
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப் பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கார்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி6- 6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும், வைட்டமின்களும் அடங்கி உள்ளதால் வாழைப்பழம் அற்புதமான உணவாகும்.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. நன்றாக தூங்கினால்தான் அடுத்த ஓட்டத்துக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள முடியும். ஆனால், பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 8 மணி நேர தூக்கம் என்பது பலராலும் இயலாத காரியம். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறோம். 24 மணி நேரமும் சம்பாதிக்க தயாராக இருக்கும் நாம் 8 மணி நேரம் தூக்கத்துக்கு ஒதுக்க ரொம்பவே கஷ்டப்படுகிறோம். இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், கண் எரிச்சல், சோர்வு... ஹார்ட் அட்டாக் கூட வருமாம். அதனால இனிமேல் 8 மணி நேரம் தூங்குவதை தவிர்க்காதீங்க. அதுக்காக இதோ சில டிப்ஸ்... குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அந்த நேரத்தில் கட்டாயம் தூங்க சென்று விட வேண்டும்.
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இது இரவு நேர தூக்கத்தைப் பாதிக்கும். எனவே, இரவில் மட்டுமே தூங்க வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் என்ற கணக்கில் ஒருவாரத்துக்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகவே உடற்பயிற்சியை முடித்துவிட வேண்டும்.
எந்த சத்தமும், ஒலியும் பெட்ரூமில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெரு விளக்கு வெளிச்சம் கூட வரக்கூடாது. அப்படியே வந்தால் கனமான ஸ்கிரீன் துணியால் ஜன்னல்களை மூடி வையுங்கள். பெட்டில் அமர்ந்தபடி வேலை பார்ப்பது, டிவி பார்ப்பதை தவிர்க்கவும். பெட்ரூமில் டிவி இல்லாமல் இருப்பதே நல்லது. தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாகவே இரவு உணவை முடிப்பது நல்லது. ஆனாலும், பசியோடு தூங்க செல்லக் கூடாது. இரவு தூங்குவதற்கு முன் பாலுடன் தேன் கலந்து குடித்தால் நல்லது.