Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூக்கம் என்பது ஒவ்வோர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது? அறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.. மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும் உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.

நாம் தூங்கத் தொடங்கிய 70 முதல் 90 நிமிடத்தில் ஏற்படுவது கண்ணசைவுத் தூக்கம், முதல் கட்டத்திலிருந்து நான்கு கட்டங்கள் வந்தபிறகு கண்ணசைவு தூக்கம் வருவதை ஒரு சுற்றுத் தூக்கம் சுழற்சி என்பார். தூங்குபவரின் வயதுக்கு ஏற்ப மாறும். பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும்.. கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர். ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது. வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிளால் சரியாகத் தூங்கவில்லை என அர்த்தம். தூக்கம் கெட்டு  வண்டி ஓட்டினால் நிச்சயம் விபத்துகள் நேரும்.

மூளையும் நரம்புகளும் சரியாக  வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை கவனக்குறைவு ஞாபக மறதி மன உளைச்சல் ஆகியன ஏற்படும். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும்.தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அளவு அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும். இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களால் சரியாக வைத்தியம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகள் எரியவிட்டால் இடையிடையே தூங்க அனுமதித்தால் அடிக்கடி ஷிப்ட் மாற்றினால் இக்குறைப்பாட்டை சரி செய்யலாம். 85 வகையான தூக்க நோய்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய் மன அழுத்தம் நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். பகல்  இரவு ஷிப்ட் மாற்றி வேலை செய்வதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல் மனக்குழப்பம், மன இறுக்கம் இதய பாதிப்பு கல்லீரல் குடல் நோய்கள் ஆகியன  ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கண் எரிச்சலா... கவலை வேண்டாம்

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும். கண்கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்