Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உடல்நலமும், நோயும்... நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. தவறான உணவு களை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பைத் தாக்குகின்றன.

பழங்காலத்தில்  சூரியன் உதயமான பின்னர் ஒருமுறையும், சூரியன் மறைந்த பின்னர் ஒருமுறையும் உணவு உண்டனர். இடையில் குழம்பி, தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகளை அவர்கள் உண்ணவில்லை. பலகாரங்கள், பண்டங்களை ஏதாவது ஒரு விழாவின் போது சமைத்து உண்டார்கள். விழா நாட்களில் சாப்பிடும் எண் ணைப் பலகாரங்கள் ஜீரணிக்க...  லேகியம் சாப்பிட்டனர். நாம் உண்ணும் உணவு சரியாக செரிக்காவிட்டால் தான் பல நோய்கள் நமக்கு வருகின்றன.    நாம் உண்ணும் தவறான உணவு முறைகளால்தான் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்படுகின்றன. இதைத்தான் வள்ளுவர், உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் விளக்கமாக கூறியுள்ளார். மேலும் நாம் சாப்பிடும் உணவானது நமது மனச் செயல்பாட்டையும் நிர்ணயிக்கிறது.  இயற்கையில் நமக்கு இரண்டு நோய்கள் உண்டு. அது பசி, நீர்வேட்கை. இதில் பசியைத் தணிப்பதற்கு உண வானது மருந்தாகவும்,  தாகத்தைத் தணிக்கும் மருந்தாக தண்ணீரும் உள்ளன. பழங்காலத்தில் மனிதன் பலவிதமான உணவுகள், இறைச்சிகளையும் மற்றும் காய், கனிகளையும் சாப்பிட்டு வாழ்ந்தான் என்றாலும், அவனுடைய உடல் உழைப்பு அனைத்தையும் சமன் செய்தது.
இயற்கையைச் சார்ந்தே மனிதனுடைய உணவு அமைந் திருக்கிறது. உடம்பு உயிரைத் தாங்க வேண்டுமெனில் அதற்கு உணவு வேண்டும். இன்றைக்கு உணவு முறைகள் மாறிவிட்டன. நமது நாட்டில் ஒவ் வொரு இடத்திலும் ஒவ்வொரு வித மான உணவு வகை இருந்து வரு கிறது. வடக்கே கோதுமையை உண் கிறார்கள். சோறு மற்றும் காய்கறி களையும் சில இடங்களில் சாப்பிடு கின்றனர்.
மகாராஷ்டிராவில் கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு இவற்றால் செய்த ரொட்டி, அடை போன்றவை முக்கிய உணவு. கருநாடக மாநிலத் தில் நெல், சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, சாமை முதலியவற்றை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரிசியும், சோளமும் முக்கிய உணவு என்றாலும் நாம் அரிசியை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.சிறந்த உணவை சரியான வேளையில் சாப்பிட்டால் உடல் நலமும், உள்ள நலனும், நற்பண்புகளும் உண்டாகின்றன. எந்த நோயும் அணுகாது.

*  இனிப்புச் சுவை உடலுக்குப் பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோயாளிகளுக்கு நல்லது. உடலை பருக்கச் செய்யும்.

* புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். வெப்ப வீரியம் உடையது.
* உவர்ப்பு பசியைத் தூண்டும். வியர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.
* கசப்புச் சுவை கொழுப்பை வற்ற வைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் செரிமான மாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.
* காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை உலரச் செய்யும்.
* துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும். ஆனால் எளிதில் செரிக்காது. குருதியைத் தூய்மையாக்கும் சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்