Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்சினை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும்.

சில சமயம் புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு. பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சினை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுவதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூரான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம்.  பல்லின் அடுத்த பிரச்சினை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தாடை எலும்பில் பாதிப்பு ஏற்படும்.  நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளைச் சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சினை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும். இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்