பார்ப்பனன் - வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்கு சாகின்றோமோ. இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன்.

சைவன் - என்னங் காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர் இது என்ன, போக்கிரித்தனமா? அல்லவா?

பார்ப்பனன் - கோபித்துக் கொள்ளாதீர் அய்யா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வரும் ஒழிய விஷயம் புலப்படுவதான் கஷ்டம்.

சைவன் - என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய்! பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்தநாடு பாழாச்சுது!

பார்ப்பனன் - இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லாச்சுது. தவிரவும், இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைப் பேர்? சாப்பிடாதவர்கள் எத்தனையோப் பேர்? என்பது உமக்கு தெரியும்? 7 கோடி மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! 1 கோடி கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாதார் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள் சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள், மராட்டா சத்திரியர்கள், நாடார் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடு சத்திரியர், செங்குந்த சத்திரியர் ஆகியோர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

மேற்படி வகுப்பார்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக் கோட்டை தன வைசியர் வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; வேளாளர்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளா ளர்கள், வடுக வேளாளர்கள் நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலும் உள்ள சில வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ சவுராஸ் டிர பிராமணர்கள், விவ பிராமணர்கள், தேவாங்க பிராம ணர்கள், சாலிய பிராமணர்கள், கொங்கிணி பிராமணர்கள், கவுட பிராமணர்கள், காஷ்மீர் பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷ்ட்ட பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைகளை எல்லாம் சேர்த்தால் குறைந்தது 15 கோடிக்கு குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் 1 கோடி இருக்கலாமா என்பது சந்தேகம். 35 கோடியில் 1 கோடிக்கு அதாவது 100க்கு 3 பேராகலாம்.

தவிர, இந்தியர் தவிர உலக மக்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். எனவே மொத்த ஜனத்தொகையில் 100க்கு 99 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும் பார்ப்போம்.

சைவன் - என்னங்காணும்! பார்ப்பனர் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர் கதையெல்லாம் பேசுகிறீர்!

பார்ப்பனன் - சொல்லுவதைக் கவனமாய்க் கேளும் சைவரே வெறும் கோபம்! ஒரு காசுக்கு உதவாது அதெல்லாம் அந்தக் காலம்; இது அறிவு ஆராய்ச்சி சைன்சு காலம்; தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவ காருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறு இல்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100க்கு 99 பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களை பிறப்பித்து இருப்பார் என்று யோசித்து, யோசித்து மயங்கிக் கிடந்தேன்.

கடைசியாக திரு.சர்.ஜகதீச சந்திரபோஸ், மரம் செடி கொடி புல் பூண்டு ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும் நாடினாலும் முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன, என்பதைக் கண்டு பிடித்தபிறகுதான் சரி, எது ஜீவ காருண்யம்? என்பதை ஆராயப்
புகுந்தேன்.

காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளை எடுக்கும் போதும் கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும்போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே ஒரு ஜீவனை தினம் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்குமேல் யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள் அதுவும் கணத்தில் முடிந்து போகும். ஆதலால்தான் காய்கறி கிழங்கு கீரையைவிட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன்.

ஆதலால் ஓய்! சைவரே நான் உன்னைவிட குறைந்த ஜீவகாருண்யம் உடையவன் என்று எண்ணிவிடாதீர். தவிர, திரு.போஸ் காய் கறிகளுக்கு உயிர் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துதான் மாமிசம் சாப்பிடுகின் றார்கள் என்பதாகத் தெரிகின்றது.

அன்றியும், வேதமும், மனுதர்ம சாஸ்திரமும், கண்ணப்ப நாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும் இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருப்பதோடு தலைமுறைக்கு மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா சைவரே?

சைவன் - ஓய்! ஓய்! பார்ப்பனரே சரி தான்! கடையைக் கட்டுங்காணும் உம் ஆராய்ச் சியையும், சைன்சையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும், கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சி சைன்சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டது. கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கைவைக்க வந்து விட்டது. இந்தப்பாழும் அறிவும் ஆராய்ச்சியும் சைன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால் இவை ஒழியதவம் கிடப்போம்போம், போம், பார்ப்பானே! போம் உம்மைப் பார்ப்பதற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவ வேண்டும்.

பார்ப்பான் - அய்யோ சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீச சந்திரபோஸ் இயற்கை ஆராய்ச்சியில் சுயமரியாதை இயக்கம் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவமும் உங்கள் ஜீவ காருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப் பார்த்ததற்கும் என் பேச்சுக்களைக் காதில் கேட்டதற்கும் மகாபாதகம் தீர்த்த குளத்தில் போய்க் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.

“ï£vF蔈F¡ ê‚F
23-06-1929 - °®ÜóCL¼‰¶...
¼Sò£M™ è쾫÷ Þ™¬ô â¡Á‹, è쾜 ï‹H‚¬è Þ™¬ô â¡Á‹ ê¬ðèÀ‹ ñè£ï£´èÀ‹ Æ®, è쾜 ñÁŠ¹‚ è‡è£†CèÀ‹ ªõ° CøŠð£è ãŸð£´ ªêŒòŠð†´, èì¾À‚° âF˜ Hóê£ó‹ ðôñ£è ï¬ìªðÁA¡ø¶. Þî¡ ðôù£è èì¾÷£™ º®ò£î è£Kòƒè¬÷‚ Ãì Ü‰îˆ «îêˆF™ àœ÷õ˜èœ ªêŒ¶ 裆®õ¼A¡øù˜. Üî£õ¶ ªêˆîõ˜è¬÷ H¬ö‚è ¬õˆ¶ M´A¡ø Mûò‹ ðˆFK¬èèO™ ðø‰î õ‡íñ£J¼‚Aø¶. èì¾À‚°Š Hø‚è„ ªêŒõ¶‹ Þø‚è„ ªêŒõ¶‹î£¡ ªîK»«ñ ªò£Nò ªêˆîõ˜èÀ‚° àJ˜ ªè£´‚èˆ ªîKò£¶. Þ‰î «õ¬ô îñ‚°ˆ ªîKò£¶, ê‚FJ™¬ô â¡Á Üõ˜ «ðê£ñ™ ÜìƒA M†ì£«ó£ â¡ù«ñ£ ªîKòM™¬ô. Ü™ô¶ Þ‰îŠ ¹Fò «õ¬ô¬ò Üõ˜è«÷ ªêŒ¶ ªè£œ÷†´‹, ïñ‚° ã¡ Þ‰î i‡ ªî£™¬ô â¡Á è¼F HøŠHŠð¶‹, è£òô£‚ ªè£´ˆ¶ ê£è®Šð¶ñ£ù Þ‰î Þó‡´ «õ¬ô»ì¡ ²‹ñ£ Þ¼‰¶M†ì£˜ «ð£½‹. ï£vFèˆF¡ ê‚F«ò ê‚F!
ï™ô õ˜‚è‹
30-06-1929 - °®ÜóCL¼‰¶...
ïñ¶ ®™ è™ò£í‹ ªêŒõF™ ªðŸ«ø£˜èœ îƒèœ Hœ¬÷ èÀ‚°Š ªð‡ «î´õF«ô£, ñ£ŠHœ¬÷ «î´õF«ô£ ï™ô õ˜‚èñ£è Þ¼‚è «õ‡´‹ â¡A¡ø ꣂ¬è„ ªê£™L‚ ªè£‡´ ðí‚è£ó˜èœ, Hó¹‚èœ i†®«ô«ò «ð£Œ ê‹ð‰î‹ ¬õˆ¶‚ ªè£œ÷ HóòˆîùŠð´õ¬îŠ 𣘂A¡«ø£‹. Ýù£™ Hó¹‚èœ i†´Š Hœ¬÷èO™ ܶ¾‹ êKò£ù Hó¹‚èœ i†´Š Hœ¬÷ èO™ ܶ¾‹ êKò£ù Hó¹‚èœ â¡A¡øõ˜èO¡ i†´Š Hœ¬÷ èO™ ªðK¶‹ ê¬ñò™è£ó¡ õ˜‚èñ£¾‹, «ñ£†ì£˜ ®¬óõ˜ õ˜‚èñ£è¾‹ º®‰¶ M´A¡ø¶. ܉î Hó¹‚èœ õ˜‚è ªñ™ô£‹ î£CèOì«ñ «ð£Œ «ê˜‰¶ M´A¡ø¶. ãªùQ™ Hó¹‚èœ â¡ø£™ Üõ˜èÀ‚°‚ è†ì£ò‹ î£Cèœ Þ¼‰î£è «õ‡´‹. Þ™ô£ M†ì£™ Hó¹Šð†ì‹ ̘ˆFò£õF™¬ô. Ýîô£™ Þõ˜èœ õ˜‚è‹ î£C èOì«ñ ÞøƒA M´A¡ø¶. ÜŠ Hó¹‚èO¡ ñ¬ùMñ£˜èœ ÜŒ«ò£ ð£õ‹! «õÁ õ¬èJ¡P»‹ °´‹ðˆF¡ è¾óõˆ¬î‚ 裊ð£Ÿø «õ‡ì£ñ£ â¡A¡ø èõ¬ôe¶‹ îƒèœ èíõ˜è¬÷Š «ð£™ ªõOJ™ «õÁ î‚è ñQî˜èO¡ C«ïè‹ ¬õˆ¶‚ ªè£œ÷£ñ™ i†´‚°œ÷£è«õ êKð‡E‚ ªè£œ÷‚ è¼F ê¬ñò™ è£óÂì«ù«ò£, Ü™ô¶ «ñ£†ì£˜ ®¬ó õ¼ì«ù«ò£ ñ£ˆFó‹  ªðK¶‹ ê‹ð‰î‹ ¬õˆ¶‚ ªè£œ÷ º®A¡ø¶. Ýè«õ Þîù£™ ê¬ñò™ õ˜‚躋 ®¬óõ˜ õ˜‚躋 Hó¹‚èœ i†®™ ÞøƒAM´A¡ø¶. Þ¬î‚ è‡ì å¼ î£C î¡ ñè¬ùŠ 𣘈¶ êñî£ù£FðF‚°Š Hø‰î c êƒWîˆF™ H¬ö‚A¡ø£Œ, ê¬ñò™ è£ó‚° Hø‰îõ¡ ê˜õ£Fè£ó‹ ð‡µ A¡ø£¡. â¡«ù! èì¾O¡ F¼M¬÷ò£ì™ â¡Á ªê£¡ùî£è å¼ ðöªñ£N ªê£™L‚ ªè£œ÷Šð´õ¶‡´. Ýîô£™ ÜP¾‹ è™M»‹ Üö°‹ à¬ìò¶  ï™ôõ˜‚èñ£°«ñ îMó ðí‚è£ó˜ i†´Š Hœ¬÷èœ â¡A¡ø îù£«ô«ò Üõ˜èœ âŠð® Þ¼‰î£½‹ ï™ô õ˜‚è‹ â¡Á G¬ùŠð¶ ªõÁ‹ ñFfùº‹ «ðó£¬ê»«ñò£°‹.

15.10.1933  - குடிஅரசிலிருந்து...

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்ட மல்லவா?

கதர் கட்டினால்தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர் களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றது. இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும்  தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக் கோருகிறோம்.

19.02.1933  - குடிஅரசிலிருந்து...

மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்பந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படுகின்றது என் றாலும், அது பெரிதும் சுயநலக்காரர் களாகிய முதலாளிமார்கள், சோம்பேறி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத் தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின் றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையா வார்கள். ஒன்று பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம் மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பர மாகின்றது.

இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபச்சாரக் குச்சிக்காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட் டைப்பை) திருடர், தந்தித்திருடர், கத்திரிக்கோல் திருடர், முதலிய திருட்டு வகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கெனவே  உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் முதலிய ஆகாரத்திற்கு அவசியமாய் வேண்டிய சாமான்களாக இல்லாமல் வேறு அநேகவித சாமான்கள் அதாவது விளையாட்டு சாமான்கள், வேடிக்கை சாமான்கள், அதிசய சாமான்கள், அற்புத சாமான்கள் பிரபுக்கள் வீட்டில், மகாராஜாக்கள் வீட்டில் இருக்கத்தக்க சாமான்கள் ஆகிய போக போக்கிய சாமான்களே ஏராளமாய்வரும்.

இவை தவிர காப்பிக் கடை, சோத்துக் கடை இவைகள் புதிய புதிய பெயர்களால் நன்றாய் விளம்பரம் செய்யப்பட்டு, எச்சில் மீது எச்சில் படிந்து, எச்சில் குளத்தில் சாப்பிடுவது போல் ஓட்டல்கள் விளங்கும். இவைகள் தவிர காலரா, மலேரியா, இன்புளூயன்சா, அம்மை, பிளேக்கு முதலிய தொத்து நோய்களும் உண்டாகும் மற்றும் கூட்ட நெருக்கடியில் பலர் நசுக்குண்டு சாகலாம்.

இவைகள் தான் மேல் கண்ட விளம்பரங்களால் ஏற்படும் பயனே தவிர வேறு என்ன ஏற்படக்கூடும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மாமாங்கம் சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமரஜனங்களுக்கு எச்ச ரிக்கை செய்த தற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிக்கையில் அதன் நிருபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார் அதன் சுருக்கமாவது:

சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ் காரர்களும் சேர்ந்து மகாமக பகிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அநேகம் பேர் மாமாங் கத்துக்கு வருவார்கள், ஆதலால் சுயமரி யாதைக்காரர் வேலை பயன்படாது என்று எழுதப்பட்டிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதினாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும் கூட ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியம் மெயில் நிருபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரிய வில்லை. நாஸ்திகர் அல்லாத வர்கள் அவ்வளவு பெரிய மூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிருபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமேஒழிய மற்றபடி சுயமரியாதைக் காரரை ஒன்றும் செய்து விடாது.

மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக் காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.  மாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக் காரருக்குலாபம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதார மற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200, ரூபாய் வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா? என்ற கருத்தின் மீது தான் இந்தப் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய - (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகோணம் மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக் கின்றோம்.

அன்றியும் இதுவரை செய்து வந்த பகுத்தறிவு பிரச்சார மானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச் சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்களும் இந்த மாமாங்கப் புரட்டைப்பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர் களை இந்த மாதிரியான கஷ்டத்தில் இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக.  

Banner
Banner