எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எலும்புகளில் வெளிப்படையாக ஏற்படுகிற விரிசல்களைத் தாண்டி, நுண்ணிய விரிசல்களும் ஏற்படுவதுண்டு. இதனை ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் (Stress fracture) என்கிறோம். இது நம்முடைய அதீத உடற்பயிற்சியின் ஆர்வத்தாலேயே வரலாம் என்பது வினோதமான உண்மை. உடற் பயிற்சிகள் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை நாம் அறிவோம். விளையாட்டு, உடற்பயிற்சி என உடலுக்கு தினமும் ஏதேனும் வேலைகள் கொடுப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் என்பது உண்மைதான். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உடற்பயிற்சி விஷயத்திற்கும் பொருந்தும்.

ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை காட்டுவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கு மீறி உடலை வருத்திக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். அதாவது நீண்ட தூரம் ஓடுவது அளவுக்கதிகமாக குதிப்பது அளவுக்கதிகமான எடைகளை தூக்குவது போன்றவற்றால் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பிரச்சினை வரலாம். அது மட்டுமின்றி ஏற் கெனவே எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு (உதாரணத்துக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும்) இந்த பாதிப்பு வரலாம். புதிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஆர்வக்கோளாறில் அளவுக்கதிகமாக செய்தாலும் இந்தப் பிரச்சினை வரலாம்.

இந்த பிரச்சினையின் தீவிரம் குறையும் வரை எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்படாத வகையில் பிரத்யேக காலணிகள் மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கை முறையை மாற்றங்கள்

* மருத்துவர் சொல்லும்வரை வலியுள்ள பகுதிக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.

* வலி மற்றும் வீக்கமுள்ள பகுதியில் அய்ஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

* இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என மருத்துவர் சொன்ன பிறகு மிகமிக மெதுவாகவே உடல் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.

* எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்றாத உடற்பயிற்சிகளை மெதுவாக செய்ய.

 

மல்லியின் மருத்துவத் தன்மை

‘மல்லி என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. மல்லியினுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் கூட வீட்டில் யாருக்காவது ஜலதோஷம், சளி, இருமல் இருந்தால் மல்லி கலந்த தேநீர் தயாரித்து அருந்துகிறார்கள். மேலும் பால், டீ, காஃபி பயன்பாட்டுக்கு முன்பே கொத்தமல்லி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. சமையலைப் பொருத்தவரை மசாலாவுக்கு சேர்மான பொருளாக மட்டும் பயன்டுத்தும் பழக்கம்  இருக்கிறது. ஆனால், மல்லியைவை நாம் தனியாகவே பயன்படுத்தலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner