பகுத்தறிவு

25.10.1931 - குடிஅரசிலிருந்து...

இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத, வேதமும் சாதிரமும், இராமாயண பாரதமும், பெரியபுரணம் சிவபுராணம் திரு விளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் சூத்திரப்பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவேமுடியாது.

திரு.காந்தி எவ்வளவுதான் மகாத்மாவா னாலும் சாமிவேதாசலமும் எவ்வளவுதான் சுவாமியானாலும், சுவாமி சகஜானந்தமும் எவ்வளவு தான் சுவாமியானாலும் எதுவரை யிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர் களென்றோ சொல்லிக்கொள்ளு கின்றார் களோ அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாதவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவீகவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும், அவர்களை அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமை யுண்டு, மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரசாரமும், சைவப் பிரசாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும்  ஆக்கி நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

சம்பந்தனை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய சாமிகளை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும் சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன் சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக்கொண்ட சைவன் ஒருவன் தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா? என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்,

அதுபோலவே நந்தனை ஒப்புக்கொண்ட ஒருவன் அதுவும் நந்தன் பறையன் அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன் தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்,  உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம். தமிழ்நாட்டில் ஆதியில் ஜாதியில்லை என்று சொல்லலாம்.

சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால் தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி தன்னைச் சூத்திரவகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக்கொள்ள முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். (சற்சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது)

25.10.1931 - குடிஅரசிலிருந்து...

நாம் தானே இந்நாட்டின் பழம் பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்னாடகர் என்கின்ற பெயர்கள் வழங்குகின்றன. இந்த ஆதி பட்டமெல்லாம் நாம் என்றும் சிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனு கூலமாக கொடுக்கப் பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும் - பூரண சுயேச்சை இருந்தாலும்- சுயராஜ்ஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள 3இல் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும் பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டு விட்டு,தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிரார உண்ணமுடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும்  இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல் அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

10.05.1931 - குடிஅரசிலிருந்து..

ஒருவன் கோவிலுக்குப் போவது போகா மலிருப்பது. மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத் துவதும். வழிபடாமலிருப்பதும்.  ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள்  எது வேண்டுமானாலும் செய்து  கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.

இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு

பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணா சிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவ தில்லை. வருணா சிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவ தில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி  நடக்காத வர்களையெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?  பார்ப்பன வக்கீல்கள் இந்துக் களாவார்களா? அவர் களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன்  கூறவில்லை? சமரச சன் மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும்  ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.  நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.

இவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங் களையே  திரு. முதலியார் அவர்கள் குறிப் பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக் கொள்ளாமலும் உருவ வழிபாட்டைச்  செய் யாலும்  மதச் சின்னத்தை அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளா மலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ் தாரர்கள் என்பதாகவே, அது மாத்திர மல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடை யாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப் பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ்வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கி யதையும் மதிப்புக்  கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின்  கொள்கை யோக்கியதையும்  நடைமுறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கியதையும் விளங்கவில்லையா என்று  கேட்கின்றோம்.

ஓர் சம்பாஷணை 05.04.1931 -குடிஅரசிலிருந்து...

எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது.

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்திற்கு பயப்படாத வர்கள் தானே

போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவ னை(ரை) சில ஆராய்சியாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோ தரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன? எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்க தரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதி யாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியா கமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசி யதை தாங்கள் வாசித்த துண்டா? போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் :  சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப் படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது. போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்ப தாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)

எதா:  பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில் லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.

சென்னை, செப்.1 பகுத்தறி வாளர், திராவிட இயக்க சிந்த னையாளர், அறிவுக்கொடி இதழின் ஆசிரியருமான பெரம் பூர் க.கந்தன் (வயது 68) நேற்று (31.8.2018) மாலை 5.15 மணி யளவில் சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

உடல் நலிவுற்று, சிகிச்சை பெற்ற நிலையில் மறைந்த அன் னாரது உடலுக்கு இன்று (1.9.2018) காலை 8.30 மணிய ளவில் அவரது இல்லம் சென்றிருந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கழகத்தின் சார்பில் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

மகன் க.தமிழ்ச்செல்வன், மகள் அறிவுக்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மறைந்த பெரம்பூர் க.கந்த னுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வட சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் திமுக தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், ஆவடி மாவட்ட தலைவர் பா.தென் னரசு, மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா. பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாசுகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சோ.சுரேசு, கும்மிடிப் பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங் கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் பா. கோபாலகிருட்டிணன், அமைப்பாளர் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, க.அகிலா, சு.விமல்ராசு, சொ.அன்பு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் செ.பிரவீன்குமார், புரசை இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்சு மற்றும் தோழர்கள் கழகத் துணைத் தலைவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று (1.9.2018) மாலை 4 மணிக்கு அன்னாரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு திரு.வி.க.நகர் தாங்கல் இடுகாட்டில் மூடச்சடங்குகள் எதுவுமின்றி  இறுதி நிகழ்வு நடந்தது.

Banner
Banner