Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெந்தயம் லேசான கசப்புச்சுவை உடையது. இதனை உணவில் சேர்ப்பதால் உணவுக்கு நறு மணத்தைத் தருவதோடு நல்ல ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. எலும்பை உறுதியாக்கும் பாஸ்பரஸ் தாது உப்புக்களும், தசையைப் பாதுகாக்கும் லெசிதின் பொருளும் முட்டையில் உள்ள சத்துக்களைப் போல் நுக்லியோ அல்புமினும் நிறைந்துள்ளது. குருதியழல், எலும்பு சம்பந்தப்பட்ட சுரம், உடல் எரிச்சல்,  நீர்வேட்கை, இளைப்பு, இருமல் இவையனைத்தையும் போக்கும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு. இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு ஊறவைத்து காலையில் அந்த நீரை வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். செரிமான சக்தி அதிகரிக்கும். உதடு வெடிப்பு, நீங்கும். பல் ஈறுகள் பலப்படும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்