புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குழந்தைகள் அனைவருக்கும் மிகப்பிடித்த விளையாட்டுப் பொருள் பிளாஸ்டிக் பொம்மைகள்..அந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தை களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்...

குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை விளையாடும் போது நாள் தோறும் மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் வாயில் வைத்து சுவைப்பதால் புற்று நோய் ஏற்படக்கூடும் என்று கனடா அரசு ஆய்வு ஒன்று நடத்தியதில் தெரியவந்துள்ளது... முன் நாட்களில் குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட் களான மரப்பாச்சி பொம்மைகளும் காகித பொம்மைகளும், பனையோலை பொம் மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை....

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு திரும்பினாலும் சிறப்பு அங்காடிகளும் அங்கே பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விதவிதமான விளையாட்டு பொருட்களே இருக்கின்றன...  பிளாஸ்டிக் பொம்மைகள் நெகிழும் தன்மை கொண்டதற்கு காரணம் தாலேட்டு என்னும் இரசாயனப் பொருள்தான்.

குழந்தைகள் விளையாடும் போது மெதுவாய் வாயில் வைத்து  சுவைக் கின்றன.இவையே குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண செய்கிறது. இது விஷத்தன்மை கொண்டதாகும்..பொம்மை தயாரிக்கும் போது சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர்.இதில் கலக்கப்படும் காரீயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.இதன் விளைவாக குழந்தைகள் மனவளர்ச்சி குன்ற நேரிடும்.

இவை குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு நோய்களை உண்டு பண்கின்றன என ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner
Banner