பகுத்தறிவு

நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்திய சட்டசபை தானங்களுக்குத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது. சட்டசபைகள் மாயையென்றும்,  அங்கு சென்று மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யமுடியாதென்றும், சட்டசபைகள் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அரண்களென்றும், சட்டசபையில் சர்க் காருடைய வலுவு பிரதிநிதிகள் வலுவைவிட எவ்வளவோ மடங்கு மேல்பட்டதென்றும், அரசாங்கத்தின் வலுவைச் சட்டசபைமூலம் சிறிதாவது அசைக்கக்கூட முடியாதென்றும் தோழர்கள் காந்தியார், தாஸ், நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் மாத்திரமில்லாமல் இன்று சட்டசபைக்குக் காங்கிரசில் மாறலாய் நிற்கும் அபேட்சகர்களுள்பட எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அபிப்பிராயமானது சட்டசபைக்கு வெளியிலிருந்து கொண்டுசொன்னதென்றுஎண்ணிவிடமுடியாதபடிகாங் கிரஸ் தலைவர்கள்,தியாகிகள்,மேதாவிகள்,பலர் சட்டசபைக் குள் தக்க பலத்துடன் சென்று ஒரு கைபார்த்துவிட்டு வெளியில் வரும்போதும், வந்த பின்பும் சொன்னது என்பதை நாம் வாசகர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியதில்லை.

அன்றியும்சட்டசபைகளும்,அதற்குள்சென்றுநாம் செய்யக்கூடியகாரியங்களும் அரசாங்கத்தாரால் ஏற்படுத் தப்பட்டு அனுமதிக்கப்பட்டதென்பதும், அங்கு செல்பவர்கள் அதற்குள்ள அதிகார வரம்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து தீர வேண்டுமென்பதும், அப்படிக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பதன் மூலம் கூட அதனால் அடையக் கூடிய அளவு அதாவது அதிகாரம் இருக்கும் அளவு முழுவதையும் கூட அடைய முடியாதென்பதும், அவற்றிற்கு மேற்பட்டு ஒரு காரியம் கூடச் செய்யச் சட்டப்படி இடமில்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறதென்பதும் பகுத்தறிவுள்ள வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவையெல்லாம் பளிங்கு போல் ஏற்கனவே தெரிந்ததுதான். அதன் பலாபலன்களைப்பற்றி அனுபோகதர்கள் அப்போதே சொல்லி அதையணுகாம லிருந்தார்களென்று சொல்லலாம். இந்த நிலையில் அதா வது காங்கிரஸ்காரர்கள் பகிஷ்கரித்த பிறகு, அதைவிட்டு வந்தபிறகு, வெளியேறின பிறகு அந்தச் சட்டசபைகள் இப்போது ஏதாவது மாறுதலடைந்து விட்டதா?  அல்லது ஏதாவது அங்கு போய்ச் சாதிப்பதற்குத் தகுந்த மாதிரி திருத் தியமைக்கப்பட்டு விட்டதா என்பவைகளைக் கவனித்தாலும் அந்தப்படி ஒன்றும் நடந்து விடவில்லையென்பதும் நன்றாய் விளங்கும்.

அப்படியிருக்க இப்போது திடீரென்று சட்டசபைகளுக்கு அந்தப்படியெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்கள் செல்ல வேண்டுமென்று சொல்வதற்கும், அபேட்சகர்களாய் நிற்ப தற்கும் என்ன காரணமென்பதைப் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள்.

ஆகவே நாளது வரையும் காங்கிரஸ்காரர்கள் இந்தப் பிரச்சினைக்கு எந்த  காரணங்களையும் சொன்னதாகத் தெரிய வில்லை. ஆனால் தோழர் காந்தியவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிதான் காங்கிரசை விட்டு விலகிவிட தீர்மானித்திருப்பது சம்பந்தமாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்ட சபைக்குக் காங்கிரஸ்காரர்கள் போக வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் சட்டசபைப் பிரவேச விஷயமாக நான் இதற்குமுன் என்ன சொல்லியிருந்த போதிலும் சரி, காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டியது அவசியமென்று இப்போது கருதுகிறேன். என்று எழுதியிருக்கிறார்.

இதனால் நாம் தெரிந்து கொள்ளக் கூடியதென்னவென்று பார்ப்போமானால் அப்பொழுது எனக்கு இஷ்டமில்லை. இப்போது எனக்கு இஷ்டம் என்று சொல்லுகிறாரென்பதைத் தவிரவேறொன்றும்காணப்படவில்லை.ஆகவேதோழர் காந்திஅவர்கள்ஊரார்செலவில்ஊரார்கஷ்டத்தில் அரசியலில்கிஙிசிஞி படித்து அனுபவம் பெற்று வருகிறா ரென்று தான் இதிலிருந்து கருத வேண்டியிருக்கின்றது. இந்தப்படிக் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டுமென்பதிலும், அங்கு போய்ச் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை நிர்ணயிக்காமலும், சமுக சீர் திருத்தமானவிஷயங்களில்பிரவேசிப்பதுமில்லை,அவை களுக்குஇடம்கொடுப்பதுமில்லைஎன்றுமுடிவுசெய்து கொண்டும்போகும்படிசெய்வதும்,அந்தப்படிகாங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போன பின்பும் அவர்கள்சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண் டும், எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதைத் தான் இருந்து நடத்தாமலும், கவனிக்காமலும், இப்போதே காங்கிரசிலிருந்து காந்தியார் விலகிக் கொள்ளப் போவதுமாய்ச்சொல்லுவதுமாகியகாரியங்களில் ஏதாவது புத்திசாலித்தனமோ, பொறுப்போ இருக்கின்றதா என்பதையும், இப்படிப்பட்ட கூட்டத்தாரைச் சட்டசபைக்குப் போக விடுவது பொறுப்பான காரியமோ புத்திசாலித்தனமோ ஆகுமாவென்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொறுப் புள்ள ஓட்டர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

இந்தலட்சணத்தில்மற்றொருவிஷயம்மிகவும்முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியதாகுமென்பது நமது அபிப் பிராயம். அதாவது:

சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களாய் நிற்கும் ஆசாமிகளைப் பற்றி யாரும் கவனிக்காதீர்கள், அவர்கள் நிற்கும் கட்சிகளைப் பற்றி கவனியுங்கள் என்கின்ற பல்லவியின் மீது எலக்ஷன் பிரச்சாரம் நடத்துவதும், கட்சி சம்பந்தமான விஷயங்களில் விவகாரம் வரும் பொழுது கட்சிகளைக் கவனிக்காதீர்கள் மகாத்மா காந்தியைக் கவனியுங்கள், கட்சியைப் பற்றியோ, நபரைப் பற்றியோ கவனிக்காதீர்கள் என்பதும், காந்தியார் இன்ன இன்னபடி நடந்து கொண்டு இன்ன இன்னபடி சொன்னவராயிற்றே. ஆதலால் அவரைக் கவனித்து ஓட்டுக்கொடுக்க முடியுமா?  என்ற பிரச்சினை வரும்போது சட்டசபைக்கு நாங்கள் போனால் இன்ன இன்ன விஷயங்கள் செய்ய மாட்டோமென்று தனிப்பட்ட முறையில் காந்தியார் கொள்கை என்பவைகளுக்கு விரோதமாக வாக்கு கொடுப்பதுமாகிய காரியங்கள் இன்று காங்கிரஸ் எலக்ஷன் பிரச்சாரமாய்ச் செய்யப்பட்டு வருகின்றன. இவை தக்க பொறுப்புள்ள ஆட்களாலேயே நடைபெற்று வருகின்றன.

ஆகவே இந்த நிலையில் காங்கிரஸுக்கு எந்த ஆதா ரத்தின் மீது எந்தக் கொள்கைகளை வைத்து எந்த வேலைத் திட்டத்தை எதிர்பார்த்து யாரிடம் நம்பிக்கை கொண்டு ஓட்டர்கள் ஓட்டுச் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒரு புறமிருக்க, மற்றும் ஒரு சில பிரச்சாரக்காரர்கள் காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் சட்டசபைக்குப் போய் வெள்ளையறிக்கையை நிராகரித்து விடுவோம். அடக்கு முறை சட்டங்களை ரத்து செய்து விடுவோம் என்று சொல் லுவதாகத் தெரிகிறது. இதையாவது உண்மையா?  சரியா? என்று யோசிப்போமேயானால் இதுவும் அர்த்தமற்ற பேச்சு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெள்ளையறிக்கைக்கு இன்னமும் முழு ரூபமும் ஏற் பட்டு விடவில்லை. அது அமலுக்கு வர அதற்கு இன்ன மும் எத்தனையோ சடங்குகள் நடைபெற வேண்டியிருக்கின்றன. அப்படியிருந்தாலும்அதைநிராகரிக்கத்தகுந்தமெஜாரிட் டியைச் சட்டசபையில் பெற்றுவிட முடியுமா?  முஸ்லீம் களின் 30 தானங்களில் பத்திலொரு பாகமாவது காங்கிரஸ் காரர்களுக்கு அனுகூலமாக விருக்கும்படி காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கின்றதா?  வகுப்பு தீர்ப்பைப் பற்றிச் சுவர்மேல் பூனையாய் இந்துக்களுக்குத் தலையையும், முஸ்லீம்களுக்கு வாலையும் காட்டி வரும்வரையிலும் பண்டித மாளவியா போன்றவர்கள்அதைக்கூடஎதிர்க்கட்சிசேர்த்துக்கொண்டிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரசுக்கும் சரணாகதி அடையக் கூடியவர்களென்று, நாம் அவர்களை நாம் அவ்வளவு பைத்தியக்காரர்களாக எண்ணிவிட முடியுமா?  ஒவ்வொரு முஸ்லீமும், நான் முதலில் முஸ்லீம் அப்புறம்தான் இந்தியன் என்று செய்த கர்ச்சனைகளை மறந்துவிட்டு அவர்கள் சமுகத்துக்குத் துரோகமாகக் காங்கிரசுக்கு வந்து அடிமையாவார்களென்று நினைப்பது முட்டாள்தனமாகாதா? என்றும் கேட்கிறோம்.

இந்திய சட்டசபையில் நாமினேஷன் காரர்கள் 40 பேர், முஸ்லீம்கள் 30 பேர், வெள்ளைக்காரர்கள் 8 பேர், வியாபாரிகள் 4 பேர், மிராசுதாரர்கள், 7 பேர், வகுப்புத் தீர்ப்பை ஒழிக்காதவரையில் பிரிட்டிஷ் அரசாங்கமே மேலென்று சொல்லுகின்ற சீக்கியர்கள் 2 பேர், ஆக 9 ஒதுக்கப்பட்ட தானங்கள்போய்விட்டால்மீதி53தானங்களும்காங்கிர சுக்கேகிடைக்குமா?இந்த53-ல்குறைவுபடும்.தானங் களாவது மேல்கண்ட ஒதுக்கப்பட்ட தானங்களில் கிடைக் குமா என்பவாகியவைகளைக் கவனித்தால், இந்திய சட்டசபையில் மெஜாரிட்டி கிடைக்குமென்று எண்ண இடமிருக்கிறதா என்று ஓட்டர்கள் கவனிக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம்.

இரண்டாவதாக,அடக்குமுறைச்சட்டங்களையொழித்து விடுகின்றோமென்று சொல்லுவதும், அர்த்தமற்ற வார்த் தையென்றுஎப்படிச்சொல்லுகின்றோமென்றால்,இன்று அடக்குமுறைச் சட்டங்களுக்கு நாட்டு மக்களிடத்தில் அதாவது காங்கிரஸ்காரர்களிடத்தில் வேலையேயில்லை. சிறப்பாக காங்கிரஸ்காரர்கள் பெரிதும் சத்தியாக்கிரகம் பயனளிக்கவில்லை. சட்ட மறுப்புத் தோற்றுவிட்டது என் கின்ற முடிவுக்கு வந்த பின்னும் காங்கிரஸும் காந்தியாரும் தேசம் இது சமயம் இந்த இரண்டுக்கும் தயாராயில்லை. ஆதலால் அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதென்று சொல்லி விட்டதற்குப் பிறகும், இனி எதற்காகச் சர்க்கார் அடக்குமுறைகளை தேச மக்கள் மீது பிரயோகிக்கப் போகிறார்களென்று இந்தக் காங்கிரஸ்காரர்களை சொல்லு கிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை. சத்தியாக்கிரகமும், சட்டமறுப்பும் செத்தவுடன் (தற்காலிகமாகச் செத்திருந்தாலும் சரி) அடக்கு முறையும் செத்துவிட்டது என்பதில் சந்தேகம் ஏன்?  அன்றியும் சர்க்கார், அதுவும் காங்கிரஸ்காரர் சட்ட மறுப்பைச் சத்தியாக்கிரகத்தை விட்டு விட்டுச் சர்க்காருக்கு நல்ல பிள்ளையாக நடக்க ஆசைப்பட்டு முன்பு உதறித் தள்ளிவிட்ட சட்டசபைக்கு மீண்டும் போய் ராஜபக்தி - ராஜவிசுவாசம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுகின்ற ஒழுக்க விசுவாசம் ஆகிய சத்தியங்கள் செய்து கொடுத்துவிட்டு சர்க்கார் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வணங்கி வரும் மக்கள் மீது அடக்குமுறைச் சட்டம் எதற்காகப் பிரவேசிக்கப் போகிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை.

ஆகையால் அடக்குமுறை சட்டங்களை ஒழிக்கப் போகின்றோமென்பது செத்த பாம்பை அடிக்கப் போகின் றோமென்று சொல்லுவது போலாகுமே யொழிய வேறில்லை.

ஒரு சமயம் காங்கிரஸ்காரர்களல்லாத மற்றவர்கள் மீது அடக்கு முறைகளை உபயோகிக்கிறார்களே, அதைக் காங்கிரஸ்காரர்கள் நிறுத்தக் கூடுமென்று சிலர் நினைக்கக் கூடாதாவென்று கேட்கக் கூடும்.

அதுவும்அர்த்தமற்றவார்த்தையேயாகும்.ஏனெனில்காங்கிரஸ்காரர்கள்தவிரமற்றவர்களின்மீது பிரயோகிக்கப்படும்சட்டங்களின்துஷ்பிரயோகங் களுக்கும்,அடக்குமுறைகளுக்கும்,கொடியசட்டப் பிரயோகங்களுக்கும், சட்டங்களின் துஷ்பிரயோகங் களுக்கும் காங்கிரஸ்காரர்கள் அனுகூலிகளாகவே இதுவரை இருந்து வருகிறார்கள். உதாரணமாகத் தோழர் காந்தியார் அவர்கள் தான் சொல்லும் காரியங்கள் தவிர வேறு எந்தக் காரியத்தை யார் சொன்னாலும், வேறு எந்தக்காரியத்துக்கு சத்தியாக்கிரகம் செய்தாலும், சட்ட மறுப்பு செய்தாலும் அவற்றை யெல்லாம் பெரும் பாலும், ஒரேஅடியாக பலாத்காரம் என்று சொல்லி வந் திருக்கிறார். இந்த மாதிரி பலாத்கார செய்கைகளின்மீது அடக்குமுறைகளைஉபயோகிப்பதில்காந்தியாரின்ஆதர வையும்,ஆமோதிப்பையும்வைத்துக்கொண்டே சர்க்கார் உபயோகித்து வருகிறார்களென்பது தொக்கி இருக்க வில்லையா?

சமதர்ம இயக்கங்கள் சட்ட விரோதமான இயக்கங் களாகப் பாவிக்கபடுமென்று ஒரு அடக்குமுறை உத்தர வைச் சமீபத்தில்தான் சர்க்கார் பிறப்பித்தார்கள். இதற்கு எந்த மகாத்மாவாவது, காங்கிரஸ்வாதியாவது தேசிய பத்திரி கையாவது மூச்சுகூட காட்டவில்லை.

சுயமரியாதை இயக்க ஸ்தாபனங்கள் சட்ட விரோதமான இயக்கமென்று சர்க்கார் தீர்மானிக்கப் போகின்றார்களென்பது வெளிப்படையான ரகசியம். அதன் பிரமுகர்களை ஒடுக்கி வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவென்பதும் எவரும் அறிந்த விஷயம். இவைகளைப் பற்றியெல்லாம் காங்கிரசுக்கு எவ்வளவு ஆசை அதாவது சீக்கிரம், சீக்கிரம் நடக்கவேண்டுமென்கின்ற ஆசை இருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

காங்கிரசுக்குள்ளிருக்கும் சமதர்மக் கொள்கையே பலாத்காரம் கொண்டதென்று சொல்லிவிட்ட பிறகு இனி அடக்குமுறையைக் காங்கிரஸ் எந்த முகத்தைக் கொண்டு ஆட்சேபிக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட யோக்கியதையில் சட்டசபைக்குப் போகப் பிரயத்தனப்படும் காங்கிரஸ்காரர்கள் எதிர் அபேட்சகர்கள் கற்பனையானதும், பொய்யானதும் திருத்தலானதுமான பழிகளை சுமத்தி பிரச்சாரம் செய்வது தங்களை சத்தியாக்கிரகிகளென்றும், சத்தியசீலர்களென்றும் சொல்லிக் கொள்ளும் யோக்கியர்களுக்குத் தகுதியானதா என்பதையும் இந்தத் தந்திரத்தின் பலனாகவே ஒரு சமயம் இவர்கள் ஜெயித்துவிட்டாலும் இவர்கள் சரியான ஜனப்பிரதி நிதிகள் ஆகிவிடுவார்களாவென்றும் கேட்கின்றோம்.

வெல்லிங்டன் துரைமகனார் காங்கிரசில் யோக்கி யர்களும்,நாணயவாதிகளும்,பொறுப்புள்ளவர்களும்மலிந்தில்லை, காலிகளும், கூலிகளும், நாணயமும், மானமரியாதையும் இல்லாத ஆட்களும்தான் மிகுந் திருக்கிறார்கள். ஆனதால், அந்த ஸ்தாபனங்களையோ, அந்த நபர்களையோ அவர் கள் வார்த்தைகளையோ மதிக்கக் கூடாது என்று இந்த ஆட்களை ஜனப் பிரதிநிதிகளென்றோ, நாணயமாய் நடந்து, சட்ட சபைக்கு வந்தவர்களென்றோ கருதக்கூடாது என்றும் சொன்னாரென்றோ சொல்லப்போகிறார் என்றோ சொல்லுவதானால் அதில் கடுகளவாவது தப்பு இருக்கக்கூடுமா என்று கேட்கிறோம். இந்த யோக்கியதையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், வெல்லிங்டன் பிரபு காங் கிரஸ்காரர்களை மதிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ராஜிக்கு இரண்டு கையையும் நீட்டிக்கொண்டு போயும்கூட அவர்கள் இலட்சியம் செய்யவில்லை, ஆகவே, வெல்லிங்டன் பிரபு வின் அகம்பாவம் எவ்வளவு என்று சொல்லியும் தேசியப் பத்திரிகையெல்லாம் இந்தப்படிக் கூப்பாடு போட்டால் இதில் உண்மையோ, நியாயமோ ஏதாவது இருக்கின்றதா, இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

சென்னையில் ஒரு காங்கிரஸ்காரர் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு திரிபவர், மேலே துணிகூட போடாமல் காந்தியார் போலவே வேஷம் போட்டுக்கொண்டு நடப்பவர், பொது மக்கள் பணத்தைக் காங்கிரஸ் பெயரால் மாதம் 100 கணக்காய் பெற்று வாழ்பவர், தோழர் சத்தியமூர்த்திக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கோவில்களை இடிக்க வேண்டுமென்று சொல்லுகின்ற ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டுப் போடுகிறீர்களா? என்று கேட்டாராம். இதில் இருக்கும் அயோக்கியத்தனத்திற்கு அளவு எவ்வளவு என்ற கேட்பதோடு இந்த ஆட்கள் யோக்கியதையே இப்படியிருந்தால் மற்றபடி எவ்வளவு சிறிய உதவிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் சாதாரண ஆட்களிடம் எந்தக் காரியத்தைத்தான் எதிர்பார்க்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

கோவில்களின் பேரால் பொறுக்கித் தின்று வயிறு வளர்க் கும் கூட்டங்கள் தங்களுடைய ஆதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மூட ஜனங்களை ஆயுதமாகக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கேவலமான காரியங்களைச் செய்யத் துணிகின்றார்கள் என்பதைக் காண இந்த ஒரு உதாரணம் போதாதாவென்று கேட்கின்றோம்.

தோழர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் பெரிய அழுக்கு மூட்டை (வைதிகர்) என்று சொல்லலாம். அவர் காலம், நேரம், சகுனம், சாமி உத்தரவு, சாஸ்திரம் ஆகியவை பார்க்காமல் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு நொடிக்கு 100 தரம் கடவுளைக் கூப்பிடுகிறார். இப்படிப்பட்டவர் விஷயத்தில் கோவிலை இடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுகின்றீர்களா? என்று கேட்ட ஆசாமிகள், வேறு எந்த விதமான கொலை பாதகச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

கோவிலை இடித்தால் இவர்கள் அப்பன் தேடிக் கட்டி வைத்த முதல் என்ன போய்விடுமென்பதும் நமக்கு விளங்கவில்லை. கோவில்களை இடித்த ரஷ்யா தேசம் - இந்த மாதிரிக் கோவில்களின் பேரால் வயிறு வளர்த்தக் கூட்டங்களின் கையில் மண் வெட்டியையும், கோடாரியையும் கொடுத்த ரஷ்யா தேசம் இன்று குபேர செல்வம் படைத்த நாடாக விளங்குகின்றதே ஒழிய பூகம்பத்தால் அழிந்துபோய் பூகம்பக் கஷ்ட நிவாரண வேலை செய்ய இந்த சோம்பேறிக் கூட்டங்களைக் கூப்பிட்டு அதன் பேரால் வயிறு வளர்க்க விடவில்லையென்று இடித்துக் காட்டுகிறோம். மற்றபடி இப்படிப்பட்ட கூட்டத்தின் பேரால் அதாவது காங்கிரஸின் பேரால் தேர்தலுக்கு நிற்கும் ஆட்களின் யோக்கியதையை யாராவது அறிய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுவோம். என்னவென்றால், இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவராவது ஒரு அபேட்சகரைப் பற்றியாவது வெளியில் எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்காமல் ஆசாமி எப்படியிருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவனிக்காமல் காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள், காங்கிரசுக்காக ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதே போதுமானதாகும். சோம்பேறிகள், கயவாளிகள், உடம்பில் பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு கையில் மஞ்சள் துணி சுத்தின செம்பை வைத்துக் கொண்டு திருப்பதி வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள், ஏழு மலையானுக்குத் தர்மம் செய்யுங்கள் என்று கேட்பதற்கும், ஆட்களைக் கவனிக்காதீர்கள். காங்கிரசுக்கு ஓட்டு செய் யுங்கள், காந்திக்கு ஓட்டு செய்யுங்கள் என்பதற்கும் என்ன வித்தியாசமென்று கேட்கின்றோம்.

ஆகவே ஓட்டர்களாகிய தோழர்களே! தேர்தல் புரட்டு களையும், வெட்கமற்ற- மானமற்ற - யோக்கியமற்ற - நாணயமற்ற பிரச்சாரங்களையும் கண்டும் கேட்டும் ஏமாற்றமடைந்து விடாமல், மனிதர்கள் அவர்கள் முன்பின் நடவடிக்கைகள், அவர்கள் நடந்து கொள்ளப் போகும் முறைகள் அவர்களது கொள்கைகள், வேலைத்திட்டங்கள், ஆகியவைகளைக் கவனித்து ஓட்டுச் செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

- ‘பகுத்தறிவு’ - தலையங்கம் - 21.10.1934


10.06.1934- புரட்சியிலிருந்து...

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத் தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.

இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திர வதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத் தானே கொல்லப்பட்டிருக்கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்?  யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனு கூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்கு மானால் நாம் தாடகையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டதுமல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பட்சி களையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொறுத்த மற்றதும் போக்கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.

இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர்களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சுமணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் விளங்கவில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அக்கதையில், மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விஜயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும், பெண் களை இழிவாய் நடத்திக் கொடுமைப்படுத்தின விஷயங் களிலும் சிறிதும் தயங்காத ராமலட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பது மல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள்.

அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சும ணர்கள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள்.  திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு

வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சதனாம்; ஒருவன் (விபிஷணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகிய வர்களின் யோக்கியதைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித் தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.

புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - புரட்சியிலிருந்து...

புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப் போட்டு வாயில் மண்ணை அடைத்து விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று போட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்து விடும் போல் இருக்கிறது. வேண்டுமானால் சில மந்திரங்களையும் சொல்லி விடலாம். இதில் நமக்கு இரண்டு வித லாபம் போலும்.

சொர்க்கம், நரகம் என்பவை சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன்.

பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப் படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன.

இப்படிப்பட்ட சொர்க்க நரகத்துக்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால் மனிதனின் மூர்க்க சுபாவமும் பழிவாங்குந் தன்மையும் சொர்க்க நரகம் என்னும் வார்த்தைகளால், கற்பனை களால் பிரதிபலிக்கின்றது என்பதேயாகும்.

மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - புரட்சியிலிருந்து

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப் பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டுமென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது. இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.

இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போ மானாலும் இன்று உலகில் புருஷனைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம்.

ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.

புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - பகுத்தறிவிலிருந்து..

நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவை களுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர்களின் கஷ்டத்தையும், அனு பவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப்பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள் 20 வயதுக்குட் பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண் டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா?  அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந் திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தைகளாகும். (ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதியான வார்த்தைகளாகும்.) ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இடமில்லை.

இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாண மென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர் களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.

ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன்றாருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக்காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.


 

14.7.1929- குடிஅரசிலிருந்து...
திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத்தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசையிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்ய மாக்கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்குப் போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமஸ்தானம் ராமராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே ஜாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் சாட்சாத் மகாவிஷ்ணுவினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படி யென்றால் திருவாங்கூர் ராஜ்யம் பத்ம நாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும், ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ மகாவிஷ்ணுவாகும்.

எனவே, மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய ராமராஜ்யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராம ராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசியம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும். அதோடு வெள் ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே-தேசிய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெருமை என்னவென்று பார்ப் போமானால் அதுமிக்க அதிசயிக்கத் தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர் ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்ன வென்றால், திருவாங்கூர் ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது என்ப தாகும்.

இரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட  பெருமையையுடையதாகும். அதாவது 1881ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களையுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16.5-லட்சம் கிறிஸ் துவர்களை உண்டாக்கியிருக்கின்றது. திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை கொண்டதாகும். இதில் 16.5 லட்சம் கிறிஸ்துவர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாப சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19.5 லட்சம் ஜனங் களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவே பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் பத்மநாபசாமி எழுந்தருளும் தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்) இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்ம நாப சாமியைக் கும்பிடு வதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர் களுடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் திருவாங்கூர் ராஜ்யமானது இப்போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசிய சமஸ்தானங்களை நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசிய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர்களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

மோட்சம், நரகம்
என்பன யாவை?
15.09.1929- குடிஅரசிலிருந்து...

சிறீரெங்கநாதபுரம் அ.வெ.சுப்பையா அவர்கள் மோட்சம், நரகங்களைப் பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விருப்புகின்றார் மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அனுபவிக்கின்றோம். இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நரகம் உளவாயின், அவைகளை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின் அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல் மிக்க அறிவிலாததாகும்.

கோவிலில் சமத்துவம் வந்தால்
மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்காது

27.10.1929- குடிஅரசிலிருந்து...

சகோதரர்களே! நமது தமிழ்நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்து பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆயின. ஆனால்  பம்பாய்க்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கி விட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வட நாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

நிற்க, சிலர் நம்மை உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்று கேட்கின்றார்கள். ஆனால் சகோத ரர்களே!  நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப் போலவேதான். அதாவது, கோயிலில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் கட வுளை மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும் அதனுள் இருக்கும் கல், செம்பு, காரை, மரம், படம் முதலிய சிலை உருவங்களும், பெரியோர்களால் செய்துவைத்த ஏற்பாடுகளாகும் என்றும் பாமர மக்களுக்கு இதைச் சொன்னால் புரியாதென்றும், அதையே கடவுள் வீடு என்றும், உள்ளிருப்பவைகளே கடவுள்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது என்பதாக தத்துவார்த்தம் சொல்லுகின்றார்கள். இந்த தத்து வார்த்தம் சொல்லுகின்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்றால் ஒன்று இவர்கள் கடவுளை மிகக் கேவலப் படுத்துபவர்களாயிருக்க வேண்டும்; அல்லது கடவுள் தன்மை இன்னது என்பதை அறியாத மூடர்களாயிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொது ஜனங்களை ஏமாற்றும் அயோக்கியர்களாயிருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஏனெனில், எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும். சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதனின் முயற்சி வேண்டுமென்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால். அவன் கடவுள் என்பதற்கு மேல்கண்ட எல்லாம் வல்ல சக்தியும் எங்கும் உள்ள சக்தியும் ஒப்புக் கொண்டவனாவானா என்று கேட்கின்றேன் . ஆதலால் ஒரு சமயம் கோயில்கள் மூடர்களால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் நமக்கு ஆட்சேபணை இல்லை. அப்படிக்கில்லாமல் கோயில்கள் அறிவாளிகளால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் கண்டிப்பாய் அந்த அறி வாளி என்பவர்கள் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தவர்களாகத் தானிருக்கவேண்டும். ஏனெனில், அந்தக் கோயில்கள் இப்போது அந்த பெரியோர்கள் என்பவர்களின் ஆசாரப்படி (ஆகமப்படி) நடந்து வருவதாகவே இருக்கின்றது. அந்த ஆகமங்கள் என்பவைகளே மனிதன் அந்தக் கோயிலுக்குள் போகவும் அங்குள்ள சாமியை வணங்கவும் பல நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கின்றது. அந்த நிபந்தனைகள் மனிதத் தன்மைக்கு சிறிதும் பொருத்த மில்லாததாயிருக்கின்றன.

அதில் ஒரு சிறிதும் ஒழுக்கத்திற்கும், பக்திக்கும் ஆதார மானதும் கடவுள் ஞாபகம் வருவதற்கு ஆதார மானதுமான காரியங்கள் இல்லவே இல்லை. அங்குள்ள கடவுள்களைப் பார்த்தால் கடவுள் ஞாபகம் வருமென்றால் அங்குள்ள தாசிகளைப் பார்த்தால் தாசிகள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன். மற்றும் அங்கு கடவுளை வணங்க வரும் மற்ற பெண்களைப் பார்த்தால் பெண்கள் ஞாபகம் வராதா, என்று கேட்கின்றேன். உணர்ச்சியற்ற குழவிக்கல்லை பார்த்த மாத்திரத்தில் கடவுள், ஞாபகம் வருவதானால், உயிருள்ள ஜீவன்கள், பெண்கள், தங்களை பிறர் பார்க்க வேண்டுமென்று அலங்கரித்துக் கொண்டுவந்து நின்றால், ஏன் அந்த ஞாபகம் வராது, அன்றியும் அங்கு கடவுளுக்கு நடக்கும் மற்ற காரியங்களையும் பார்த்தால் ஏன் பார்க்கின்ற மனிதனுக்கு மற்ற ஞாபகமும் வராது என்று கேட்கின்றேன். கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும் மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும் ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும். முன் காலத்தில் இருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும், அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காகப் பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். அவ்வித சூழ்ச்சியை ஒழிக்கவே நாம் எல்லோருக்கும் கோயில் பிரவேசம் கேட்கின்றோம். இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒரு விதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இந்த கோயில்கள்தான் சிறிதும் மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது. ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ மோட்சத்திற்காகவோ, பாவ மன்னிப்புக் காகவோ அல்லவே அல்ல! கோவில் சமத்துவமடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது.


நான் பதின்மூன்று வயதிலிருந்து தந்தை பெரியார் கொள்கையால் கவரப்பட்டு இந்த இயக் கத்தைப் பின்பற்றி வருகிறேன். பெல் நிறுவனத்தில் பணியில் சேரந்து திராவிடர் தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராகி 1992இல்  அதன் செயலா ளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் கொள்கை சார்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். பெல் நிர்வாகத்தில் பல கோரிக்கைகளை வைத்து அதற்காகப் போராடி வந்தோம். 1992இல் நிர்வாகத்திடம் பெல் நிறுவனம் வருவதற்குக் காரணமான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்தினை நிர்வாகக் கட்டடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு நெறிமுறை (றிஸிளிஜிளிசிளிலி) கிடையாது என்று கூறி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனைத் தமிழர் தலைவர் அவர்களிடம் தெரிவித்த போது நிர்வாகத்தினுடைய இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. அதனை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தாரகள். அந்த ஆரப்பாட்டத்தின் விளைவாக பெல் நிர்வாகம் நிறுவனத்தின் நிர்வாக வளாக கட்டடத்தில் பெருந் தலைவர் காமராசர் படம் இன்றுவரை கம்பீரமாக அலங்கரித்துக் கொண் டிருக்கிறது.

அடுத்து 2000 ஆவது ஆண்டில் ஒரு நிகழ்வு. பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிற் சங்கங்கள் எல்லாம் தொழிலாளர் தினமான மே நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மாத்திரம் மே நாளை என்பது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்நியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டது என்று அதனைக் கொண்டாடாமல் இருப்பதோடு விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கொண்டாடியது. அந்த விஸ்வ கர்மா ஜெயந்தி எது என்றால் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தான் என்று கூறி அந்த நாளில் இது பெரியார் பிறந்ததால் பெருமைக் குரிய நாள் அல்ல; விஸ்வகர்மா ஜெயந்தி என்ப தால்தான் பெருமைக்குரியது எனக் கூறி பெரியார் பிறந்தநாளின் சிறப்பைக் குலைக்க ஆரம்பித்தது. அத்துடன் தங்கள் சங்கத்துக்கும், ஆர்எஸ் எஸ்சுக்கும் - தங்கள் சங்கத்துக்கும், பிஜேபிக்கும் தொடர்பு இல்லை என்று கூறி தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது. இதனைத் தமிழர் தலைவர அவர்களிடம் எடுத்துக் கூறி மே நாளைக் கொண் டாட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவர்களும் அதில் வந்து கலந்து கொண்டாரகள்.

அந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ்., சங்க் பரிவார் இயக்கத் துக்கு எதிரான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து காவிக் கூட்டத்துக்கு எதிராக அனைவரையும் பேச வைத்தோம். இதனைத் தமிழர் தலைவர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி யதோடு நம் இயக்கத்தவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இது உதாரணமாகத் திகழ்கிறது என்று மே இரண்டாம் தேதி நடைபெற்ற சிதம்பரம் பொதுக்குழுவில் பாராட்டினார்கள். பொதுக் குழுவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கரவொலி எழுப்பி அதனைப் பாராட்டினார்கள். ஓட்டு மொத்த இயக்கத்தி னரையும் எங்களைப் பாராட்ட வைத்த தமிழர் தலைவர் என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதேபோல் 2002, 2003, 2004ஆம் ஆண்டு களில் திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற பொறியாளர் நியமனங்களில் தமிழர்கள் யாருமே நியமிக்கப்படாமல் முழுக்க பிற மாநிலத்தவர் களையே நியமித்து வந்தனர்.

அந்தப் பணி நியமனத்தை எதிர்த்து திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக துண்டறிக்கை வெளியிட் டோம். அந்தத் துண்டறிக்கையினையும், மூன்று ஆண்டுகளில் பணிநியமனம் பெற்றோர் பட்டி யலையும் தமிழர் தலைவர் அவர்களிடத்திலே அளித்தோம். அதனைப் பார்த்த தலைவர் அவர்கள் நாங்கள் வெளியிட்ட அதே துண்டறிக் கையினை தனது பெயரில் அறிக்கையாக  வெளியிட்டதோடு திருச்சி சிந்தாமணியிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும், பெல் நிறுவனத்தில் கண்டனக் கூட்டத்தினையும் நடத்தி எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள்.

அதன் பிறகுதான் தமிழர்கள் ஓரளவு இங்கு பணிநியமனம் பெற்று வருகிறாரகள். நான் வெளியிட்ட துண்டறிக்கையினை தனது பெயரிலேயே வெளியிட்டது எனக்கு மிகவும் பெருமைக்குரியதாக நான் கருதுகிறேன்.

அத்துடன் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப் போலோ மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்வேறு பணி களுக்கிடையிலும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தியது ஒரு தந்தை தனயனுக்குக்கு ஆறுதல் சொல்லி யதாகவே நான் கருதுகிறேன்.

தலைவர் என்ற இடத்திலிருந்து ஒரு தந்தை யாகவும் தமிழர் தலைவர் என் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதைப் பெருமையாகக் கருது கிறேன்.

15.6.1930- குடியரசிலிருந்து...

ஒரு மனிதனைப் பறையனாக விருக்க ஒரு மதம் சொன்னால் அந்தமதம் வேண்டுமா? ஒருவனுக்குச் சூத்திரப் பட்டம் கொடுக்கவும் ஒரு மதம் இருப்பின் அந்த மதம் வேண்டுமா? என்று கேட்டால் இந்தச் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். இப்படிப்பட்ட இந்து மதம் வேண்டாம் என்றே சுயமரியாதையுள்ள ஒவ்வொருவனும் சொல்லுவான். இப்போது ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் அவன் கண்டிப்பாக சூத்திரப்பட்டத் தை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.  அப்படிப் பட்ட மதம் எனக்கும் வேண்டாம், உங்களுக்கும் வேண்டாம். இந்த மாதிரியான இந்து மதத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்று சொல்லப்படுவதினால் அந்தக் கடவுளும் வேண்டாம்.

எனக்குக் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றி யோ, சாஸ்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. ஆனால் கெடுதியை நீக்கவும், கொடுமைகளைக் போக்கவும் முயற்சிக்கிற போது கடவுள்தான் ஜாதி களை ஏற்படுத்தினார்.

அதன்படி நடக்கத்தான் வேண்டுமென்றால் அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா? அதைப் புதைக்க வேண்டாமா? என்றே உங்களைக் கேட்கிறேன். இந்த நிலைமையிலேயே நாம் எல்லாவற் றையும் தாக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் எங்கட்கு அவற்றில் என்ன வேலை? எவன் அவற்றை வைத்துக் கொண்டுப் பிழைத்தால் என்ன? நம்மைத் தாழ்த்தி அமுக்கிக் கொடுமைப் படுத்த அந்த மதம், சாஸ்திரம், கடவுள் ஆகிய மூன்றையும் கொண்டு வந்தால் நான் ஏன் சம்மதிப்பேன்? இதனாலேயே நாம் எல்லோருக்கும் அதிலும் பார்ப்பாருக்கும் விரோதி களாய் போய் விட்டோம்.

இவற்றால் ஏமாற்றிக் கொண்டு வந்த கூட்டத் தாருக்கு விரோதிகளானோம். பிறப்பில் வித்தியாசம் பாராட்டக் கூடாது, ஒருவனை யொருவன் அடக்கி யாளக் கூடாது என்று சொல்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. யோக்கியமான மதமும், யோக் கியமான கடவுளுமாயிருந்தால் இதனா லெல்லாம் போய்விடாது. அப்படியே போய்விடக்கூடிய கடவு ளால் என்ன நஷ்டம் வந்து விடும்.

ஒரு கதை

ஒரு வேடுவனையும் ஒரு வேளாளனையும் பற்றி ஒரு கதை சொல்லு கிறேன். அதாவது ஒரு வேளாளன் ஒரு பிள்ளையாரைப் பக்தியாகப் பூசை செய்து கொண்டுவந்தான். ஒரு நாள் ஒரு வேடுவன் அந்தப் பிள்ளையாருக்கு நேராய்க் கால் நீட்டிப்படுத்துக் கொண்டிருந்தான்.

உடனே அந்தப் பிள்ளையார் வேடுவனை ஒன்றும் செய்ய முடியாமல் வேளாளனிடம் போய் அந்த வேடுவனைக் காலை எடுக்கச் சொல்லுகிறாயா அல்லது உன் கண்ணைக் குத்தட்டுமா என்றதாம். ஏன்! அந்தப் பிள்ளையார் கோபம் அந்த வேடனிடம் செல்லவில்லை? இதே மாதிரிதான் கடவுள்கள் எல்லாவிடத்தும் செய்வதாயிருக்கிறது.

ஒரு கூட்டத்தில் மனுமிருதி நெருப்பில் கொளுத் தப் பட்டது. ஏனெனில் அதில் நமக்குச் சகிக்கமுடியாத இழிவு கூறப்பட்டிருப்பதால் ஒரு சூத்திரனுடைய பணத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலா மென்றும், இதுதான் இந்துமத ஆதாரம் என்றும், இது கடவுள் சொன்னதென்றும் சொல்லப்படுவதை எண்ணி அந்த மனுமிருதி நெருப்பு வைக்கப்பட்டது.
அப்பொழுது தற்போதைய தேசபக்தர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார் உட்பட பலர் ஆட்சே பித்தார்கள். இதற்குச் சர்க்காரையும் உதவிக்குக் கூப்பிட் டார்கள். 

நீங்கள் சம்பாதித்து ஒரு கூட்டத்தாருக்குக் கொடுப்பதும், சூத்திரர் முதலியோர் படிக்கக் கூடாது; அவர்கட்குச் சுயேச்சைக் கொடுக்கக் கூடாது என்றால், அந்த மனுநூலைக் கொளுத்தி உங்களது இழிவைப் போக்கிக் கொள்வதா அல்லது அதை ஒப்புக் கொள்வதா? ஆகையாலேயே, இந்த இயக்கத்தை விடாதீர்கள் என்று சொல்லுகிறோம். 

இன்றைய நிலையில் சுயேச்சையும், சுயாதீனமும் பெறப் பாடுபடுவது என்னமாய் முடியும்? இந்தத் தடைகளைப் போக்குங்கள், மற்ற மற்ற தேசத்தார்கள் தங்கள் நாட்டுக் குற்றம் நீங்கிய பிறகே சுயேச்சை யடைய என்ன செய்தார்கள் என்பதையும், எப்படி யடைந்தார்களென்பதையும் நினை யுங்கள். 

நம் குற்றம் நீங்க வேண்டியதற்காக நாமும் அவர் களைப்போல செய்வதா? இல்லையா? அவர்களது வழியை விட்டு விட்டால் வேறு வழியில்லை. வெறும் வாய் வார்த்தையால் ஒன்றும் முடிந்துவிடாது.

பெரியோர் போன வழியில் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் நடக்காது.

Banner
Banner